பஸ்ல சொகுசான இருக்கை சேர்த்த மாதிரி இருக்கு இந்த காரு! ரெண்டு குடும்பம் ஜாலியா குத்தாட்டம் போட்டுட்டே போகலாம்!
உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான வால்வோ (Volvo) சூப்பரான கார் மாடல் ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. இதனை கார் என்பதற்கு பதிலாக சொகுசு கப்பல், அரண்மனை, நட்சத்திர ஹோட்டல் என இப்படி எந்த பெயர் வைத்து வேண்டுமானாலும் அழைக்கலாம்.
அந்த அளவிற்கு ஆடம்பர அம்சங்களை அதிகளவில் தாங்கிய வாகனத்தையே வால்வோ தற்போது இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. வால்வோ இஎம்90 (Volvo EM90) எனும் சொகுசு வகை எம்பிவ ரக காரையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் வாகனம் ஆகும்.

ஒட்டுமொத்தமாக ஆறு பேர் வரை அமர்ந்து பயணிக்கின்ற வகையில் இந்த வாகனத்தை வால்வோ வடிவமைத்து இருக்கின்றது. ஆமாங்க, ஆறு இருக்கைகள் கொண்ட எம்பிவி ரக காராக மாட்டுமே முதலில் இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதற்கு பின்னர் இன்னும் இருக்கைகள் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இப்போது எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேவேளையில், இந்த கார் இருக்கும் பிரமாண்ட தோற்றத்திற்கு இன்னும் பல இருக்கைகள் சேர்த்து விற்பனைக்கு வழங்கலாம். ஆனால், சொகுசான ரைடை விரும்புவோரை கவரும் நோக்கில் ஆறு இருக்கைகள் தேர்வைக் கொண்ட எம்பிவியாகவே இஎம்90 விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

ஆகையால், பெரிய மினி பஸ்ஸில் ஆறு பேர் மட்டுமே பயணிக்கின்ற அனுபவத்தை இந்த வாகனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது மின்சார கார் என்பதால் மாறுபட்ட க்ரில் மற்றும் பம்பர் ஆகியவற்றை வால்வோ இந்த காரில் சேர்த்து இருக்கின்றது. குறிப்பாக, இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கும் லைட்டுகள் முற்றிலும் வித்தியாசமான தோற்றம் கொண்டவையாக இருக்கின்றது.
'டி'-யை படுக்கப் போட்டதுபோன்ற அமைப்பிலேயே அந்த லைட் இருக்கின்றது. மேலும், இந்த லைட்டிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக சிறிய கட்டங்களைப் போன்ற ஸ்டைல் அதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இதன் பெட்டி போன்ற லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் காரை தழுவியதைப் போல் இருக்கின்றது.

ஆனால், மாறுபட்ட அலங்கார பொருட்களினால் இந்த காரின் வெளிப்புற லுக்கை வால்வோ மாற்றி இருக்கின்றது. மேலும், சுலபமாக பயணிகள் ஏறி-இறங்க ஏதுவாக ஸ்லைடிங் வகை கதவுகள், பின் பக்கத்தில் ஒளிரக் கூடிய வால்வோ எனும் பேட்ஜ், குரோம் அக்செண்ட் ஆகியவை இந்த காரில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
வெளிப்புறத்தைப் போலவே இந்த காரின் உட்பக்கமும் மிகுந்த கவர்ச்சி மற்றும் அதிக ஆடம்பர அம்சங்களைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. ஆகையால், ஆறு பேருமே மிகுந்த லக்சூரியான ரைடை வால்வோ இஎம்90-யில் பெற்றுக் கொள்ள முடியும். காரில் வழங்கப்பட்டு இருக்கும் அனைத்து இருக்கைகளையும் சாயும் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

ஆகையால், நன்றாக சாய்ந்துக் கொண்டு மிக சிறப்பாக தூங்கிக் கொண்டுகூட செல்லலாம். இதுதவிர, இந்த இருக்கை மசாஜ், ஹீட் மற்றும் வென்டிலேட் ஆகிய வசதிகளைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது. இத்துடன், இந்த காரின் அனைத்து இருக்கைகளிலும் டேபிள்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதனை பயணிகள் தங்களின் கேட்ஜெட்ஸ் வைக்க அல்லது கைகளுக்கு ஓய்வுக் கொடுக்க பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும், மிக மிக தாராளமான இட வசதியை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் நண்பர்களாக பயணிக்கும்போது சூப்பராக என்ஜாய் செய்த வண்ணம் பயணிக்க முடியும். மேலும், மூன்று பேர்களை மட்டுமே கொண்ட குடும்பமாக இருப்பின் இரண்டு குடும்பங்கள் வரை ஹாயாக சொகுசான ரைடை இந்த காரில் அனுபவித்துக் கொள்ள முடியும்.

இந்த காரில் பயணம் செய்யும் போது என்ஜாய் செய்யும் விதமாக பனோரமிக் சன்ரூஃப், 15.6 அங்குல டில்ட் அட்ஜெஸ்டபிள் வசதிக் கொண்ட திரை, இத்துடன், டிரைவர் மற்றும் இன்ஃபோடெயின்மென்டிற்கான 15.4 அங்குல திரை ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்துடன், மிக சிறந்த மியூசிக் சிஸ்டத்திற்காக இந்த காரில் போவர்ஸ் மற்றும் வில்கின்ஸின் 21 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்பீக்கர் சிஸ்டம் வாயிலாக மினி பார்ட்டியையே காரில் கொண்டாடிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், இந்த காரில் ஓர் முழுமையான சார்ஜிலேயே நீண்ட தூரம் பயணித்துக் கொள்ள முடியுமாம்.
இப்போது கிடைத்திருக்கும் தகவல்கள் வால்வோ இஎம்90 ஓர் முழு சார்ஜில் 738 கிமீ வரை பயணிக்கும் என கூறப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, அதிக வேகத்தில் ஓடக் கூடிய எலெக்ட்ரிக் காராகவும் இதனை வால்வோ தயார் செய்திருக்கின்றது. வெறும் 8.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து இந்த கார் 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.
மேலும், இந்த காரில் உள்ள பேட்டரிகளை அதி விரைவில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜை ஏற்ற வெறும் 30 நிமிடங்களே போதுமானதாக இருக்கின்றது. இவ்வளவு சூப்பரான எலெக்ட்ரிக் காரையே வால்வோ தற்போது வெளியீடு செய்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுமா? இந்தியாவில் எம்பிவி வகை கார்களுக்கு நல்ல வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக டொயோட்டா வெல்ஃபையர் இருக்கின்றது. இது ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட ஐசிஇ வாகனமாகும். செல்வந்தர்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் மத்தியில் இந்த காருக்கு வரவேற்பு மிக அமோகம். ஆனால், இந்த கார் இந்தியா வருமா என்பதற்கான பதில் கிடைக்கவில்லை. ஆகையால், இப்போதைக்கு இந்த கார் விற்பனைக்கு வருவது சந்தேகமே.


Click it and Unblock the Notifications









