இனிமே ஆபீஸ்ல பாஸ் கிட்ட ஈஸியா தப்பிக்க முடியாது! டிராஃபிக்ல கூட மீட்டிங் அரேஞ்ச் பண்ணீடுவாரு.. எப்படி தெரியுமா
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சிஸ்கோ சிஸ்டம் நிறுவனத்துடன் இணைந்து காரில் இருந்தே வீடியோ கான்பரன்ஸ் மீட்டிங்கில் கலந்து கொள்ளும் தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. விரைவில் இதை அதன் அனைத்து கார்களிலும் அறிமுகப்படுத்தப்போகிறது. இந்தத் தொழில்நுட்பம் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தங்கள் கார்களை அவ்வப்போது அப்டேட் செய்து கொண்டே இருக்கும். குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களை தங்கள் காரில் அறிமுகப்படுத்தும். இதற்காகச் சர்வதேச அளவில் ஒரு குழுவையே நியமித்து அதற்கான ஆய்வுகளையும் தொழில்நுட்ப உருவாக்கத்தையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பெரிய அளவில் செய்து வருகிறது.

கொரோனா காலத்திற்குப் பிறகு பெரும்பாலான தொழில்கள் வீடியோ கான்பரன்ஸ் முறையில் அதிகம் நடக்கிறது. தொழிலதிபர்கள் பலர் தங்கள் மீட்டிங்களை வீடியோ கான்பிரன்ஸ் மூலமே அதிகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கார்களில் செல்லும் தொழிலதிபர்கள் வீடியோ கான்பரன்ஸை கார்களிலேயே நடத்தச் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனமும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் துணை பிராண்ட் கார்களில் இன்ஸ்டால் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. பெரும்பாலான கார்பரேட் நிறுவனங்கள் வெப்எக்ஸ் தொழில்நுட்பத்தைத் தான் தங்களது வீடியோ கான்ஃபரன்ஸிற்காக தற்போது அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை தங்கள் கார்களில் அதன் உரிமையாளர்கள் செல்லும் போது பயன்படுத்திக் கொள்ளும்படி உருவாக்கி வருகிறது. இதனால் தொழிலதிபர்கள் கார்களில் செல்லும்போது தங்கள் அலுவலக மீட்டிங்களை காருக்குள் பயணித்த படியே நடத்த முடியும். காரை நிறுத்தவோ அல்லது செல்போன், லேப்டாப் போன்ற கருவிகள் மூலம் பயன்படுத்தவோ தேவையில்லை
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே அந்த காரில் உள்ள இன் கார் ஆப் ஸ்டோரில் இன்ஸ்டால் செய்கிறது. இந்த வசதி முதன் முறையாக ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு சொந்தமான ஆடி காரில் அறிமுகப்படுத்தப்படுகிறது. வோக்ஸ்வேகன் காரில் இதுபோன்று ஸ்பாட்டிஃபை, டிக் டாக், வெதர் சேனல் உள்ளிட்ட 40 ஆப்கள் உள்ளது தற்போது அதனுடன் சேர்த்து இதையும் இன்ஸ்டால் செய்யும் முயற்சி நடந்து வருகிறது.
பலருக்கு இந்த வசதியை கொண்டு வருவது பாதுகாப்பு குறைபாடாக நினைக்கலாம். ஆனால் இந்த வசதியில் கார் நிற்கும் போது மட்டுமே வீடியோ கால் செய்ய முடியும். கார் நகர்ந்து கொண்டிருந்தால் ஆட்டோமெட்டிக்காக வீடியோ கட் ஆகி ஆடியோ மட்டும் என்ற மோடிற்கு சென்று . இதனால் கார் ஓட்டிக் கொண்டிருந்தாலும் அவர் ஆடியோவில் வீடியோ கான்பரன்ஸ் நடத்தலாம் வீடியோ மட்டும் அவருக்கு கிடைக்காது.
இந்த தொழில்நுட்பம் வரும் ஜூலை மாதம் முதல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் உள்ள ஆடி கார்களுக்கு மட்டும் வழங்கப்படும் என தெரிகிறது. முக்கியமாக ஏ4, ஏ5 ரக ஆடி கார்களுக்கு மட்டும் இந்த வசதி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் மற்ற வாகனங்களுக்கும் இந்த வசதி படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வளர்ந்து வரும் தொழிற்நுட்ப உலகில் வாகனங்களில் பயணிக்கும் நேரத்தையும் பயனுள்ளதாக மாற்ற மக்கள் விரும்புகின்றனர். இதற்கு இந்த தொழிற்நுட்பம் உதவும் என நிச்சயம் நம்பலாம். ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தொழிற்நுட்ப வளர்ச்சியில் சிறப்பாக விளங்கும் அதில் இதுவும் ஒன்று தான்.


Click it and Unblock the Notifications








