2025ல் டாடா நெக்ஸான் இவிக்கு காத்திருக்கும் மிகபெரிய ஆபத்து! ஃபோக்ஸ்வேகன் இந்த கார கம்மி விலைக்கு விற்கபோகுதா?
மிக மிக குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் தன்னுடைய முதல் மின்சார காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கான்செப்ட் மாடலாக வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரின் சிறப்புகள் என்ன, அதில் வழங்கப்பட்டு இருக்கும் முக்கிய அம்சங்கள் என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மக்களுக்கான எலெக்ட்ரிக் கார் (People's Electric Car) எனும் தலைப்பில் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) அதன் புதுமுக எலெக்ட்ரிக் கான்செப்ட் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. ஐடி. 2ஆல் (ID. 2all) எனும் கான்செப்ட் எலெக்ட்ரிக் காரையே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

வெகு விரைவில் இந்த எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகளை ஃபோக்ஸ்வேகன் தொடங்க இருக்கின்றது. இந்த நிலையிலேயே அக்காரை உலக அளவில் முதல் முறையாக வெளியீடு செய்திருக்கின்றது. இந்த வாகனத்தை மிக மிக குறைவான விலையில் ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், என்ன விலையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்கிற அதிகாரப்பூர்வ விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும், விற்பனைக்கு வரும்போது போலோ (Polo) அல்லது கோல்ஃப் (Golf) எனும் பெயரிலேயே இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இப்போது வரை இந்த காரின் பெயரை நிறுவனம் உறுதி செய்யவில்லை.

அதேவேளையில், ஐடி. (ID.) எனும் பேட்ஜ் இந்த காரில் கட்டாயம் இடம் பெறும் என கூறப்படுகின்றது. இந்த பேட்ஜ் உடனேயே கோல்ஃப் அல்லது போலோ எனும் பெயர் பேட்ஜ் இணைக்கப்பட்டு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த வாகனம் முதலில் ஐரோப்பிய சந்தையிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
2025 ஆம் ஆண்டிற்குள் அங்கு விற்பனைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 26,000க்கும் அதிகமான யூரோக்களுக்கு விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என அந்நாட்டு வல்லுநர்களால் யூகிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த விலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இதற்கு முன்னதாக கடந்த 2021 செப்டம்பரில் ஐடி. லைஃப் (ID. Life) எனும் ஓர் புதுமுக கான்செப்ட் மாடலை வெளியீடு செய்திருந்தது.

இந்த காரில் இருந்து பலமடங்கு மாறுபட்ட ஒன்றாகவே புதிய ஐடி. 2ஆல் எலெக்ட்ரிக் கார் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு இப்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் படங்களே சான்றாக உள்ளன. காரின் உட்பக்கம் மற்றும் வெளிப்பக்கம் என அனைத்தும் புதுமையான வடிவமைப்பைப் பெற்றிருக்கின்றது.
இதற்காக பல்வேறு வேலைகளை இந்த காரில் ஃபோக்ஸ்வேகன் செய்திருக்கின்றது. குறிப்பாக கேபினில் பல புதுமையான வசதிகளை நிறுவனம் சேர்த்து இருக்கின்றது. இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் எந்த காரிலும் பயன்படுத்தாத யுக்தியை பயன்படுத்தியே இந்த காரை ஃபோக்ஸ்வேகன் தயார் செய்திருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக ஐடி. 2ஆல்-இன் சென்டர் கன்சோல் இருக்கின்றது.

இதனை பிரிட்ஜ் டைப்பில் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இத்துடன் சேர்த்து, இரண்டு செவ்வக வடிவ திரையை அது வழங்கி இருக்கின்றது. 10.9 அங்குல டிஜிட்டல் காக்பிட் மற்றும் 12.9 அங்குல சென்டர் தொடு திரை சிஸ்டமே ஐடி. 2ஆல் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, இந்த திரைக்கு கீழ் பகுதியில் ஒளிரும் பொத்தான்கள் கொண்ட ஏர் கன்டிஷனிங் பேனல், ஸ்மார்ட் ஃபோன்களுக்கான சார்ஜ் செய்வதற்கான போர்ட் என எக்கசக்க அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, பெரிய பனோரமிக் சன்ரூஃப், மசாஜ் செய்யும் அம்சத்துடன் கூடிய பவர் சீட் மற்றும் பன்முக கன்ட்ரோல் பட்டன்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவையும் ஐடி. 2ஆல் கான்செப்ட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் கார் ரேஞ்ஜ் திறனிலும் மிக சிறந்ததாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஓர் முழு சார்ஜில் 450 கிலோ மீட்டர் ரேஞ்ஜை அது தரும். மேலும், வெறும் 20 நிமிஷங்களிலேயே 10-80 சதவீத சார்ஜை எட்டும் திறன் கொண்ட காராகவும் இது இருக்கின்றது.
தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் கெத்துக் காட்டிக் கொண்டிருக்கும் டாடா நெக்ஸானைவிட அதிக சிறப்புகள் கொண்ட வாகனம் ஐடி. 2ஆல் என்பது இந்த தகவல்களின் வாயிலாக தெரிய வருகின்றது. ஆகையால், இந்த வாகனம் இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா நெக்ஸான் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என்பதும் தெளிவாக தெரிகின்றது.


Click it and Unblock the Notifications









