மஹிந்திரா கார்களில் உள்ள ஒரே பிரச்சனை இதுதாங்க!! அதனால்தான் பலரும் புக் செய்ய யோச்சிக்கிறாங்க...
இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி கார் பிராண்ட்களுள் ஒன்றாக மஹிந்திராவை சொல்லலாம். தரத்திலும், செயல்படுதிறனிலும் மஹிந்திரா கார்களில் எந்தவொரு குறையும் இருக்காது. முதன்முதலாக மஹிந்திரா கார்கள் விற்பனைக்கு வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து தற்போதுவரையில் அவ்வாறுதான் இருந்து வந்துள்ளன.
இருப்பினும் எந்தவொரு தனியார் நிறுவனத்திலும் ஒரு சிறு குறை ஆவது இருக்கத்தானே செய்யும். அந்த வகையில் பார்த்தோமேயானால், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்திற்கு சமீப காலமாக பிரச்சனையாக இருப்பது வெயிட்டீங் பிரீயட் தான். அதாவது, முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு காரை டெலிவிரி செய்ய இந்த நிறுவனம் நீண்ட காலத்தை எடுத்து கொள்கிறது என்கிற பிரச்சனை மஹிந்திராவை சுற்றிச்சுற்றி வருகிறது.

அதிகப்படியான வாடிக்கையாளர்கள் மஹிந்திரா கார்களை புக் செய்வதால் இப்படி நடக்கிறதா அல்லது மஹிந்திராவின் உற்பத்தி பணிகளில் தொடர்ச்சியாக ஏதேனும் இடையூறுகள் ஏற்படுகின்றனவா என்பது தெரியவில்லை. எங்களை கேட்டால், உற்பத்தி பணிகள் தாமதமாகுவதால் தான் வெயிட்டீங் பிரீயட் அதிகரிக்கிறது என நினைக்கிறோம். ஏனெனில் தற்போதைய நிலவரப்படி, மாருதி சுஸுகிக்கு குவியும் புக்கிங் அளவிற்கு மஹிந்திராவிற்கு புக்கிங் குவிய வாய்ப்பில்லை.
தொழிற்சாலை எண்ணிக்கைகள் குறைவாக இருப்பதும் நிச்சயமாக மஹிந்திராவிற்கு பின்னடைவாக இருக்கும். மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்திற்கு கார்களுக்காக மட்டுமே தற்போதைக்கு சுமார் 2.66 லட்ச புக்கிங்குகள் கிடப்பில் உள்ளன. அதாவது, 2.66 லட்ச கார்கள் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை டெலிவிரி செய்ய வேண்டிய கடமை மஹிந்திராவுக்கு உள்ளது.

இதில் அதிகப்பட்சமாக மஹிந்திராவின் சமீபத்திய அறிமுகங்களான ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் கார்களுக்கு சுமார் 1.19 லட்ச புக்கிங்குகள் குவிந்துள்ளன. அடுத்த இடத்தில் எக்ஸ்யூவி700 கார் 77 ஆயிரம் முன்பதிவுகளுடனும், தார் எஸ்யூவி வாகனத்திற்கு 37,000 முன்பதிவுகளும், எக்ஸ்யூவி300 மற்றும் பொலிரோ கார்களுக்கு முறையே 23,000 மற்றும் 9,000 முன்பதிவுகளும் தற்போதைக்கு நிலுவையில் உள்ளன.
ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் கார்களை கடந்த 2023 ஜனவரி மாதத்தில் மட்டும் ஏறக்குறைய 16,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு மாதத்திற்கு மாதம் புக்கிங்ஸ் குவிந்து வருவதால் ஸ்கார்பியோ என் காரின் சில வேரியண்ட்களுக்கான வெயிட்டீங் பிரீயட் சுமார் 1 வருடத்தை கூட கடந்து உள்ளது. ஸ்கார்பியோ கிளாசிக் கார்களை டெலிவிரி எடுக்க 6 மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த என்ஜின்களுடன் கியர்பாக்ஸ் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகின்றன. மறுப்பக்கம், ஸ்கார்பியோ கிளாசிக் காரில் 2.2 லிட்டர் ஜென்-2 எம் ஹாவ்க் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் செயல்படும் இந்த என்ஜின் இயக்க ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு வழங்குகிறது.
இந்த இரு ஸ்கார்பியோ கார்கள் மட்டுமின்றி, எக்ஸ்யூவி700 காரை டெலிவிரி பெறவும் ஏறக்குறைய 10 -12 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை வேறு மஹிந்திரா சமீபத்தில் துவங்கியுள்ளது. அப்படியென்றால், மஹிந்திராவின் தொழிற்சாலையில் மற்ற கார்களின் உற்பத்தி சற்று குறையலாம். எக்ஸ்யூவி400 காருக்கு 15,000க்கும் அதிகமான புக்கிங் கிடைத்துள்ளது. டெலிவிரிகள் இன்னும் துவங்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications








