ரெண்டாவது எலெக்ட்ரிக் காரை களமிறக்க தயாரான பிரபல நிறுவனம்! நாளைக்கு மொத்த ரகசியத்தையும் சொல்ல போறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள வால்வோ சி40 ரீசார்ஜ் (Volvo C40 Recharge) கார், நாளை (ஜூன் 14) அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது இந்திய சந்தையில் வால்வோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 2வது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

முன்னதாக எக்ஸ்சி40 ரீசார்ஜ் (XC40 Recharge) என்ற எலெக்ட்ரிக் காரை, வால்வோ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. வால்வோ நிறுவனம் வரும் 2030ம் ஆண்டிற்குள், முற்றிலும் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்யும் நிறுவனமாக மாற திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

Volvo C40 Recharge

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டுள்ள அதே சிஎம்ஏ பிளாட்பார்ம் (CMA Platform) அடிப்படையில்தான், வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரில், 78kWh பேட்டரி (Battery) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆல் வீல் டிரைவ் (AWD) சிஸ்டம் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் (Range) 370 முதல் 420 கிலோ மீட்டர்களாக இருக்கலாம். அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், இவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியும். அதே நேரத்தில் வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரில் ஏராளமான வசதிகளும் (Features) வழங்கப்படவுள்ளன.

Volvo C40 Recharge

இதில், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஹார்மன்-கார்டன் 13 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம், 12 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவை மிக முக்கியமான வசதிகளாக இருக்கலாம். இதுதவிர அடாஸ் (ADAS) தொழில்நுட்ப வசதி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

மேலும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல், முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், ஏர் ப்யூரிஃபையர், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும், வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

இந்திய சந்தையில் வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) 60 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த எலெக்ட்ரிக் காரை பற்றிய பல்வேறு முக்கியமான கேள்விகளுக்கான பதில், நாளை நமக்கு கிடைத்து விடும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வால்வோ நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எலெக்ட்ரிக் காரான வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடலுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதே பாணியில், வால்வோ சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரும் நல்ல வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 13, 2023, 23:48 [IST]
English summary
Volvo c40 recharge india debut tomorrow expected price range features
மேலும்... #வால்வோ #volvo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+