தேதி குறிச்சாச்சு! இன்னும் 14 நாள்ல வால்வோ பெரிய சம்பவத்திற்கு பிளான் பண்ணிட்டாங்க!

வால்வோ நிறுவனம் தனது சி40 ரீசார்ஜ் இ வி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் தேதியை உறுதிப்படுத்தியுள்ளது இது வால்வோ நிறுவனத்தின் இந்தியாவில் விற்பனை செய்யும் இரண்டாவது இவி காராகும். ஏற்கனவே வால்வோம் எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற காரை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது சி40 ரீசார்ஜ் என்ற இவி காரையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது இது குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

வால்வோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது முதல் எலக்ட்ரிக் காராக எக்ஸிசி 40 ரீசார்ஜ் என்ற காரை அறிமுகப்படுத்தி இருந்தது. அதன்பின்பு அடுத்த எலக்ட்ரிகாராக தற்போது சர்வதேச மார்க்கெட்டில் இந்நிறுவனம் விற்பனை செய்து வரும் சி40 ரீசார்ஜ் என்ற காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.

volvo c40 recharge

இந்த சி40 ரீசார்ஜ் கார் சிஎம்ஏ ப்ளாட்பார்மை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட காராகும் இந்த பிளாட்பார்மை வால்வோ மற்றும் கீலி ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கியுள்ளது இந்த சி40 ரீசார்ஜ் காரில் சிங்கிள் மோட்டார் ரியர் வீல் டிரைவ் மற்றும் டூயல் மோட்டார் ஆல் வீல் டிரைவ் என இரண்டு வெர்ஷன்களாக சர்வதேச சந்தையில் விற்பனையாகி வருகிறது.

இதில் எந்த வெர்ஷனை இந்தியா மார்க்கெட்டில் வால்வோ நிறுவனம் அறிமுகப்படுத்தப் போகிறது என்ற விபரம் வெளியாகவில்லை. இந்த காரில் 78 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 75 கிலோவாட் ஹவர் பேட்டரியை பயன்படுத்த முடியும். அதன் மூலம் இந்த கார் ஒரே சார்ஜில் 371 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

volvo c40 recharge

இந்த வால்வோ சி40 ரீசார்ஜ் காரின் லூக்கை பொறுத்தவரை வால்வோ நிறுவனத்தின் சிக்னேச்சர் ஸ்டைலின் உடன் ஸ்லீப் மட்டும் மாடலான லுக்கை பெற்றுள்ளது. இதன் முன் பக்கம் குளோஸ்டு பேனலாக கன்வென்ஷனல் ரேடியேட்டர் கிரில் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஹெட்லைட் தார் ஹேமர் வடிவிலான எல்இடி லைட் ஆகவும் டெய்ல் லைட் சிலிகான செங்குத்தான வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் கேபின் ரீசைக்கிள் செய்யப்பட்ட மெட்டீரியல்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த காரின் உள்ளே பல அட்வான்ஸ் தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன கேபினில் ஆம்பியன்ஸ் லைட்டிங், ஹை குவாலிட்டி லெதர் சீட் மற்றும் ரீசைக்கிள் பாலிஸ்டர் ஆகியவற்றை கொண்டு காரின் சீட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன

சவுண்ட் சிஸ்டத்தை பொருத்தவரை பிரீமியம் சவுண்ட் சிஸ்டமாக ஹார்மோன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரை வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி வால்வோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த காரை வாங்க வால்வோ ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதன் விலை குறித்தவிபரம் அன்று தான் வெளியாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வால்வோ காருக்கென பிரத்தியேக ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த காரின் வருகை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வால்வோ நிறுவனம் இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுருப்பது இந்தியாவில்தனக்கென ஒரு இடத்தை பிடிக்க இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 31, 2023, 21:00 [IST]
English summary
Volvo plans to launch c40 recharge ev on june 14th
மேலும்... #வால்வோ #volvo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+