Volkswagen Taigun மாடலில் 2 அட்டகாசமான வேரியண்டுகள் விற்பனைக்கு அறிமுகம்! க்ரெட்டாக்கு பலத்த அடி காத்திருக்கு!
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், அதன் பிரபல கார் மாடல்களில் ஒன்றான டைகுனில், இரு புதிய வேரியண்டுகளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இத்துடன், இரு புதிய கான்செப்ட் மாடலையும் அது வெளியீடு செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் மாடல்களில் டைகுன் (Taigun)-ம் ஒன்று. இந்த மாடலிலேயே இரு புதிய வேரியண்டுகளை நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஜிடி பிளஸ் எம்டி மற்றும் ஜிடி டிஎஸ்ஜி ஆகியவையே அவை ஆகும்.

இந்த இரண்டும் வெவ்வேறு விதமான எஞ்ஜின் மற்றும் நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கேரளா மாநிலம் கொச்சினில் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே டைகுனின் அனைத்து புதிய மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த புதிய வேரியண்டுகளுடன் சேர்த்து இரு புதிய கான்செப்ட் மாடல்களும் வெளியீடு செய்யப்பட்டு உள்ளன. டைகுன் ஸ்போர்ட் மற்றும் டைகுன் டிரையல் ஆகியவையே வெளியீடு செய்யப்பட்டன. புதிய வேரியண்டுகளுக்கு அறிமுகத்தைத் தொடர்ந்து விரைவில் புக்கிங் பணிகள் தொடங்கப்பட உள்ளன. வரும் மே மாதத்தில் இந்த பணிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், அந்த மாதத்திலேயே அவற்றின் டெலிவரி பணிகளும் ஆரம்பிக்கப்பட உள்ளன. ஆனால், இப்போது வெளியீடு செய்யப்பட்டிருக்கும் கான்செப்ட் மாடல்களின் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்கிற விபரம் வெளியிடப்படவில்லை. அந்த தகவலும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் இரு வேரியண்டுகளுக்கும் இடையில் வித்தியாசத்தை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக, அணிகலன்கள் விஷயத்தில் மாறுபட்ட யுக்தியைக் ஃபேக்ஸ்வேகன் கையாண்டு இருக்கின்றது.
அதாவது, ஸ்டைலான அலாய் வீல்கள் மற்றும் புதிய நிற தேர்வுகளை அது வழங்கி இருக்கின்றது. அந்தவகையில் புதிய டைகுனின் ஜிடி எட்ஜ் வேரியண்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 17 அங்குல மணிலா அலாய் வீல்களை பயன்படுத்தி இருக்கின்றது. இத்துடன், டீப் பிளாக் பேர்ல் நிற தேர்வு வழங்கப்படுகின்றது.
மேலும், டைகுன் ஜிடி எட்ஜ் எனும் பேட்ஜையும் அந்த தேர்வில் வழங்கி இருக்கின்றது. இத்துடன் கூடுதல் சிறப்பு வசதிகளாக சிவப்பு நிற பிரேக் காலிபர்கள் முன் பக்க வீலில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஆம்பியன்ட் லைட் மற்றும் டிஜிட்டல் காக்பிட் வசதியும் டைகுன் ஜிடி எட்ஜ் தேர்வில் ஃபோக்ஸ்வேகன் வழங்கி இருக்கின்றது.
இதுபோலவே டைகுன் ஜிடி பிளஸ் எம்டி தேர்விலும் பற்பல சிறப்பு வசதிகளை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், மிக முக்கிய அம்சமாக இநத் காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரை வழங்கி இருக்கின்றது. இந்த மோட்டார் ஓர் 4 சிலிண்டர் எஞ்ஜின் ஆகும்.
இது அதிகபட்சமாக 147.5 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகின்றது. இத்தகைய சூப்பரான அம்சங்களுடனேயே ஃபோக்ஸ்வேகன் டைகுனின் இரு சூப்பரான வேரியண்டுகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டைகுன் இந்திய சந்தையில் ஸ்கோடா குஷாக், கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் எம்ஜி அஸ்டர் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது. இந்த போட்டியை இரட்டிப்பாக்கும் வகையிலேயே புதிய தேர்வுகளை ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








