இந்தியாவில் கனத்த இதயத்துடன் வால்வோ எடுக்க போகும் முடிவு!! இதையெல்லாம் முன்னாடியே யோசிச்சு இருக்கணும்!

வால்வோ எக்ஸ்சி40 (Volvo XC40) கார் இந்தியாவில் இருந்து விற்பனை நிறுத்தம் செய்யப்பட உள்ளது. தற்சமயம் வால்வோ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் எக்ஸ்சி40 பெயர் இருந்தாலும், விரைவில் இந்த மைல்ட்-ஹைப்ரீட் காரின் விற்பனை மெல்ல, மெல்ல இந்தியாவில் நிறுத்திக் கொள்ளப்பட உள்ளது.

வால்வோ நிறுவனத்தில் இருந்து லக்சரி எஸ்யூவி கார்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இருப்பினும், சில கார்களை நம் இந்திய மக்கள் கண்டுக் கொள்வதில்லை. அந்த வரிசையில், விரைவில் வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி கார் இந்திய சந்தையை விட்டு விடைப்பெற உள்ளது.

volvo xc40 discontinuing in india

ஆனால், இப்போதைக்கு வால்வோ இந்தியா நிறுவனத்தின் வெப்சைட்டில் பார்த்தால், எக்ஸ்சி40 காரின் பெயர் இருக்கும். ஆனால், இந்த பெயர் நீண்ட நாட்களுக்கு இருக்க போவதில்லை. வால்வோவின் மைல்ட்-ஹைப்ரீட் காரான எக்ஸ்சி40, பி4 அல்டிமேட் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டும்தான் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது, எக்ஸ்சி40 காரில் வால்வோ வழங்கும் அனைத்து அம்சங்களும் இந்த ஒரு வேரியண்ட்டிலேயே கிடைக்கிறது. எக்ஸ்சி40 காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.46.40 இலட்சம் ஆக தற்சமயம் உள்ளது. எக்ஸ்சி40 காரின் விற்பனை நிறுத்தப்பட்ட பின்பு, எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் கார் வால்வோவின் விலை குறைவான காராக நம் இந்திய மார்க்கெட்டில் இருக்கும்.

volvo xc40 discontinuing in india

எக்ஸ்சி40 எஸ்யூவி காரின் எலக்ட்ரிக் வெர்சன் தான் எக்ஸ்சி40 ரீசார்ஜ் ஆகும். இந்த வால்வோ எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.56.90 இலட்சமாக உள்ளது. அதாவது, மைல்ட்-ஹைப்ரீட் காரை விட எலக்ட்ரிக் காரின் விலை சுமார் ரூ.10 இலட்சத்திற்கும் மேல் அதிகமாக உள்ளது. எக்ஸ்சி40 காரில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

மைல்ட்-ஹைப்ரீட் காராகிய இந்த என்ஜின் உடன் 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரீட் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. கடைசியாக, எக்ஸ்சி40 கார் கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற்றது, அதாவது கார் சற்று புத்துணர்ச்சியாக்கப் பட்டது. ஆனால், 1 வருடம் 2 மாதங்கள் கழித்து எக்ஸ்சி40 காரை விற்பனை நிறுத்த செய்ய வேண்டிய சூழலுக்கு வால்வோ தள்ளப்பட்டு உள்ளது.

volvo xc40 discontinuing in india

இந்த காரின் விற்பனை நிறுத்தத்திற்கு, எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காருக்கு தொடர்ந்து அதிகரித்துவரும் வரவேற்பு முக்கிய காரணமாக பார்க்கப் படுகிறது. அதாவது, கஸ்டமர்களின் எண்ணிக்கையை பிரிக்காமல் முழுவதும் எக்ஸ்சி40 ரீசார்ஜ் காருக்கு செல்வதற்கு வால்வோ மேற்கொள்ளும் யுக்தி இது என கூறப்படுகிறது.

இவ்வாறு எலக்ட்ரிக் காருக்கு வால்வோ கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம், 2030க்குள் முற்றிலுமாக எலக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்வது என்கிற கொள்கையில் வால்வோ செயல்பட்டு வருகிறது. இந்த கொள்கையை இந்தியாவில் மட்டுமில்லை, உலகளவில் வால்வோ நிறுவனம் பின்பற்றும் கொள்கை ஆகும்.

volvo xc40 discontinuing in india

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வால்வோ நிறுவனம் எக்ஸ்சி40 காரின் விஷயத்தில் ஓர் தைரியமான நகர்தலை மேற்கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், எக்ஸ்சி40 கார்கள் முற்றிலுமாக விற்பனையாகாமல் ஒன்றுமில்லை. ஓரளவிற்கு வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. இருப்பினும், எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரை கருத்தில் கொண்டு இந்த முடிவை வால்வோ மேற்கொள்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 11, 2023, 23:06 [IST]
English summary
Volvo xc40 discontinuing for xc40 recharge check all details here
மேலும்... #வால்வோ #volvo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X