Volkswagen Taigun காரை வாங்க பிளான் பண்றவங்களுக்கு ஓர் கெட்ட செய்தி - ஃபோக்ஸ்வேகனும் இப்படி செய்யுமா!!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் (Taigun) எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை அதிரடியாக அதிகரித்துள்ளது. இதன்படி டைகுன் காரின் விலைகள் எந்த அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன என்பதை பற்றியும், இந்த ஃபோக்ஸ்வேகன் காரை பற்றியும் முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான தேவை கடந்த சில வருடங்களில் பல மடங்கு அதிகரித்து உள்ளதை கூறியே ஆக வேண்டும். இதனை பயன்படுத்தி கொள்ளும் வகையில், பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் எஸ்யூவி கார்களை அடுத்தடுத்தாக அறிமுகம் செய்வதை பார்க்க முடிந்தது. அந்த வரிசையில் ஃபோக்ஸ்வேகன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியே கார், டைகுன் ஆகும்.

Volkswagen Taigun

ஸ்கோடா & ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய புதிய எம்க்யூபி பிளாட்ஃபாரத்தில் டைகுன் உருவாக்கப்பட்டது. இதே பிளாட்ஃபாரத்தில் ஸ்கோடா உருவாக்கிய கார், குஷாக் ஆகும். சரி விஷயத்திற்கு வருவோம், ஒவ்வொரு கார் நிறுவனமும் ஓர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது கார்களின் விலைகளை உயர்த்துவது வழக்கமான ஒன்றுதான். கார்கள் உற்பத்திக்கு ஆகும் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதை இதற்கு அவை காரணங்களாக சொல்கின்றன.

ஆனால் இந்த முறை, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமாக கார்களின் என்ஜினை அப்டேட் செய்ததையும் கார்களின் விலைகளை உயர்த்தியுள்ளதற்கு உடன் சேர்த்து காரணமாக கார் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த ஏப்ரல் மாதம் துவங்கியதில் இருந்து கார் நிறுவனங்கள் பல தங்களது கார்களின் விலைகளை அதிகரித்துள்ளன. அந்த வரிசையில் ஃபோக்ஸ்வேகனும் தனது டைகுன் எஸ்யூவி காரின் விலையை அதிகரித்துள்ளது.

Volkswagen Taigun

ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.45,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. ரூ.45,000 என்ற அதிகப்பட்ச விலை உயர்வை டைகுன் காரின் ஓராண்டு நிறைவு எடிசன் ஏற்றுள்ளது. மற்றப்படி, டைகுனின் விலை குறைவான, ஆரம்ப-நிலை வேரியண்ட்டான கம்ஃபர்ட் லைனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6,000 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. டைகுன் காரின் ஹைலைன் வேரியண்ட்டின் விலை ரூ.24,000 உயர்த்தப்பட்டுள்ளது.

ஜிடி மற்றும் ஜிடி பிளஸ் வேரியண்ட்கள் முறையே ரூ.30,000 மற்றும் ரூ.10,000 விலை உயர்வை சந்தித்துள்ளன. டைகுன் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, 3-சிலிண்டர் மற்றும் 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு, 4-சிலிண்டர் என இரு பெட்ரோல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. இவை இரண்டும் பிஎஸ்6 2ஆம் கட்ட கட்டுப்பாடுகள் மற்றும் லேட்டஸ்ட் ரியல்-டிரைவ்-எமிஷனுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளன. இதில் 1.0 லி டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 113 பிஎச்பி மற்றும் 178 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

Volkswagen Taigun rear

இந்த என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் (அ) 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் பெறலாம். மற்றொரு 1.5 லி டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 147.5 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கக்கூடியது. இந்த அளவில் பெரிய டர்போ என்ஜினை 7-ஸ்பீடு டிஎஸ்ஜி அல்லது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் பெறலாம். இந்த 1.5 லிட்டர் என்ஜின் அமைப்பில் டீ-ஆக்டிவேஷன் தொழிற்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

மற்ற பிரீமியம் தரத்திலான பொருட்களை போலவே கார்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தமும் கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படுகிறது. இருப்பினும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வாடிக்கையாளர்களை பெரியதாக பாதிக்காத வகையில் டைகுன் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை கணிசமாகவே அதிகரித்துள்ளது. இதனை முதல் மாதத்திற்கு சமாளிக்கும் வகையில் சில பல சலுகைகள் டைகுன் காருக்காக இந்த ஏப்ரல் மாதத்திற்கு அறிவிக்கப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 8, 2023, 15:23 [IST]
English summary
Volkswagen taigun price increased up to rs 45000
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X