ஃபோக்ஸ்வேகனா? ஹூண்டாயா? இந்த தீபாவளிக்கு சரியான போட்டி இருக்கு!! எதை வாங்குவது பெஸ்ட்?

இந்த தீபாவளிக்கு பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றுள் இரண்டு தான், ஃபோக்ஸ்வேகன் டைகுன் டிரைல் எடிசன் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா அட்வென்ச்சர் எடிசன் ஆகும். இதில் டைகுன் டிரைல் எடிசன் மிக சமீபத்தில், சில தினங்களுக்கு முன்பு தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிரெட்டா அட்வென்ச்சர் எடிசன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அளவுள்ள எஸ்யூவி கார்கள் தான். ஆனால், தோற்றத்தில் இரண்டும் முற்றிலும் வேறுப்பட்டவைகளாக உள்ளன. மேலும், இவை இரண்டிற்கும் இடையே சில ஒற்றுமை, வேற்றுமைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

taigun gt trail vs creta adventure

முன்பக்கம்: டைகுன் டிரைல் எடிசனின் முன்பக்கத்தில் ஜிடி லோகோ உடன் கருப்பு நிறத்தில் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரின் முன்பக்கத்தில் பளபளக்கும் க்ரோம் ஸ்ட்ரிப்புகளையும் பார்க்க முடிகிறது. மறுப்பக்கம், கிரெட்டா அட்வென்ச்சர் காரில் முன்பக்க கிரில், ஸ்கிட் தட்டு மற்றும் ஹூண்டாய் லோகோ உள்ளிட்டவை கருப்பு நிற ஃபினிஷிங்கில் உள்ளன.

சைடு: டைகுனின் டிரைல் எடிசனில் உள்ள ஒரே மாற்றம் என்னவென்றால், இந்த காரில் 16-இன்ச் அலாய் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. 'ஜிடி' முத்திரைகள் காரின் முன்பக்க ஃபெண்டர்களிலும், பின்பக்க கதவுகள் & ஃபெண்டர்களில் டிகால்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கிரெட்டா அட்வென்ச்சர் காரின் பக்கவாட்டு பகுதியில் 17-இன்ச் அலாய் சக்கரங்கள் சிவப்பு நிற பிரேக் காலிபர்கள் உடனும், கருப்பு நிறத்தில் ORVM ஹௌசிங்கும் இடம்பெற்றுள்ளன.

taigun gt trail vs creta adventure

பின்பக்கம்: இந்த ஸ்பெஷல் எடிசன் கார்களின் பின்பகுதிகள் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தோற்றத்தில் உள்ளன. கிரெட்டா அட்வென்ச்சர் எடிசனில் பின்பக்க ஸ்கிட் பிளேட் மற்றும் பேட்ஜ்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளதால், இந்த காரின் பின்பக்கத்தில் அதிகளவில் கருப்பு நிறம் இருப்பதுபோல் தெரிகிறது.

உட்பக்கம்: டைகுன் டிரைல் எடிசனின் உட்பக்கம் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. காரை இயக்க வழங்கப்பட்டுள்ள வளையாத இரும்பினால் ஆன பெடல்கள் தனியாக பளிச்சென்று தெரிகின்றன. கிரெட்டா அட்வென்ச்சர் எடிசனின் கேபினும் கருப்பு நிறத்தில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவப்பு நிறத்திற்கு பதிலாக சேஜ் பச்சை நிறம் இந்த காருக்கு உள்ளே ஹைலைட்களாக கொடுக்கப்பட்டுள்ளது.

taigun gt trail vs creta adventure

என்ஜின் & விலை: டைகுன் டிரைல் எடிசன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே வாங்க முடியும். இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த காரின் விலையை ரூ.15.17 லட்சமாக ஃபோக்ஸ்வேகன் நிர்ணயித்துள்ளது. கிரட்டா அட்வென்ச்சர் காரை 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் வாங்கலாம். இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.17.89 லட்சம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தீபாவளிக்கு ஒரு புது காரை வாங்குவது ஓர் அருமையான முடிவாகும். குறிப்பாக இந்த தீபாவளியை மேற்கூறப்பட்ட ஸ்பெஷல் எடிசன் கார்கள் மூலமாக கொண்டாடுவது இன்னும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். எங்களை கேட்டால், இவை இரண்டில் கிரெட்டா அட்வென்ச்சர் காரை வாங்கலாம் என சொல்வோம். அதேநேரம், டர்போ என்ஜின் உடன் கார் வாங்க நினைப்பவர்களுக்கு டைகுன் டிரைல் சரியானதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, November 4, 2023, 22:44 [IST]
English summary
Volkswagen taigun gt trail vs hyundai creta adventure comparison between special editions
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X