ஷோரூம விட்டு சில அடிகூட நகரல.. பள்ளத்தில் கவிழ்ந்த புத்தம் புதிய கார்! கார டெலிவரி எடுக்கும்போது கவனம் தேவை!
புதிய கார் ஒன்று டெலிவரி எடுத்த அடுத்த சில விநாடிகளிலேயே விபத்தில் சிக்கியிருக்கும் சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. விபத்துகள் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அரங்கேறலாம் என்பதற்கு சான்றாக இந்த சம்பவம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றது.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியிலேயே இந்த விநோத விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. டெலிவரி எடுக்கப்பட்ட கார், ஷோரூமை விட்டு சில அடிகள்கூட நகராத நிலையில் அது விபத்தைச் சந்தித்திருக்கின்றது. ஓட்டுநரின் கவனக்குறைவினாலேயே இந்த விபத்து அரங்கேறி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

உற்சாக மிகுதி
கடந்த காலங்களில் ஷோரூம் ஊழியர்களின் கவனக்குறைவால் இதுமாதிரியான விபத்து சம்பவங்கள் நாட்டில் பல அரங்கேறி இருக்கின்றன. ஆனால், இந்த சம்பவத்திற்கு முழு காரணமும் அக்காரின் உரிமையாளரே என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய காரை டெலிவரி எடுத்த உற்சாக மிகுதியில் இந்த விபத்து சம்பவத்தை அவர் அரங்கேற்றி இருக்கின்றார்.
காரின் மூக்கு பகுதி காலி
புத்தம் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் காரே விபத்தை சந்தித்த வாகனம் ஆகும். சுமார் 7 அடி முதல் 8 அடி வரை உயரம் இருக்கும் பள்ளத்தில் கார் விழுந்து விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. இந்த விபத்தில் காரின் மூக்கு பகுதி பெருத்த சேதத்தைச் சந்தித்து இருக்கின்றது. இந்த விபத்திற்கு உற்சாக மிகுதி மட்டுமே காரணம் அல்ல, போதிய அளவு டிரைவிங் பயிற்சி அவருக்கு இல்லாததும் ஓர் காரணம் என கூறப்படுகின்றது.

தகுதியே இல்லாதவங்ககூட ஓட்டுநர் உரிமம் வச்சிருக்காங்க
நம் நாட்டில் ஓட்டுநர் உரிமம் எடுப்பது அவ்வளவு கடினமான செயல் அல்ல என்பது கவனிக்கத்தகுந்தது. ஒரு சில ஆர்டிஓ-க்களில் சில ஆயிரங்களை நீட்டினாலே போதும், லேசான டெஸ்ட்டுகளை அடுத்து டிரைவிங் லைசன்ஸ் தயாராகிவிடும். சில ஆர்டிஓ-க்களில் அதுகூட தேவை இல்லை என்பது மாதிரியான சூழலே நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே சில தகுதியற்றவர்களாலும் எளிதில் டிரைவிங் லைசென்ஸை பெற்று விட முடிகின்றது. இந்த நிலையும் நாட்டில் விபத்துகள் அதிகரித்துக் காணப்படுவதற்கு ஓர் காரணமாக இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஷோரூம் டெலிவரி விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. போதுமான அளவு கற்றல் (ஓட்டுநர் பயிற்சி) இல்லாததன் விளைவாக புதிய காரை கன்ட்ரோல் செய்ய முடியாமல் இவ்வாறு அதனை சேதப்படுத்தி விடுகின்றனர்.

இது ஒரு காஸ்ட்லியான கார்
விபத்தைச் சந்தித்திருக்கும் ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் கார் சற்று காஸ்ட்லியான செடான் ரக காராகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் கார் மாடல்களில் விர்சுஸ் ஒன்றாகவும் இருக்கின்றது. இந்த காரில் பிரீமியம் வசதிகளை மிக தாராளமாக ஃபோக்ஸ்வேகன் வாரி வழங்கி இருக்கின்றது. சொகுசு அம்சங்களை அதிகம் விரும்புபவர்களை கவரும் விதமாகவே இக்காரை பிரீமியம் வாகனமாக ஃபோக்ஸ்வேகன் உருவாக்கி இருக்கின்றது.
ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி கொண்ட 10 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் (தொடு திரை வசதிக் கொண்டது), காற்றோட்டத்தை வழங்கக் கூடிய வெண்டிலேட்டட் இருக்கைகள், எலெக்ட்ரானிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட எக்கசக்க சிறப்பு வசதிகள் விர்சுஸில் வழங்கப்பட்டு உள்ளன.

Source: Rushlane
பாதுகாப்பு வசதிகள் மிக தாராளம்
இதுதவிர பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள், மும்முனை ஆங்கர் சீட் பெல்டுகள், பார்க்கிங்கிற்கான பின் பக்க கேமிரா, எலெக்ட்ரானிக் கன்ட்ரோல், மல்டி கொல்லிசன் பிரேக்குகள், டயர் பிரஷ்ஷர் டிஃப்ளேசன் வார்னிங் மற்றும் ஹில் ஹோல்டு கன்ட்ரோல் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் ரூ.11.22 லட்சம் தொடங்கி ரூ.17.92 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காரையே ஆந்திராவைச் சேர்ந்த ஓர் நபர் டெலிவரி எடுக்கும்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்க வைத்திருக்கின்றார். சுலபமாக சரி செய்துகொள்ளக் கூடிய வகையிலேயே கார் சேதமடைந்திருக்கின்றது. முன் பக்க பம்பர், கிரில், லைட், பான்னெட் மற்றும் பக்கவாட்டு ஃபென்டர் உள்ளிட்டவையே விபத்தினால் சேதமுற்றிருக்கின்றன.


Click it and Unblock the Notifications









