வால்வோ கார்களை மிடில்-கிளாஸ் மக்கள் நெனைச்சு கூட பார்க்க முடியாது போல!! விலைகளை மீண்டும் உயர்த்திட்டாங்க!
வால்வோ (Volvo) நிறுவனம் இந்தியாவில் அதன் குறிப்பிட்ட சில கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தி உள்ளது. உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த விலை உயர்வின்படி, வால்வோ கார்களை இனி எந்த விலைகளில் வாங்க முடியும் என்பதையும், விலை உயர்த்தப்பட்டு உள்ள வால்வோ கார்களை பற்றியும் இனி விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஸ்வீடனை சேர்ந்த கார் நிறுவனமான வால்வோ இந்தியாவில் சொகுசு கார்கள் விற்பனையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில், வால்வோ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் அதன் எக்ஸ்.சி60, எக்ஸ்.சி90 மற்றும் எஸ்90 கார்களின் விலைகளை கணிசமாக உயர்த்தி உள்ளது.

இதன்படி, வால்வோ எக்ஸ்சி60, எக்ஸ்சி90 மற்றும் எஸ்90 கார்களின் விலைகள் தலா ரூ.35,000 அதிகரிக்கப்பட்டு உள்ளது. வால்வோ எக்ஸ்சி60 காரை பொறுத்தவரையில், இந்தியாவில் இந்த கார் பி5 அல்டிமேட் என்ற வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதன் புதிய எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.67.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வால்வோவின் ஹைப்ரீட் எஸ்யூவி காரான எக்ஸ்சி60 -இல் 2.0 லிட்டர், 4-சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 246 எச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறன் வரையில் வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. முக்கிய தொழிற்நுட்ப அம்சங்களாக இந்த காரில் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வழங்கப்படுகிறது.

வால்வோ எக்ஸ்சி90 ஆனது மேலே பார்த்த எக்ஸ்சி60 காரின் நீண்ட வீல்பேஸ் வெர்சனாக விளங்குகிறது. மேலும் எக்ஸ்சி60 காரை போல், பி6 அல்டிமேட் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.98.85 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவும் வால்வோவின் ஹைப்ரீட் கார் தான்.
இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் (296 எச்பி & 420 என்எம் டார்க் திறன்) உடன் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. மேலும், என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. எக்ஸ்சி90 காரில் அட்வான்ஸான காற்று சுத்திகரிப்பான், கூகுள் சர்வீஸ் உடன் செங்குத்தான வடிவில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

வால்வோ எஸ்90 காரின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.68.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எஸ்90 காரும் வால்வோவின் ஹைப்ரீட் கார் தான். ஆனால் மேற்கூறப்பட்ட இரண்டை போல் இது எஸ்யூவி ரக கார் கிடையாது. லக்சரியான செடான் ரக கார் ஆகும். எஸ்90 காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை 48 வோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் உடன் வால்வோ நிறுவனம் வழங்குகிறது.
இவை இரண்டும் சேர்ந்து அதிகப்பட்சமாக 292 எச்பி மற்றும் 430 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை காருக்கு வழங்குகின்றன. இந்த காரில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. அத்துடன், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், 19-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 360-கோண கேமரா, ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, அட்வான்ஸ்டு ஏர் க்ளீனர் உள்ளிட்டவையும் வால்வோ எஸ்90 செடான் காரில் வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு ஆட்டோமொபைல் நிறுவனமாக இருந்தாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் வாகனங்களின் விலைகளை உயர்த்தித்தான் ஆக வேண்டும். ஏனெனில், வாகனங்களை உற்பத்தி செய்வதற்கான பாகங்களின் விலைகளும், அவற்றை உற்பத்தி செய்வதற்கான மற்ற செலவுகளும், போக்குவரத்து செலவுகளும் தொடர்ந்து மெல்ல மெல்ல உயர்ந்து வருகின்றன. ஆதலால், வாகனங்களின் விற்பனையை பாதிக்காத வண்ணம் அவற்றின் விலைகளை உயர்த்துவது தான் இதில் முக்கியம்.


Click it and Unblock the Notifications









