ஃபோக்ஸ்வேகன் இந்த காரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதா? டாடா கிட்ட காப்பியடிச்சாங்கனு மட்டும் நினைக்காதீங்க
உலகின் கார் தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பில் களம் இறங்கிவிட்டனர். டூவீலர் முதல் கார்கள் வரை எலெக்ட்ரிக் வாகன சந்தை மெதுவாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மக்கள் பலர் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பல பெரும் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு களம் இறங்கிய நிலையில் தற்போது ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துவிட்டது. இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அனைத்து செக்மெண்டிலும் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கி வருகிறது.

இதில் முதன்முறையாக எண்ட்ரி லெவல் காராக ஐடி.2 என்ற காரை இந்நிறுவனம் முதல் எலெக்ட்ரிக் காராக களம் இறக்க முடிவு செய்துள்ளது. இந்த கார் ஆர்-பேட்ஜ் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆல் வீல் டிரைவ் காராக இருக்கும். 300 எச்பி பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கார் 2025ம் ஆண்டு இரண்டாம் பாதியில் அறிமுமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மார்கெட்டில் ஆர்பார்த் 500 இ காருக்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் மட்டுமல்ல இன்னும் ஏகப்பட்ட கார்கள் இந்த ஆர்-பேட்ஜில் உருவாக்கப்படுகிறது. 2030ம் ஆண்டு ஆர் பேட்ஜ் முழுவதும் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ரக்கட் கிராஸ் ஓவர் ஃபோக்ஸ்வேகன் ஐடி.2 கார் சமீபத்தில் நிறுத்தப்பட்ட ஐடி லைஃப் காருக்கு பதிலாக களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் டி-கிராஸ் மற்றும் டி-ரோக் என்ற இரண்டு கம்பஷன் இன்ஜின் வாகனங்களை ஐரோப்ப சந்தையில் இதே செக்மெண்டில் விற்பனையாகிறது. இது தவிர இந்த கார் குறித்த மற்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு 4ம் காலாண்டில் மொத்தம் 1.18 லட்சம் இவி வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது இந்நிறுவனத்தின் புதிய சாதனையுாகும். கடந்த 2022ம் ஆண்டு முழுவதும் மொத்தம் 3 லட்சம் இவிகளை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. முக்கியமாக ஐடி.4 மற்றும் ஐடி5 ஆகிய வாகனங்கனங்களள் மட்டும் 1.93 லட்சம்கார்களை தயாரித்துளு்ளது.
ஐடி3 ஹேட்ச்பேக் கார் அமெரிக்காவில் விற்பனையாகவில்லை. இது சீனாவில் மட்டும் 76,600 கார்கள் விற்பனையாகியுள்ளது. விரைவில் இந்த கார்களை
எல்லாம் இந்தியாவிற்கு இந்நிறுவனம் கொண்டு வரும் என எதிர்பார்க்கலாம். இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








