ஒரு டைம் சார்ஜ் பண்ணா சென்னைல இருந்து மதுரை போயிரலாம்! விலையை சொன்ன உடனேயே கைல தூக்கி குடுக்க போறாங்க!

ஸ்வீடனை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று வால்வோ (Volvo). விலை உயர்ந்த கார்களை மட்டுமே விற்பனை செய்தாலும் கூட, இந்தியாவிலும் வால்வோ நிறுவனத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த கார்களில் ஒன்று வால்வோ சி40 ரீசார்ஜ் (Volvo C40 Recharge).

இது இந்திய சந்தையில் வால்வோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள 2வது எலெக்ட்ரிக் கார் ஆகும். முன்னதாக வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (XC40 Recharge) என்ற எலெக்ட்ரிக் காரை அந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து கொண்டுள்ளது. வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரின் விலை (Price) எவ்வளவு? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Volvo C40 Recharge

வரும் ஆகஸ்ட் மாதம்தான் இந்த எலெக்ட்ரிக் காரின் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படவுள்ளது. ஆனால் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரை விட, சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் சற்று விலை உயர்ந்ததாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார், 56.90 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதைக்காட்டிலும் சற்று அதிகமான விலையில், சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். இதற்கிடையே வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகள் வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளன.

Volvo C40 Recharge

வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார், CMA பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரில், 78kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 530 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான ரேஞ்ச் (Range) ஆக இருக்கும்.

150kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 27 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். அதே நேரத்தில் வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரின் பவர் அவுட்புட் 405 பிஹெச்பி பவர் மற்றும் 660 என்எம் டார்க் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசதிகளை பொறுத்தவரையில், வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரில், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல், அடாஸ், பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ஏர் ப்யூரிஃபையர் உள்பட பல்வேறு அம்சங்கள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்த பிரம்மாண்டமான வரவேற்பை தொடர்ந்துதான், சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரை வால்வோ நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியுள்ளது. சரியான விலை நிர்ணயம் செய்யப்பட்டால், வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரும் நல்ல வரவேற்பை பெறும் என்பது எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, June 15, 2023, 23:46 [IST]
English summary
Volvo c40 recharge important things you need to know
மேலும்... #வால்வோ #volvo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+