Tyre Burst in Summer கோடை காலத்தில் டயர் வெடிக்க இதான் காரணம்!
கோடைக் காலம் துவங்கிவிட்டது, தமிழகத்தில் 10ம் வகுப்புத் தேர்வுகள் எல்லாம் முடிந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு விடுமுறை துவங்கிவிட்டது. இப்பொழுது பலர் இந்த கோடை விடுமுறையைக் கொண்டாட கார்களில் வெளியூர்களுக்கு டூர் போகும் திட்டம் போட்டு வைத்திருப்பீர்கள்.
இப்படியாக காரில் வெளியூர் டூர் செல்லும் போது குறிப்பாகக் கோடைக் காலங்களில் பலருக்கு கார் டயர் வெடிக்கும் சம்பவம் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக நடக்கிறது. இதனால் பெரும் விபத்துகள் கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கோடைக் காலத்தில் கார் டயர்கள் ஏன் வெடிக்கிறது? இதை எப்படி வெடிக்காமல் பாதுகாப்பது என முழுமையாகக் காணலாம் வாருங்கள்.

காற்றுக்கு அறிவியல் விதிப்படி இருக்கும் ஒரே விதி அது வெப்பம் அதிகமானால் விரிவடையும், வெப்பம் குறைந்தால் சுருங்கும் என்பது தான் இந்த விதியின் படி தான் கோடை நேரத்தில் டயர் வெடிப்பு சம்பவங்களும் நடக்கிறது. காருக்கு 30-35 பிஎஸ்ஐ அழுத்தம் டயரில் இருக்க வேண்டும். ஒவ்வொரு 10 டிகிரி வெப்பம் அதிகமாகும் போதும் 0.1 சதவீதம் காற்றை விரிவடையும்.
இந்த 0.1 சதவீதம் என்பது பார்க்கச் சிறிய நம்பராக இருக்கலாம். ஆனால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சரி கோடைக் காலத்தில் ஏன் கார் டயர் வெடிக்கிறது என்ற 3 முக்கியமான காரணத்தைக் காணலாம்.

உராய்வு: கோடைக் கால டூர் போகும் போது நீண்ட தூரம் காரில் பயணம் செய்வீர்கள். இதனால் உங்கள் காய் டயர் வேகமாக ரோட்டுடன் உராய்வை ஏற்படுத்தும். இதனால் டயரில் வெப்பம் அதிகமாகும். கோடை வெப்பத்துடன் இந்த வெப்பமும் சேர்ந்து காரில் டயரின் உள்ள உள்ள காற்றின் வெப்பத்தை அதிகரிக்கும்.
சூடான வெப்பம்: காரின் டயரின் உள்ளே அதிக அழுத்தத்தில் காற்று இருக்கும். ஒட்டு மொத்த காரையுமே அந்த காற்று தான் தாங்கிக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும். போது அந்த காற்று சூடானால் தானாக விரிவடையும். அதுவும் மிக விரைவாக இந்த விரிவடைதல் நடக்கும்.

ரப்பர்: கார் டயர் ரப்பரால் செய்யப்பட்டது. இந்த ரப்பர் அதிக அழுத்தத்தைத் தாங்குமே தவிர அதிக சூட்டைத் தாங்காது. இதனால் அதிக சூடு காரணமாக காரின் டயரில் கிராக் விழுவது, நடக்கும், இது ஒரு பலூன் போலத் தான் ஊத ஊத முடிந்த அளவிற்குத் தாங்கும். முடியாத நிலையில் வெடித்துவிடும். டயரும் வெப்பம் அதிகமாக அதிகமாக முடிந்தளவிற்குத் தாங்கும் முடியாத நிலையில் வெடித்துவிடும்.
சரி இப்படி வெடிக்கும் நிலையில் டயர் இருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என நீங்கள் கேட்பது புரிகிறது. அதைப் பற்றி விளக்கமாகக் காணலாம் வாருங்கள். உங்கள் கார் டயர் வெடிக்கும் நிலையிலிருந்தால் அதன் முதன் அறிகுறி டயரை தொட்டுப் பார்க்கும் போது அதிக சூடாக இருக்கும். அந்த டயரை நீங்கள் குத்தி பார்க்கும் போது வழக்கத்தை விட அதிக பரஷர் இருப்பது போல தோன்றும். இவை இரண்டையும் வைத்துத் தெரிந்து கொள்ள முடியும்.
இன்று மார்கெட்டில் விற்பனையாகும் பல கார்களில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் இருக்கிறது இது காரின் டயரை கண்காணித்து பிரச்சனை இருந்தால் நம்மிடம் சொல்லும் எனப் பலர் நினைக்கின்றனர். இந்த சிஸ்டம் குறிப்பிட்ட அளவிற்குக் கீழே பிரஷர் குறைந்தால் மட்டுமே எச்சரிக்கை விடுக்கும் அதிக பிரஷர் இருந்தால் எச்சரிக்கை கொடுக்காது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
சரி கார் டயர் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி தற்போது வரும் அதைப் பற்றி விரிவாகக் காணலாம்.
அளவான காற்று: உங்கள் கார் டயருக்கு எனப் பரிந்துரைக்கப்பட்ட பிரஷர் அளவு இருக்கும் சரியாக அந்த அளவை பராமரியுங்கள். பரிந்துரைக்கப்பட்ட அளவை, அதிகபட்ச அளவுடன் குழப்பிக்கொள்ளாதீர்கள். பரிந்துரைக்கப்பட்ட அளவு அதிகபட்ச அளவை விடக் குறைவாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.
அடிக்கடி செக்கப்: உங்கள் கார் டயரை அடிக்கடி அதாவது ஒவ்வொரு 160 கி.மீ பயணத்திற்கு ஒரு முறை செக் செய்து கொள்வது சிறந்தது
தொடர்ந்து பயணம் வேண்டாம்: நீங்கள் கோடைக் காலத்தில் டூர் செல்கிறீர்கள் என்றால் நீண்ட தூரப் பயணமாக இருந்தால் பகல் நேரங்களில் செல்லும் போது அடிக்கடி பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் கார் டயருக்கு கொஞ்சம் கூலாக கொள்ள நேரம் வழங்கும். இதனால் கார் டயர் சூடாவதைத் தவிர்க்க முடியும். இப்படி ரெஸ்ட் எடுக்கும் போது காரை ஒரு நிழலில் பார்க் செய்யுங்கள்.
கார் டயரை சுத்தமாக வைத்திருங்கள்: கார் டயர் பட்டன்களுக்கு இடையே கற்கள் மாட்டிக்கொண்டிருக்கும். கார் கரடு முரடாண பாதைகளில் செல்லும் போது இந்த கற்கள் காரில் டயருக்குள் அதிக அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இதனால் அவ்வப்போது காய் டயரை சுத்தப்படுத்திக்கொள்வது பெஸ்ட்.
மித வேகம் மிக நன்று: காரில் நீங்கள் வேகமாகப் பயணித்தால் உங்கள் கார் டயர் வேகமாக ரோட்டுடன் உராய்வை ஏற்படுத்தும். இதனால் மிதமான வேகத்தில் காரை ஓட்டுவது டயர் வேகமாகச் சூடாவதைத் தடுக்கும். அதிகமான வேகத்தில் பயணிப்பது ஆபத்தும் கூட, அதனால் மிதமான வேகத்தில் பயணம் செய்யுங்கள்.
லோடு லிமிட்: உங்கள் காரின் உள்ள அதிகமான எடை இருந்தால் அதன் பாரம் டயருக்கு தான் வரும் இதனால் அழுத்தம் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. இதனால் கூட காரின் டயர் வெடிக்கலாம். கவனமாக இருங்கள்.


Click it and Unblock the Notifications









