Volkswagen Virtus GT Plus MT மற்றும் GT Edge இப்படி ஒரு வேரியன்ட்களை எதிர்பார்க்கவேயில்ல!
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இன்று கொச்சியில் தனது விர்டுஸ் காரின் புதிய வேரியன்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஜிடி பிளஸ் எம்டி மற்றும் விர்டுஸ் ஜடி எட்ஜ் ஆகிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப் பற்றி விரிவாகக் காணலாம் வாருங்கள்.
ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் ஜிடி பிளஸ் எம்டி காரை பொருத்தவரை மேனுவல் கியர் வேரியன்ட்களில் டாப் வேரியன்ட் காராக அறிமுகமாகியுள்ளது. இதுவே ஜிடி எட்ஜ் காரை பொருத்தவரை டிஎஸ்ஜி கியர் பாக்ஸ் வேரியன்ட்டில் அதிக ஸ்டைலிங் அம்சங்கள் கொண்ட காராக அறிமகுமாகியுள்ளது.

இதில் ஜிடி பிளஸ் மேனுவல் கியர் வேரியன்டை பொருத்தவரை இது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ட்வின் கிளட்ச் கியர் பாக்ஸ்க்கு பதிலாக 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதே முன்பக்க வீல் டிரைவ் தான் இந்த காரிலும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஃபோக்ஸ்வேகன் ஜிடி ப்ளஸ் எம்டி வேரியன்டை பொருத்தவரை 1.5 லிட்டர் டர்போ சார்ஜ்டு 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 147.5 பிஎச்பி பலரையும், 250என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

இந்த காரில் 16 இன்ச் கருப்பு நிற அலாய் வீல்,மற்றும் 205/55 R16 டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது போக மற்ற டிசைன் அம்சமாக ரெட் பிரேக் கேலிபர்கள் மற்றும் ஜிடி முன்பக்க கிரில் ஆகிய இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கார் டூயல் டோன் பெயிண்ட் ஸ்கீமில் வழங்கப்பட்டுள்ளது. கார்பன் ஸ்டீல் க்ரே ரூஃப் மற்றும் விர்டுஸ் டீப் பிளாக் ஆகியன முக்கியமான அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விர்டுஸ் ஜிடி பிளஸ் எம்டி வேரியன்டை பொருத்தவரை 2 டெக்கர் தீம்களில் வழங்கப்பட்டுள்ளது. ரேவ் கிளாஸி மற்றும் டார்க் ரெட் கிளாஸி ஆகிய நிறங்களில் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோக இந்த காரின் உட்புறத்தில் 10.1 டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மற்றும் 8 இன்ச் டிஜிட்டல் டிரைவர் காக்பிட், வென்டிலேட்டட் சீட்கள், எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகியன வழங்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஃபோக்ஸ்வேகன் இதே விர்டுஸ் காரில் அறிமுகப்படுத்திய வேரியன்ட் ஜிடி எட்ஜ், இது ஜிடி பிளஸ் ஆட்டோமெட்டிக் வேரியன்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த காரில் லாவா ப்ளூபெயிண்ட் அம்சம் முக்கியமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த காரில் ஜிடி பேட்ஜ் முன்பக்கம், பின்பக்கம் மற்றும் முன்பக்க ஃபெண்டர்களில் வழங்கப்பட்டுள்ளது. இது போக ரெட் பிரேக் கேலிபர், 16 இன்ச் ரேஸர் அலாய் வீல்கள், அலுமினியம் பெடல்கள், ரெட் கான்ட்ராஸ்ட் தையல் கொண்ட லெதரேட் அப்ஹோல்சரி சீட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வேரியன்டும் தனித்தனி விருப்பம் கொண்ட வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஎஸ்ஜி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட காரை விரும்புபவர்கள் கொஞ்சம் ஸ்டைலிங் அம்சத்தை விரும்பினால் அவர்களுக்காக ஜிடிஎட்ஜ் வேரியன்டும், அதிக கண்ட்ரோலை விரும்புபவர்களுக்கு ஜிடி பிளஸ் வேனுவல் வேரியன்டும் நிச்சயம் உதவும்.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதை தற்போது பொதுமக்களின் காட்சிக்காகவே வெளியிட்டுள்ளது. இதன் விலை விபரங்களை வெளியிடவில்லை. இந்த வேரியன்ட்டிற்கான புக்கிங் வரும் மே மாத மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேரியன்ட் ஜூன் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் சமீபகாலமாக செடான் கார்களை விரும்பும் மக்களை அதிகம் ஈர்த்து வருகிறது. இந்த காரை வாங்குபவர்களுக்கு இந்த 2 புதிய வேரியன்ட் ஒரு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதிகமான ஆப்ஷன்களை வழங்கி தனக்கென செடான் மார்கெட்டில் ஒரு இடத்தை பிடிக்க ஃபோக்ஸ்வேகன் முயற்சி செய்கிறது.


Click it and Unblock the Notifications









