முழுசா பெட்ரோல், டீசல் கார் விற்பனையை நிறுத்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் திட்டம்... 2025தான் கடைசி!!
பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று விரைவில் இந்தியாவில் உள் எரிப்பு எந்திரம் கொண்ட வாகனங்களின் விற்பனையை நிறுத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது எந்த நிறுவனம்?, ஏன் இந்த திடீர் முடிவு? என்பது பற்றிய அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கார் உற்பத்தி நிறுவனங்கள் சில வெகு விரைவில் பெட்ரோல், டீசல் எஞ்ஜின் கொண்ட வாகனங்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்த இருக்கின்றன. விற்பனையை மட்டுமில்லைங்க உற்பத்தி பணிகளையும் அவை கை விட இருக்கின்றன. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் காற்று மாசை கருத்தில் கொண்டே இந்த அதிரடி முடிவை வாகன உற்பத்தியாளர்கள் எடுத்து வருகின்றனர்.

இப்படியான ஓர் முடிவையே தற்போது தங்கள் நிறுவனமும் எடுத்திருப்பதாக பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சுவீடன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் வால்வோ, உள் எரிப்பு எந்திரங்கள் கொண்ட வாகனங்களின் விற்பனையை கை விட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கும் நிறுவனம் ஆகும். தற்போது நிறுவனம் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றது.
இதன் வாயிலாக நிறுவனம் முழுமையாக டீசல் வாகன விற்பனையை விட்டு விலகி இருப்பது தெளிவாக தெரிகின்றது. இந்த நிலையிலேயே முற்றிலுமாக உள் எரிப்பு மோட்டார் கொண்ட வாகனங்களின் விற்பனையில் இருந்து வெளியேற வால்வோ திட்டம் போட்டு இருக்கின்றது. மேலும், மின் வாகன விற்பனையை மட்டுமே இந்தியாவில் செய்ய இருப்பதாகவும் அது கூறியிருக்கின்றது. 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட இருப்பதாக வால்வோ அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் இந்தியாவிற்கு மட்டுமில்லைங்க ஒட்டுமொத்த உலகிற்கும் இப்படியான ஓர் திட்டத்தையே வகுத்து உள்ளது. 2030க்குள் உலகளவிலான இலக்கை எட்டை நிறுவனம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதன் வாயிலாக வால்வே நிறுவனம் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் விரைவில் எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் விற்பனை நிறுத்த இருப்பது தெளிவாக தெரிகின்றது. தலை நகர் டெல்லி மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் காற்று மாசு தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது.
இதே நிலையே நாடு முழுவதிலும் காணப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டே வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் கொள்கையை முழுமையாக மாற்றியமைத்த வண்ணம் இருக்கின்றனர். விரைவில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான டாடா, மாருதி சுஸுகி, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் முழுமையாக கைவிட்டு முற்றிலுமாக மின் வாகன உற்பத்தியில் ஈடுபட உள்ளன. ஆனால், இந்த நிலையை இந்திய நிறுவனங்கள் எட்ட இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

அதேநேரத்தில், டாடா மோட்டார்ஸ் தன்னுடைய தயாரிப்புகளை மின்சார வாகனமாக மாற்றுவதில் மிக வேகமாக நகர்ந்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிறுவனம் இப்போதைய நிலவரப்படி டியாகோ இவி, டிகோர் இவி, நெக்ஸான் இவி மேக்ஸ் மற்றும் நெக்ஸான் இவி பிரைம் ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றின் வரிசையில் இன்னும் பல்வேறு புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடல்களை இணைக்கவும் டாடா திட்டம் போட்டு உள்ளது.
இந்த நிலையிலேயே அனைத்து நிறுவனங்களுக்கும் முன்னோடியாக வெகு விரைவிலேயே முழுமையாக மின்சார கார் விற்பனைக்கு மாற இருப்பதாக வால்வோ அறிவித்து இருக்கின்றது. நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் வெர்சன் சி40 எஸ்யூவி ரக காரை நடப்பாண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து, அடுத்த வரும் ஒவ்வொரு ஆண்டும் புதுமுக எலெக்ட்ரிக் கார்கள் இந்திய மின் வாகன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். வால்வோ நிறுவனம் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஒரே எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
எக்ஸ்சி 40 ரீசார்ஜ், இதுவே நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் எலெக்ட்ரிக் காராகும். இத்துடன், எக்ஸ்சி, எக்ஸ்சி 60, எக்ஸ்சி 90 மற்றும் எஸ் 90 எனும் ஐசிஇ மோட்டார் கொண்ட வாகனங்களையும் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றையே வால்வோ நிறுவனம் அடுத்தடுத்து எலெக்ட்ரிக் வெர்சனில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









