பஞ்ச் சிஎன்ஜில இருக்க இந்த 3 அம்சங்கள் எக்ஸ்டர் சிஎன்ஜில இல்ல.. எக்ஸ்டர்ல இருக்க அந்த 3 பஞ்ச்ல இல்ல! என்ன அவை?

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவின் சிஎன்ஜி கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாகச் சமீபத்தில் அதன் எக்ஸ்டர் கார் மாடலில் சிஎன்ஜி ஆப்ஷனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த மைக்ரோ எஸ்யூவி காருக்குப் போட்டி அளிக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் அதன் மைக்ரோ எஸ்யூவி கார் மாடலான பஞ்ச் கார் மாடலில் சிஎன்ஜி வெர்ஷனை தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்து இருக்கின்றது.

நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக பஞ்ச் இருப்பது குறிப்பிடத்தகுந்தது. மாதம் ஒன்றிற்கே இந்தக் கார் மாடல் 10 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. இந்த அளவிற்கு சூப்பராக விற்பனையாகும் கார் மாடலிலேயே டாடா சிஎன்ஜி தேர்வை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

Hyundai exter cng tata punch icng benefits

இந்த மாதிரியான சூழலில், டாடா பஞ்ச் சிஎன்ஜி-யில் இடம் பெற்றிருக்கும் குறிப்பிட்ட அம்சங்கள் சில ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜியில் வழங்கத் தவறி இருப்பதும், ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் சில டாடா பஞ்ச் சிஎன்ஜியில் இடம் பெற தவறி இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. அப்படி என்னென்ன அம்சங்களை இரு நிறுவனங்களும் வழங்கத் தவறி இருக்கின்றன என்பதை விளக்கக்கூடிய ஓர் பதிவே இதுவாகும். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஆறு ஏர் பேக் அம்சங்கள்: ஹூண்டாய் அதன் எக்ஸ்டர் கார் மாடலின் அனைத்து தேர்வுகளிலும் 6 ஏர்-பேக்குகளை வழங்குகின்றது. ஆமாங்க, எக்ஸ்டர் கார் மாடலில் 6 ஏர்-பேக்குகள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், டாடா மோட்டார்ஸ் பஞ்ச் காரில் ஆறு ஏர்பேக்குகளை வழங்கவில்லை. அது, 2 ஏர்பேக்குகளையே கட்டாயமாக வழங்குகின்றது. அதேவேளையில், உயர் நிலை தேர்வுகளில் கூடுதல் ஏர்பேக் வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் வசதி: இந்த வசதியையும் டாடா பஞ்ச் காரில் பார்க்க முடியாது. ஏனெனில் இந்த அம்சத்தை டாடா வழங்க தவறிவிட்டது. அனைத்து டயர்களிலும் காற்று இருப்பை உறுதி செய்வதே இந்த கருவியின் பணியாகும். சிறப்பான மைலேஜ் மற்றும் இயக்க அனுபவத்தை பெற அனைத்து டயர்களிலும் போதுமான அளவு காற்று இருப்பது அவசியமானது ஆகும். இதைக் கண்கானிக்கக் கூடிய கருவியையே டாடா பஞ்ச் காரில் வழங்க தவறி இருக்கின்றது.

4 சிலிண்டர் எஞ்ஜின்: ஹூண்டாய் எக்ஸ்டர் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மோட்டார் 4 சிலிண்டர்கள் கொண்டது ஆகும். ஆனால், டாடாவிலோ 3 சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இருப்பினும், பஞ்சைக் காட்டிலும் சற்று குறைவான திறனையே எக்ஸ்டர் சிஎன்ஜி வெளியேற்றுகின்றது. பஞ்ச் சிஎன்ஜி 72.39பிஎச்பி பவரையும், 103என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில் ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜியோ 69 பிஎஸ் மற்றும் 95.2 என்எம் டார்க்கை மட்டுமே வெளியேற்றும்.

ரியர் ஏசி வெண்ட்: ஹூண்டாய் தன்னுடைய எக்ஸ்டர் காரில் பின் பக்கத்தில் பயணிப்பவர்களுக்கும் சொகுசாக பயணிக்க வேண்டும் என்பதற்காக பின் பக்கத்தில் ஏசி வெண்டுகளை வழங்கி இருக்கின்றது. ஆனால், இந்த வசதியை டாடா பஞ்ச் காரில் வழங்கவில்லை. இது பஞ்ச் கார் பிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் மிஸ்ஸிங் அம்சம் ஆகும்.

பஞ்சர் காரின் ட்வின் சிலிண்டர் செட்-அப்: எக்ஸ்டர் காரில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் சில பஞ்ச்-இல் இல்லாததைப் போல், பஞ்ச்-இல் இருக்கக் கூடிய இந்த ட்வின் சிலிண்டர் செட்-அப் எக்ஸ்டர் காரில் வழங்கப்படவில்லை. அதிக பூட் ஸ்பேஸை வழங்க வேண்டும் என்பதற்காக இரண்டு சிலிண்டர்கள் செட்-அப்பை பஞ்ச்-இல் டாடா வழங்கி இருக்கின்றது. அல்ட்ராஸிலேயே இந்த அம்சம் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார்: டாடா பஞ்ச் ஓர் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற கார் ஆகும். குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த சூப்பரான பாதுகாப்பு ரேட்டிங்கை அக்கார் பெற்றது என்பது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், எக்ஸ்டர் காரின் பாதுகாப்பு திறன் பற்றிய விபரம் இன்னும் வெளியிடப்பவில்லை. இதுவும் நல்ல ரேட்டிங்கையே பாதுகாப்பு விஷயத்தில் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பஞ்ச் காரில் பாதுகாப்பை இரட்டிப்பாக்கக் கூடிய அம்சங்கள் பலவும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஓர் மைக்ரோ ஸ்விட்ச் காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இது காரை ரீ-ஃப்யூவல் செய்யும்போது சுவிட்ச் ஆஃப் செய்துவிடும். இத்துடன், தெர்மல் இன்சிடன்ட் புரடக்சன் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. து எஞ்ஜினை தவிர வேறு எங்காவது கேஸ் கசியும் நிலை ஏற்பட்டால் இந்த சிஸ்டம் உடனடியாக கேஸ் சப்ளையை நிறுத்திவிடும். ஆகையால், ஆபத்து பெருமளவில் தவிர்க்கப்படும்.

டாடா பஞ்ச் காரில் ஏறி-இறங்குவது மிகவும் சுலபமானது: டாடா பஞ்ச் காரில் அதன் கதவுகளை 90 டிகிரி வரை திறந்துக் கொள்ளும் வசதியை வழங்கி இருக்கின்றது. இதுவே, தன்னுடைய பயணிகளை சுலபமாக ஏறி-இறங்க உதவியாக இருக்கின்றது. ஆனால், இந்த வசதி எக்ஸ்டரில் வழங்கப்படவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சிஎன்ஜி கார்கள் பிரிவில் மிகப் பெரிய போட்டி நிலவுகின்றது. டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களே இந்த பிரிவில் தற்போது ராஜ்ஜியம் செய்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, மாருதி சுஸுகியின் சிஎன்ஜி தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Sunday, August 6, 2023, 8:30 [IST]
English summary
Which cng car better tata punch or hyundai exter
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+