சென்னை-கொடைக்கானல் ஒரே சார்ஜ்ல நிக்காம போகலாம்! வால்வோ சி40 ரீசார்ஜ் கார் பத்தி தெரியுமா?
வால்வோ நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் காராக சி40 ரீசார்ஜ் என்ற காரை இன்று காட்சிப்படுத்தியுள்ளது. ஏற்கனவே முதல் காராக எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்ற காரை அறிமுகப்படுத்திய நிலையில் இரண்டாவது காராக இந்த சி40 ரீசார்ஜ் கார் காட்சிப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
சுவீடன் நிறுவனமான வால்வோ நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே கம்பஷன் இன்ஜின் கார்களை இந்தியாவில் விற்பனை செய்து வரும் நிலையில் இதற்கான வரவேற்பு சிறப்பாக இருக்கிறது. எலெக்ட்ரிக் கார்களை தற்போது களமிறக்க முடிவு செய்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம் இந்நிறுவனம் வால்வோ எக்ஸ்சி40 என்ற எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் வால்வோ நிறுவனத்தில் முதல் எலெக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமாகிக் கிட்டத்தட்ட ஓராண்டாகும் நிலையில் தற்போது தனது இரண்டாவது காராக சி40 ரீசார்ஜ் காரை இந்தியாவில் இன்று காட்சிப்படுத்தியுள்ளது..
இந்த சி40 ரீசார்ஜ் கார் காம்பேக்ட் மாடுலர் ஆர்க்கிடெக்சர் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டது. இதே பிளாட்பார்மில் தான் இந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரும் உருவாக்கப்பட்டது. எப்படி ஒரே பிளாட்ஃபார்மை இதை இரு கார்களும் பகிர்ந்து கொண்டதோ அதேபோல இதன் டிசைனும் இரு கார்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது.

சி40 ரீசார்ஜ் காரின் உட்புறத்தில் 9 இன்ச் இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், 13 ஸ்பீக்கர் ஹார்மோன் கார்டன் மியூசிக் சிஸ்டம், பானரோமிக் சன்ஃரூப் சிஸ்டம், வயர்டு ஆப்பிள் கார் பிளே, ஸ்மார்ட் போன் சார்ஜிங் உள்ளிட்ட பல அம்சங்கள் இருக்கிறது.
பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை டிரைவர் மற்றும் பயணிகளுக்கான ஏர்பேக் ஐஎஸ்ஓது ஃபிக்ஸ் ரியர் சீட், அடாப்டிட் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் ஏய்டு, 360 டிகிரி கேமரா, பார்க்கிங் சென்சார், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரெயின் சென்சார், ஹில் டிசென்ட் கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

இந்த வால்வோ சி40 ரீசார்ஜ் கார் சிங்கிள் மோட்டார் மற்றும் டூயல் மோட்டார் செட் ஆப்களில் சர்வதேச சந்தையில் விற்பனையாகி வருகிறது. இந்திய சந்தைக்கு வரும்போது சிங்கிள் மோட்டார் செட் அப் உடன் தான் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. அதே நேரம் இதில் ஆல் வீல் டிரைவ இது 408 பிஎச்பி பவரையும் 660 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது .
இந்த காரில் 78 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக் மூலம் இந்த கார் முழு சார்ஜில் 530 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4.7 நொடியில் பிக்கப் செய்து விடும்.
இந்த கார் அதிகபட்சம் 180 கி.மீ வேகத்தில் மட்டும் பயணிக்கும்படி லிமிட் செட் செய்யப்பட்டுள்ளது.இந்திய சாலைக்கு ஏற்றவாறு இது செட் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் உதிரிப் பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.
இந்தக் காரின் உட்புறத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட மெட்டீரியல்கள் அனைத்தும் ரீசைக்கிள் செய்யப்பட்ட மெட்டீரியல்களாக பயன்படுத்தப்பட்டுள்ளது. லெதர் இல்லாத இன்டீரியர் சீட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆம்பியன்ஸ் லைட்டிங் அம்சங்களும் இடம்பெற்றுள்ளது. ஹார்மன் கார்டன் பிரிமியம் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறப்பான சத்தத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுகம் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பொழுது இந்த காரை வால்வோ இந்தியா வெப்சைட்டிலும் டீலர்களிடமும் நேரடியாக புக்கிங் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தின் போது தான் இந்த காரின் விலை குறித்த விபரங்கள் வெளியாகும். இந்த காரின் டெலிவரி வரும் செப்டம்பர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு வால்வோ ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இருக்கிறது. இந்த காரின் புக்கிங் துவங்கியதும் பலர் புக்கிங் செய்ய காத்திருக்கின்றனர். இந்தகார் உதிரிபாகங்கள் இறுக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வருவதால் விலை சற்று அதிகமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









