வால்வோவின் எலக்ட்ரிக் கார்!! ஓட்டி பார்த்ததில் மிரண்டு போயிட்டோம் - முழு தமிழ் ரிவியூ வீடியோ

வால்வோ (Volvo) நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் காராக சி40 ரீசார்ஜை வருகிற செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜின் அடிப்படையில் புதிய சி40 ரீசார்ஜ், கூபே ஸ்டைலிலான எஸ்யூவி ரக காராக உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், புதிய வால்வோ சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை இயக்கி பார்க்கும் வாய்ப்பு நமது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்தது. அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை முழு விமர்சனமாக வழங்கியுள்ளோம். அதனை நமது செய்தித் தளத்தில் காணலாம். அதேநேரம், டெஸ்ட் டிரைவ் செய்த போது காட்சிப்படுத்தப்பட்ட வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளோம். அதனை கீழே காணலாம்.

இந்தியாவில் வால்வோவின் 2வது எலக்ட்ரிக் காராக விற்பனைக்கு கொண்டுவரப்படும் சி40 ரீசார்ஜ் கார் ஆனது வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரின் ஸ்போர்டியர் வெர்சனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இரு எலக்ட்ரிக் கார்களும் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. ஆனால் புதிய சி40 ரீசார்ஜ் கூடுதல் ஸ்போர்டியர் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்போர்டியர் ஹைலைட்கள் காரின் வெளிப்பக்கம் மட்டுமின்றி, உட்பக்கத்திலும் பல்வேறு இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

volvo c40 recharge review video

வால்வோ சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரில் 78kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதன் மூலம் அதிகப்பட்சமாக 530கிமீ தொலைவிற்கு காரை இயக்கி செல்லலாம் என வால்வோ தெரிவித்துள்ளது. சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காருடன் 11 கிலோவாட்ஸ் சார்ஜர் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் பேட்டரியை முழுமையாக சார்ஜ் நிரப்ப 6-7 மணிநேரங்கள் வரையில் தேவைப்படும். அதுவே, 150 கிலோவாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரின் மூலம் 10-80% சார்ஜை வெறும் 27 நிமிடங்களில் நிரப்பிவிடலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 26, 2023, 12:34 [IST]
English summary
Volvo c40 recharge electric car review video
மேலும்... #வால்வோ #volvo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+