சவுண்டு எடிசன் எனும் பெயரில் சிறப்பு பதிப்பு கார்கள் அறிமுகம்.. இதுதான் இதோட ஸ்பெஷலா! வேற ஏதோனு நினைச்சுட்டோம்
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) அதன் இரு புகழ்பெற்ற கார் மாடல்களில் சவுண்ட் எடிசன் (Sound Edition) எனும் சிறப்பு விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அந்த சிறப்பு பதிப்புகளின் விலை எவ்வளவு? மேலும், அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் சிறப்பு வசதிகள் என்ன? என்பது பற்றிய தகவலையே இந்த பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களாக டைகுன் (Taigun) மற்றும் விர்சுஸ் (Virtus) ஆகியவை இருக்கின்றன. இந்தியாவில் பிரீமியம் கார்களை விரும்புவோர் மத்தியில் இந்த கார் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாகவே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தற்போது இந்த இரு கார் மாடல்களிலும் சவுண்ட் எடிசன் (Sound Edition) எனும் சிறப்பு பதிப்பை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

டைகுன் நிறுவனத்தின் புகழ்பெற்ற எஸ்யூவியாகவும், விர்சுஸ் பிராண்டின் முன்னணி செடான் ரக கார் மாடலாகவும் காட்சியளிக்கின்றன. இந்த நிலையிலேயே வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு ஃபோக்ஸ்வேகன் இரண்டிலும் சிறப்பு பதிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. டைகுன் சவுண்ட் எடிசனின் விலை ரூ. 16.33 லட்சம் ஆகும்.
விர்சுஸ் சவுண்ட் எடிசனின் விலை ரூ. 15.52 லட்சம் ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இரண்டு சிறப்பு பதிப்பு என்பதால் வழக்கமான பதிப்புகளைக் காட்டிலும் சற்று அதிக சிறப்பு வசதிகள் மற்றும் அதிக கவர்ச்சி அம்சங்களையும் அது தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், இந்த சிறப்பு பதிப்புகளில் டிரைவர்களுக்கு பவர்டு இருக்கை வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, சவுண்ட் எடிசன் எனும் பேட்ஜ் காரின் பின் பக்க 'சி' பில்லர்களில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இதே பேட்ஜ் வெளிப் பக்க ரியர் வியூ மிர்ரர்களிலும் காணப்படுகின்றது.
இத்துடன், அதிக சிறப்பு திறன் கொண்ட சப் ஊஃபர் மற்றும் ஆம்பிளிஃபையர் போன்ற அம்சங்களும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இவை வழக்கமான ஒன்றைக் காட்டிலும் அதிக பிரீமியம் தர இசை அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் இந்த காரில் சிறப்பு எடிசன் திட்டத்தின்கீழ் ஃபோக்ஸ்வேகன் வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், பிரீமியம் அம்சங்களான எல்இடி ஹெட்லைட், 17 அங்குல அலாய் வீல்கள், லெதர் இருக்கைகள், ஆட்டோ டிம்மிங் வசதிக் கொண்ட ஐஆர்விஎம், மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி, வென்டிலேட் இருக்கைகள் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலே பார்த் அம்சங்களுடன் சேர்த்து டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 25.65 செமீ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டடவையும் இந்த சிறப்பு பதிப்புகளில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த திரை ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்டது.
மேலும் பாதுகாப்பு அம்சங்களாக இந்த கார்களில் பக்கவாட்டு ஏர் பேக், கர்டைன் ரக ஏர் பேக், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், மை ஃபோக்ஸ்வேகன் கன்னெக்ட், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் டிரைவர் இருக்கை, கூல்டு குளோவ் பாக்ஸ், ஒயர்லெஸ் சார்ஜர், ரியர் ஆர்ம் ரெஸ்ட் அம்சங்களும் இந்த சிறப்புகளில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எஞ்சினை பொருத்த வரை 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜட் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 115 பிஎஸ் மற்றும் 175 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டாருடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வழக்கமான வாகன மாடல்களைக் காட்டிலும் சிறப்பு பதிப்புகளுக்கு சற்று வரவேற்பு அதிகமே. இதனால்தான் வாகன உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு சிறப்பு பதிப்புகளை இந்தியாவில் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், இந்த போக்ஸ்வேகனின் சிறப்பு பதிப்புகளுக்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









