இந்த காரை இப்பவே வாங்க முடியாது... இதுல இது வேறயா... வெளியான அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி!
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த உலக புகழ் பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று வால்வோ (Volvo). இந்தியாவிலும் வால்வோ நிறுவனம் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளது. இந்திய சந்தையில் வால்வோ நிறுவனம் தற்போதைய நிலையில் மொத்தம் 5 கார்களை விற்பனை செய்து வருகிறது.
வால்வோ சி40 ரீசார்ஜ் (Volvo C40 Recharge), வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (Volvo XC40 Recharge), வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90), வால்வோ எக்ஸ்சி60 (Volvo XC60) மற்றும் வால்வோ எஸ்90 (Volvo S90) ஆகியவைதான், அந்த 5 கார்கள் ஆகும்.

இந்த அனைத்து கார்களின் விலையும் உயர்த்தப்படவுள்ளதாக வால்வோ நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதன்படி வால்வோ கார்களின் விலை 2 சதவீதம் வரை உயரவுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால்தான் விலையை உயர்த்தவுள்ளதாக வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்தியாவில் தற்போது விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நிறுவனம் வால்வோ கிடையாது. ஆம், இந்தியாவில் கார் வணிகத்தில் ஈடுபட்டுள்ள கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே வரும் ஜனவரி 1ம் தேதியில் தங்கள் வாகனங்களின் விலைகளை உயர்த்தவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளன.

மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), ஹோண்டா (Honda), டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra), ஃபோக்ஸ்வேகன் (Volkswagen), ஸ்கோடா (Skoda), பிஎம்டபிள்யூ (BMW), ஆடி (Audi), ஜீப் (Jeep) மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற பல்வேறு நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்தவுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: புத்தாண்டில் கார்களின் விலை உயர்த்தப்படுவது வழக்கமான ஒரு விஷயம்தான். இதன்படிதான் வரும் புத்தாண்டிலும் கார்களின் விலை உயரவுள்ளது. எனவே வரும் ஜனவரி 1ம் தேதியில் இருந்து இந்தியாவில் புதிய கார்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள், கூடுதல் தொகையை செலவு செய்ய தயாராகி கொள்வது நல்லது.
ஆனால் இந்த விலை உயர்வால், கார்களின் விற்பனை குறையுமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் கார்களின் விலை என்பது தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதனால் கார்களின் விற்பனை குறைவதெல்லாம் இல்லை. தொடர்ச்சியாக கார் உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையில் சாதனை படைத்து கொண்டேதான் உள்ளன.
எனவே இந்த விலை உயர்வால், கார்களின் விற்பனை குறையாது என்றே நாங்கள் கருதுகிறோம். கார்களை போல், இரு சக்கர வாகனங்களின் விலையும் வரும் புத்தாண்டில் இருந்து உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளுக்கு நாம் சற்று காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








