எல்லாத்துக்கும் ரெடியா இருங்க! ஏப்1ம் தேதிக்குப் பிறகு இது அமலுக்கு வந்தா கார் பைக் விலை தாறுமாறா ஏறிடும்!

உலகம் முழுவதும் மாசுவை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் ஒவ்வொரு விதமான கொள்கையைப் பின்பற்றி வருகிறது. அதன்படி அடுத்த சில ஆண்டுகளின் மாசுவை கட்டுக்குள் கொண்டு வரத் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்ட வருகின்றன. அதன்படி இந்திய அரசு பாரத் ஸ்டேஜ் என்ற கட்டுப்பாடுகள் மூலம் மாசு ஏற்படுத்தும் இடங்களில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர முயற்சி செய்கிறது.

தற்போது இந்தியாவில் பிஎஸ் 6 என்ற மாசுக் கட்டுப்பாடு அமலில் இருக்கிறது. இதில் முதல் கட்ட கட்டுப்பாடுகள் மட்டுமே அமலில் இருக்கிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் பிஸ்6 மாசுக் கட்டுப்பாட்டின் இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன. அதற்காக தற்போது இந்தியா முழுவதும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

எல்லாத்துக்கும் ரெடியா இருங்க! ஏப்1ம் தேதிக்குப் பிறகு இது அமலுக்கு வந்தா கார் பைக் விலை தாறுமாறா ஏறிடும்!

இந்த பிஎஸ் கட்டுப்பாட்டில் அதிகம் பாதிக்கப்படுவது ஆட்டோமொபைல் துறை தான். ஒவ்வொரு வாகனமும் இந்த கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்படி தயாரிக்க வேண்டும். இதனால் பல மாற்றங்களை இந்நிறுவனங்கள் செய்துள்ளது. இந்த பிஎஸ் 6 முதல் ஸ்டேஜ் மற்றும் பிஎஸ் 6 இரண்டாவது ஸ்டேஜிற்கு இருக்கும் ஒரே வித்தியாசம் ரியல் டைம் மானிட்டரிங் தான்.

பிஎஸ் 6 முதல் கட்டத்தில் ஒரு வாகனத்தின் மாசு அளவு ஆலையில் டெஸ்ட் செய்யப்படும் போது குறிப்பிட்ட அளவிற்குக் குறைவாக இருந்தால் போதுமானது அந்த இன்ஜினை வாகனத்தில் பொருத்திப் பயன்படுத்தலாம். ஆனால் பிஎஸ் 6 இரண்டாம் கட்டம் ஒரு இன்ஜினில் ரியல் டைமில் மாசுவை கண்காணிக்கும் கருவி பொருத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு விற்பனைக்கு வரும் வாகனங்களில் இந்த கருவி பொருத்தப்பட்டிருக்கும். குறிப்பிட்ட அளவை விட அதிகமான மாசு வாகனத்தின் இன்ஜினிலிருந்து வெளியேறினால் உடனடியாக டிரைவருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். அந்த வாகனத்தை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று பிரச்சனையைச் சரி செய்ய வேண்டும்.

இந்த பிஎஸ் 6 2ம் கட்ட மாற்றத்திற்குத் தகுந்தார் போல் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் இன்ஜினை மாற்ற வேண்டும் என்றால் வாகனத்தின் ஹார்டுவேர், சாஃப்ட்வோர் மற்றும் செமி கண்டெக்டர்களை மாற்ற வேண்டும். இதனால் வாகனத்தின் தயாரிப்பு செலவு அதிகமாகிறது. இது வாகனத்தின் விலையில் எதிரொலிக்கும் பல நிறுவனங்கள் வரிசையாக தங்கள் வாகனத்தின் விலையை உயர்த்தி விட்டது.

பயணிகள் வாகனத்தைப் பொருத்தவரை ரூ10 ஆயிரம் முதல் ரூ50 ஆயிரம் வரை வானகத்தின் இன்ஜின் அளவை பொருத்து விலை அதிகரிக்கப்படும். கமர்ஷியல் வாகனங்களுக்கு 5 சதவீதம் வரை விலை அதிகரிக்கப்படும். இதில் என்ட்ரி லெவல் வாகனங்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படும்.

இந்த விலையேற்றம் கார்கள் மட்டுமல்ல டூவீலர், 3 வீலர்கள் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் பொருந்தும். இந்த விலையேற்றத்தை பிஎஸ் 4ல் இருந்து பிஎஸ்6க்கு மாறும் போது ஏற்றப்பட்ட விலையேற்றத்தை விடக் குறைவு தான் அப்பொழுது பயணிகள் வாகனங்களுக்கே ரூ50 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வகை விலை உயர்வு இருந்தது. தற்போது அந்த அளவிற்கு இல்லை என்றாலும் கணிசமான விலை உயர்வு இருக்கிறது.

இந்த பிஎஸ் 6 ஸ்டேஜ் 2 கட்டுப்பாட்டிற்குத் தகுந்தார் போல் இன்ஜினை மாற்றுவதில் பெரிய பாதிப்பைப் பெறப்போகும் இன்ஜின் என்றால் டீசல் இன்ஜின் தான். பெரிய டீசல் இன்ஜின்களில் இந்த மானிட்டரிங் கருவியைப் பயன்படுத்துவது எளிது தான். ஆனால் சிறிய டீசல் இன்ஜின்களில்இதை பயன்படுத்துவது கடினம். இதற்காக ஆகும் செலவு அதிகம்.

இதனால் பல நிறுவனங்கள் சிறிய டீசல் இன்ஜின் உடன் வரும் வாகனங்களில் டீசல் இன்ஜினையே மொத்தமாக நிறுத்திவிட்டன. பெட்ரோல் இன்ஜின்களை மட்டும் தான் விற்பனை செய்து வருகிறது. ஹோண்டா அமேஸ், டாடா அல்ட்ராஸ், மஹிந்திரா மராஸ்ஸோ, ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களின் டீசல் இன்ஜின் வேரியன்ட்கள் முற்றிலுமாக ஏப் 1ம் தேதி முதல் நிறுத்தப்படுகின்றன.

பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் இதற்காக சில மாதங்கள் முன்பே தயாராகிவிட்டன. அதற்கான நடவடிக்கையையும் எடுக்கத் துவங்கிவிட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதமே பிஎஸ் 6 இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளுடன் வானகங்களை விற்பனை செய்யத் துவங்கிவிட்டது. மாருதி நிறுவனத்திடம் உள்ள 99 சதவீதமான வாகனங்கள் இந்த கட்டுப்பாட்டு விதியில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

மற்ற நிறுவனங்கள் தற்போது இந்த பிஎஸ்6 2ம் கட்ட மாற்றத்திற்காகத் தயாரான நிலையில் ஏற்கனவே பிஎஸ் 6 ஸ்டேஜ் 1 கட்டுப்பாட்டில் தயாரிப்பாட்ட வாகனங்களை விரைவாக விற்பனை செய்ய அந்த கார்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த கார்கள் கடந்த ஒரு சில மாதங்களாகக் குறைவான விலையில் விற்பனையானது.

இந்த மாற்றத்தினால் ஏற்பட்ட விலையேற்றத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது குறைந்த விலை கார்கள் தான். பிரிமியம் அல்லது சொகுசு கார்களும் விலையேறினாலும் சதவீதத்தின் அடிப்படையில் பார்க்கும் போது சிறிய கார்களுக்கு தான் அதிகமான விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. பெரிய மற்றும் விலையுயர்ந்த கார்களுக்கு மிகக் குறைவான விலையேற்றம் தான் ஏற்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 18, 2023, 12:40 [IST]
English summary
What is bs6 2nd stage emission standard how it affect price of vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+