லட்ச கணக்குல மத்தவங்க காத்திருந்தாலும் இந்த ஒரு கோடு இருந்தா நீங்க விஐபி.. சீக்கிரமே காரை டெலிவரி கொடுப்பாங்க!
பேஸ்லிஃப்ட் செல்டோஸ் காரின் இந்திய வருகையை உறுதிப்படுத்தும் விதமாக கியா நிறுவனம் சமீபத்தில் அந்த காரை நாட்டில் வெளியீடு செய்தது. மிக பெரிய அளவில் இந்த காருக்கு எதிர்பார்ப்பு நிலவி வந்தநிலையில் இந்த சம்பவத்தை தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனம் நிகழ்த்தியது.
மேலும், இன்னும் ஒரு சில தினங்களில் இந்த காருக்கான புக்கிங் பணிகளையும் இந்தியாவில் அது தொடங்க இருக்கின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள், புதிய அப்டேட் செய்யப்பட்ட கியா செல்டோஸ் மிட்-டைஸ் எஸ்யூவி காருக்கான புக்கிங் பணிகள் வரும் 14 ஜூலையில் இருந்து தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கின்றன.

தற்போது விற்பனையில் இருக்கும் செல்டோஸைப் போலவே புதிய ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸுக்கும் நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இதற்கும் காத்திருப்பு காலம் பலமடங்கு அதிகரிக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. இந்த காத்திருப்பு காலத்தில் இருந்து தங்களுடைய வாடிக்கையாளர்களைக் காக்க கியா நிறுவனம் ஓர் சூப்பரான திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது.
'கே கோடு' எனும் புரோக்ராமையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. பிரத்யேகமாக ஏற்கனவே தங்களுடைய செல்டோஸை காரை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் சிறிதும் சிரமம் இன்றி புதிய செல்டோஸை வாங்கிக் கொள்ளவே இந்த திட்டம் என்பது குறிப்பிடத்தகுந்தது. பழைய மாடலாக மாற இருக்கும் செல்டோஸை மாற்றிவிட்டு புதிய செல்டோஸுக்கு அப்கிரேடாக வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.

புக்கிங்கில் மட்டுமல்ல டெலிவரியிலும் இவர்களுக்கு முன் உரிமை அளிக்கப்பட இருக்கின்றது. ஆமாங்க, ஏற்கனவே செல்டோஸ் காரை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் கே கோட் எனும் புரோக்ராமின்கீழ் தங்களுக்கான புதிய செல்டோஸ் காரை புக் செய்யும்போது உடனடியாக அவர்களுக்கான புக்கிங்கை ஏற்கவும், பெரிய அளவில் காத்திருப்பு காலத்தில் சிக்கி தவிக்காமல் இருக்க விரைவில் டெலிவரி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது.
இதற்காகவே பிரத்யேகமாக கே கோடு எனும் வசதியை அதன் தளத்தில் கியா நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. புதிதாக கியா செல்டோஸ் காரை வாங்கியவர்கள், செகண்ட் ஹேண்டில் கியா செல்டோஸை வாங்கியவர்கள் யாராக இருந்தாலும் இந்த புரோக்ராமின் கீழ் பலனடைய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
குறிப்பிட்ட சில தகவல்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவிடும்போது பிரத்யேக கே-கோடு வழங்கப்படும். இந்த கோடை வைத்து புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி என பலவற்றில் முன்னுரிமை வழங்கப்பட இருக்கின்றது. இந்த கே கோடை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என யாருக்கும் வேண்டுமானாலும் பகிர்ந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
கே கோடை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து மட்டுமின்றி மை கியா செல்போன் செயலியில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். இந்த இரண்டில் இருந்தும் மிக சுலபமாக கே கோடை பெறுவது மிக சுலபம் ஆகும். இந்த கோடுடன் செல்டோஸை புக் செய்யும்போது விஐபி-க்கு இணையான முக்கியத்துவம் உங்களுக்கு அளிக்கப்படும்.
குறிப்பாக, உடனடியாக புதிய கியா செல்டோஸ் உங்கள் வீட்டை வந்து சேரும். புதிய ஃபேஸ்லிஃப்ட் கியா செல்டோஸில் பன்முக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஃபேஸ்லிஃப்ட் செல்டோஸின் டேஷ்போர்டு முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் க்ளஸ்டர் ஆகியவைம் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இரண்டும் 10.25 அங்குலம் கொண்டவை ஆகும்.
மேலும், இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதிகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுடன் சேர்த்தே லெவல் 2 அடாஸ் அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல், ஃப்ரண்ட் கொலிசன் வார்னிங் சிஸ்டம், லேன் கீப்பிங் அசிஸ்ட், ரியர் பிளைண்ட் ஸ்பாட் கொலிசன் வார்னிங் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதுபோன்று சூப்பரான வசதிகள் கொண்ட புதிய கியா செல்டோஸ் காருக்கே புக் செய்து கொள்வதில் தற்போதைய செல்டோஸ் கார் உரிமையாளர்களுக்கு முன்னுரிமையை அளிக்க இருக்கின்றது, கியா நிறுவனம். இதன் வாயிலாக காத்திருப்பு காலத்தை அவர்களால் பெருமளவில் ஸ்கிப் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








