எல்லாரும் பஸ்-கால் டாக்சில போக பழகிக்கோங்க... போறபோக்க பாத்தா புது காரை யாராலும் வாங்க முடியாது போல!
பலரின் புதிய வாகன கனவை குழி தோண்டி புதைக்கும் வகையில் புது கார்களின் விலைகள் மிகக் கடுமையாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலை வரும் காலங்களில் அடித்தட்டு மக்களால் புதிய வாகனங்களை வாங்க முடியுமா? என்கிற சந்தேகத்தை நம்மிடையே எழுப்பி இருக்கின்றது. ஏற்கனவே எளிய மக்கள்களின் எட்டாக் கனியாக புதிய வாகனங்கள் இருக்கின்றன.
இந்த நிலையை மேலும் கடுமையானதாக மாற்றும் வகையிலேயே வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதிய வாகனங்களின் விலையை அவ்வப்போது உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஃபோக்ஸ்வேகன் வாகனங்களின் உயர்த்தப்பட இருக்கின்றன.

இரண்டு சதவீதம் வரையில் விலை உயர்த்தப்பட இருப்பது குறிப்பிடத்தகுந்தது. டைகுன், விர்சுஸ் மற்றும் டிகுவான் ஆகிய கார் மாடல்களின் விலையே ஏப்ரல் 1 முதல் உயர இருக்கின்றது. இந்த விலை உயர்விற்கான துள்ளியமான காரணம் வெளியிடப்படவில்லை. புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாக இந்த விலையுயர்வு செய்யப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.
இந்த காரணத்தை காட்டியே வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் புதிய கார்களின் விலையை உயர்த்தி வருகின்றனர். எனவே, ஃபோக்ஸ்வேகனின் விலை உயர்வு நடவடிக்கைக்கு பின்னால் பிஎஸ் 6 கட்டம் இரண்டே காரணமாக இருக்கும் என உறுதியாக நம்பப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் அதன் கார்களை இ20 எரிபொருளில் இயங்கும் வகையிலும், புதிய ஆர்டிஇ விதிகளுக்கு ஏற்பவும் அப்டேட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதவிர சில புதிய அம்சங்களை குறிப்பிட்ட சில தேர்வுகளில் ஃபோக்ஸ்வேகன் வழங்கி இருக்கின்றது. அந்தவைகயில், டைகுன் மாடலின் ஹைலைன் மற்றும் ஜிடி லைன் ஆகிய வேரியண்டுகளில் ஆட்டோ ஹெட்லேம்ப்புகள் மற்றும் ஃபாலோ மீ ஹோம் ஆகிய வசதிகள் புதிதாக சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆகையால், இதுவும் ஃபோக்ஸ்வேகன் கார்களின் விலை உயர இருப்பதற்கு ஓர் காரணமாக இருக்கின்றது. டைகுனின் இப்போதைய விலை ரூ. 11.56 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இந்த விலையிலேயே ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 37 ஆயிரம் வரை உயர இருக்கின்றது.
ஆகையால், விரைவில் இந்த கார் இன்னும் காஸ்ட்லியான எஸ்யூவி ஆக மாறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், விர்சுஸ் காரின் விலையிலும் ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 35 ஆயிரம் வரையில் உயர்த்தப்பட இருக்கின்றது. இப்போதைய இந்த காரின் ஆரம்ப விலை ரூ. 11.32 லட்சம் ஆகும்.
இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரிலும் டைகுனில் சேர்க்கப்பட்டு இருப்பதைப் போல கூடுதல் அம்சங்கள் சில சேர்க்கப்பட்டு இருக்கின்றன. ரியரில் புதிதாக ஃபாக் லைட் அனைத்து வேரியண்டுகளிலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. வாகனங்களின் விலை உயர இருப்பது இந்த ஆண்டில் இதுவே முதல் முறை என எண்ணிக் கொள்ள வேண்டாம்.
நடப்பாண்டின் ஜனவரி மாதத்திலும் இதுபோலவே வாகன உற்பத்தியாளர்கள் வாகனங்களின் விலையை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டன. வாகன கட்டுமான பொருட்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருவதைக் காட்டியும், தங்களுக்கு ஏற்படும் உற்பத்தி செலவு சுமையைக் குறைக்கும் பொருட்டு அப்போது விலை உயர்வு செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications








