இதுக்குதான் காரை டெஸ்ட் டிரைவ் பண்ணும்போது இத செய்ய கூடாதுனு சொல்லுறது.. பாருங்க அப்பளம் போல நொறுங்கி கிடக்கு!

டெஸ்ட் டிரைவிற்கு எடுத்துபோன மிக மிக விலை உயர்ந்த சொகுச கார் ஒன்று உருத் தெரியாத அளவிற்கு மிக மோசமான விபத்தில் சிக்கி நாசமாகி இருக்கின்றது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, அது என்ன கார்?, அதன் என்ன விலை எவ்வளவு? என்பது போன்ற முக்கிய விபரங்களையேக் காண உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டெஸ்ட் டிரைவ் (Test Drive)க்கு எடுத்துச் செல்லப்படும் கார்களும் சில நேரங்களில் மனித தவறுகளால் விபத்தைச் சந்திக்க நேரிடுகின்றன. இந்த மாதிரியான ஓர் சம்பவமே தற்போது இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. விபத்தில் சிக்கி இருப்பது வழக்கமான கார் மாடல் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது.

Jeep meridian test drive gone wrong

அது ஓர் மிக அதிக விலையைக் கொண்ட சொகுசு ரக கார் மாடல் ஆகும். இதையே டெஸ்ட் டிரைவின்போது வாடிக்கையாளர் ஒருவர் டெஸ்ட் டிரைவின்போது அதிக வேகத்தில் ஓட்டி விபத்தில் சிக்க வைத்திருக்கின்றார். யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நகர் ஹவேலி-யிலேயே இந்த சோக சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. மேலும், ஜீப் மெரிடியன் கார் மாடலின் டெஸ்ட் யூனிட்டே தற்போது விபத்தில் சிக்கி இருக்கின்றது.

ஓர் காரை வாங்க போகும்போது, அது புதியதோ அல்லது பழையதோ எதுவாக இருந்தாலும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். அந்தவகையில், பல லட்ச ரூபாய் விலைக் கொண்ட ஜீப் மெரிடியன் எஸ்யூவி ரக சொகுசு காரையே வாங்கும் நோக்கில் தாத்ரா மற்றும் நகர் ஹவேலியைச் சேர்ந்த ஓர் தொழிலதிபர் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்திருக்கின்றார்.

Car crashed

அந்த நேரத்தில் உற்சாக மிகுதியில் அவர் மணிக்கு 100க்கும் அதிகமான கீலோ மீட்டர் வேகத்தில் அந்த காரை இயக்கி இருக்கின்றார். இந்த நிலையிலேயே கட்டுப்பாட்டை இழந்து ஜீப் மெரிடியன் விபத்தில் சிக்கி இருக்கின்றது. இந்த விபத்திற்கான துள்ளியமான காரணம் என்ன என்பது தெரிவிக்கப்படவில்லை.

அதேவேளையில், அதி வேகம் மற்றும் ஈரமான சாலை ஆகிய இரண்டுமே காரணமாக இருக்கும் என யூகிக்க முடிகின்றது. ஈரமான சாலையில் வாகனங்களுக்கு போதிய கிரிப்னஸ் கிடைக்காது. ஆக்குவாபிளானிங் எனும் ஆபத்தான சூழல் ஈரமான சாலைகளில் நிலவும். இதுவே டயருக்கும் சாலைக்கும் இடையே இருக்கும் இணைவை துண்டித்து வழுவழுப்பான சூழலை உருவாக்கும்.

Test drive car crashed

இந்த நிலையிலேயே டெஸ்ட் டிரைவ் எடுத்து வந்த ஜீப் மெரிடியன் அதி வேகத்தின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி இருக்கும். முதலில் சாலை டிவைடரிலேயே அந்த மோதி இருக்கின்றது. பின்னர், சாலையோர மின் விளக்கு கம்பங்கள் சிலவற்றிலும் அந்த கார் மோதி இருக்கின்றது.

இந்த விபத்தினால் கார் ஒட்டுமொத்தமாக சேதமடைந்திருக்கின்றது. குறிப்பாக, காரின் கீழ் பகுதி முற்றிலுமாக உருக்குலைந்து போயிருப்பதை நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக, முன் பக்கம் முழுமையாக அடையாளமே தெரியாத அளவிற்கு சேதமுற்றிருக்கின்றது. ஹெட்லைட், கிரில் என எந்த கூறுகளையும் அந்த இடத்தில் காணவில்லை.

இதை வைத்து பார்க்கையில் அந்த சொகுசு கார் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் வந்திருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜீப் மெரிடியன் இந்தியாவில் ரூ. 33.41 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

அதேவேளையில், இதன் உயர்நிலை தேர்வோ ரூ. 38.61 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இத்தகைய விலை உயர்ந்த சொகுசு காரே தற்போது உரு தெரியாமல் சிதைந்து போயிருக்கின்றது. இந்த மெரிடியன் காரில் ஜீப் நிறுவனம் 2.0 லிட்டர் டர்போ சார்ஜட் டீசல் எஞ்ஜினை வழங்குகின்றது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த ஒற்றை எஞ்ஜின் தேர்வில் மட்டுமே ஜீப் மெரிடியன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்்தது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லத 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இந்த மோட்டாரில் வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்ட் டிரைவிற்கு எடுத்துச் செல்லப்படும் கார் விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இது போன்ற டெஸ்ட் டிரைவ் கார் விபத்து நிகழ்வுகள் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றன. இவற்றின் வரிசையிலேயே ஜீப் மெரிடியன் தற்போது இணைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 13, 2023, 10:33 [IST]
English summary
While test drive jeep meridian luxury suv crashed here is more details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X