பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனையை நிறுத்த போறாங்க! திடீர் முடிவால் அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது பெட்ரோல், டீசல் இன்ஜின் கார்களை எல்லாம் நிறுத்திவிட்டு இனி எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே தயாரிக்க முடிவு செய்துள்ளது. இது எங்கே என்பது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் மிக முக்கியமான கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. பல நாடுகளில் இந் நிறுவனம் ஆலைகளை அமைத்து கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. இந்நிறுவனத்திற்கு என்று மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் கார்களை விரும்பும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் நார்வேயிலும் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

volkswagen petrol diesel stop

1948 ஆம் ஆண்டு தான் இந்நிறுவனம் நார்வே நாட்டில் தனது ஆலையை அமைத்து விற்பனையை துவங்கியது. இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி இந்நிறுவனம் தனது 75வது ஆண்டு விழாவை நார்வேயில் துவங்கி கொண்டாடியது. இந்த 75 ஆண்டுகளில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நார்வே நாட்டில் மற்றும் மொத்தம் 11 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 1,20,000 ஆக இருக்கிறது.

அந்நாட்டில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முழுமையாக கட்டமைக்கப்பட்ட எலக்ட்ரிக் காரை இறக்குமதி செய்துதான் விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் நார்வே நாட்டில் உள்ள ஆலையிலேயே தயாரிக்கப்பட்ட முதல் எலக்ட்ரிக் கார் கடந்த 21 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. இந்நிலையில் நிறுவனம் நார்வே நாட்டில் இனி பெட்ரோல் டீசல் கார்களை நிறுத்திவிட்டு வெறும் எலெக்ட்ரிக் கார்களை மட்டும் தயாரிக்க போவதாக அறிவித்துள்ளது.

volkswagen petrol diesel stop

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை தன்னிடம் ஸ்டாக்கில் உள்ள கார்களை எல்லாம் விற்றுவிட்டு பின்னர் எலெக்ட்ரிக் கார்களை முழுமையாக விற்பனை செய்யும் முடிவில் இறங்கியுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விரைவில் நார்வே நாட்டில் ஐடி 7 எலெக்ட்ரிக் செட்டான் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

உலக அளவில் நார்வே நாட்டில் தான் அதிகமாக எலெக்ட்ரிக் கார்கள் பெரும் வரவேற்பு உள்ளாகி வருகின்றன. இதற்கு முக்கியமான காரணம் அந்நாட்டில் எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் ஏற்றும் மையங்கள் ஆங்காங்கே வந்துவிட்டது. அந்நாட்டில் விற்பனையாகும் 80% எலக்ட்ரிக் கார்கள் ஆகவே இருக்கின்றன. நார்வே நாட்டில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு 2025-ம் ஆண்டு முதல் தடை இருக்கிறது. முழுமையாக இவிக்கு மாறும் முதல் நாடாக இந்த நார்வே நாடு இருக்கிறது.

volkswagen petrol diesel stop

தற்போது அந்நாட்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் இவி கார் என்றால் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் ஒய் கார் தான். ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஏற்கனவே தனது ஐடி 4 கார் மூலம் நார்வே நாட்டில் தன் காலடித்தடத்தை பலமாக வைத்துள்ளது. இந்த கார் தான் இரண்டாவதாக அதிகமாக விற்பனையாகும் காராக இருக்கிறது. மேலும் இந்நிறுவனத்தின் ஐடி 3 கார் சிறப்பாக விற்பனையாகும் இவி காரில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நார்வை நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அதிகமான இவி கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் நோக்கம் 2030 ஆம் ஆண்டிற்குள் தனது இவி கார்கள் தான் அதிக அளவில் விற்பனையாக வேண்டும் என திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 5,31,500 இவி கார்களை சர்வதேச அளவில் விற்பனை செய்துள்ளது.

இந்நிறுவனத்திற்கு ஐரோப்பாவில் தான் அதிகமான மார்க்கெட் இருக்கிறது. அதைத் தொடர்ந்து அமெரிக்க சீனா ஆகிய நாடுகளிலும் இந்நிறுவனத்தின் கார்கள் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. ஃபோக்ஸ்வேகன் ஐடி 4 மற்றும் ஐடி 5 ஆகிய கார்கள் சிறப்பாக விற்பனையாகும் கார்களாக இருக்கிறது. அதே நேரம் ஐடி 3 காரும் நல்ல விற்பனையில் தான் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் டீசல் போன்ற வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன. இதை ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் மாசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குகிறது. என்பதால் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி உலக நாடுகள் நகர்கிறது. நார்வை போன்ற சிறிய நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகமாக இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் இந்தியாவில் இதுபோல டிரெண்ட் வர இன்னும் சில காலம் பிடிக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 27, 2023, 12:28 [IST]
English summary
Volkswagen to cease sales of petrol and diesel cars in norway from 2024 exclusively focusing on evs
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X