Volvo XC40 Recharge எலெக்ட்ரிக் காரை வாங்க இவ்ளோ பெரிய போட்டியா! எல்லாரும் வரிசைல நின்னுட்டு இருக்காங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Car) ஒன்று வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (Volvo XC40 Recharge). இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம்தான், வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் வாடிக்கையாளர்களுக்கு வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன. அதற்குள்ளாக டெலிவரியில் (Delivery) புதிய மைல்கல் (Milestone) ஒன்றை வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் கடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் 200வது வாடிக்கையாளருக்கு தற்போது எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரை டெலிவரி செய்துள்ளது. மிக குறுகிய காலத்தில் 200 யூனிட்கள் டெலிவரி என்ற மைல்கல்லை வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் கடந்திருப்பது அனைவரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.
ஏனெனில் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ், மிகவும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த எலெக்ட்ரிக் கார் தற்போதைய நிலையில் ஒரே ஒரு வேரியண்ட்டில் (Variant) மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலை 56.90 லட்ச ரூபாய் ஆகும். இதுவும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே.

இவ்வளவு விலை உயர்ந்த ஒரு எலெக்ட்ரிக் காரை, பொறுமையாக காத்திருந்து இந்திய வாடிக்கையாளர்கள் டெலிவரி பெற்று வருகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உதிரி பாகங்கள் சப்ளையில் ஏற்பட்டுள்ள பிரச்னை, வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி மற்றும் டெலிவரி பணிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் வாடிக்கையாளர்கள் பொறுமையாக காத்திருந்து டெலிவரி பெற்று கொண்டிருப்பது, வால்வோ மீதான நம்பகத்தன்மையை காட்டுவதாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரில், 78 kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 418 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பான ரேஞ்ச் (Range), வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வரவேற்பிற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை சார்ஜ் செய்வதும் மிகவும் எளிமையான விஷயங்களில் ஒன்றுதான். 150 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், வெறும் 28 நிமிடங்களில், பேட்டரியை 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.
இந்த எலெக்ட்ரிக் காரின் செயல்திறனும் கூட சிறப்பாகவே உள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் இந்த எலெக்ட்ரிக் கார் எட்டி விடும். இந்திய சந்தையில் கியா இவி6 (Kia EV6) மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) போன்ற எலெக்ட்ரிக் கார்களுடன், வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் போட்டியிட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது?
இந்தியாவில் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையும் அதிகரித்து கொண்டே வருவது, பொதுமக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் மிகவும் ஆர்வமாக இருப்பதை காட்டுகிறது. எனவே வரும் காலங்களில் இந்திய சந்தையில் இன்னும் நிறைய விலை உயர்ந்த எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகத்தை நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








