டாப் வேரியன்ட் கார்களில் ஏன் சிஎன்ஜி ஆப்ஷன் இல்லை? இதற்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்குதா?

இந்தியாவில் கார் தயாரிப்பாளர்கள் தங்களது டாப் வேரியன்ட் கார்களில் மட்டும் சிஎன்ஜி ஆப்ஷனை வழங்க மாட்டார்கள் கவனித்துள்ளீர்களா? ஆனால் மிட் வேரியன்ட்களில் சிஎன்ஜி ஆப்ஷன்கள் இருக்கும். இதற்குப் பின்னால் பல விதமான காரணங்கள் இருக்கிறது. இதை பற்றி விரிவாகக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் மாருதி, ஹூண்டாய், டாடா உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் கார்களில் பெட்ரோல் இன்ஜின் வேரியன்ட்களில் சிஎன்ஜி ஆப்ஷன்களை பொருத்தி சிஎன்ஜி கார்களாக அறிமுகப்படுத்தி வருகிறது. பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதால் மக்கள் சிஎன்ஜி கார்களை அதிகம் விரும்புகின்றனர். இதனால் கார்களில் அவர்களுக்குப் பயண செலவு குறைவாக இருக்கும் எனக் கருதுகின்றனர்.

cng not offered in top variants

இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களில் சிஎன்ஜி ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் எந்த நிறுவனமும் அந்த காரின் டாப் வேரியன்ட் மாடல்களில் சிஎன்ஜி ஆப்ஷனை அறிமுகப்படுத்துவதில்லை. இதைப் பலர் கவனித்திருக்கமாட்டார்கள். சிலர் கவனித்திருந்தாலும் இதற்கான காரணம் தெரியாமல் இருப்பார்கள்.

இதற்கு ஒரு உதாரணத்தை இப்பொழுது பார்ப்போம். மாருதி பிரெஸ்ஸா காரில் எல்எக்ஸ்ஐ பேஸ் வேரியன்டாகவும், இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் டாப் வேரியன்டாகவும் இருக்கிறது. இதில் சிஎன்ஜி எல்எக்ஸ்ஐ முதல் இசட் எக்ஸ்ஐ வரை மட்டுமே இருக்கிறது. இசட்எக்ஸ்ஐ டிடி வேரியன்டில் சிஎன்ஜி ஆப்ஷன் இல்லை.

cng not offered in top variants

பொதுவாக ஒரு பெட்ரோல் வேரியன்ட் காரில் சிஎன்ஜி காராக மாற்ற வேண்டும் என்றால் ரூ80 ஆயிரம் முதல் ரூ90 ஆயிரம் செலவாகும். இது காரின் விலையை உயர்த்தும் டாப் வேரியன்ட் காரில் பொருத்தினால் அதில் உள்ள சிஎன்ஜி வேரியன்ட் தான் அதிகமான விலை கொண்ட டாப் எண்ட் காராக இருக்கும். இதை கார் தயாரிப்பு நிறுவனங்கள் விரும்புவதில்லை.

டாப் வேரியன்ட் காரை விரும்புபவர்கள் காரில் வசதிகளை அதிகம் விரும்புவார்கள். அவர்கள் விலை குறித்து அதிகம் கவலைப்படாதவர்கள். அதனால் அவர்களுக்கு பெட்ரோலே சிறந்த எரிபொருளாக இருக்கும் சிஎன்ஜி என்ற ஆப்ஷன் தேவைப்படாது. இதனால் விற்பனை குறைவாக இருக்கும் என்பதும் ஒரு காரணம். இதனால் டாப் வேரியன்டில் சிஎன்ஜி ஆப்ஷனை தவிர்த்துவிடுகின்றனர்.

cng not offered in top variants

அடுத்தாக சிஎன்ஜி பொருத்தப்பட வேண்டும் என்றால் அதற்கு வாகனத்தின் பூட் பகுதியில் சிஎன்ஜி சிலிண்டரை வைக்க வேண்டும். இது அதிகமான பூட் ஸ்பேஸை எடுத்துக்கொள்ளும். இதனால் அதிகமான பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது. டாப் வேரியன்டை வாங்குபவர்கள் இந்த வசதியில்லாமல் இருப்பதை விரும்பமாட்டார்கள். இதுவும் சிஎன்ஜி ஆப்ஷனை டாப் வேரியன்டில் தவிர்ப்பதற்கான காரணம்.

டாப் வேரியன்டை வாங்கும் மக்கள் மிட் வேரியன்டை எல்லாம் தவிர்த்துவிட்டு அதிகப் பணம் செலவானாலும் சொகுசாக கார் இருக்க வேண்டும் என மன நிலையில் இருக்கும் மக்கள் தான். அவர்கள் பெரும்பாலும் சிஎன்ஜி காருக்கான ரீஃபில் ஸ்டேஷனை தேடி அலையமாட்டார்கள். இந்தியாவில் சிஎன்ஜி ஸ்டேஷன்கள் குறைவு என்பதால் இதன் காரணமாகவும் தவிர்ப்பார்கள்.

சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் சிஎன்ஜி தயாரிப்புகளை தங்கள் காரின் பொருத்தினால் தங்கள் காரின் பிராண்ட் வேல்யூ போய்விடும் என நினைக்கின்றனர். உதாரணமாக ஸ்கோடா நிறுவனம் இங்கிலாந்தில் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்கிறது. ஆனால் இந்தியாவில் அதற்கு என பிராண்ட் வேல்யூ இருப்பதால் சிஎன்ஜி கார்களை தவிர்த்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி கார்கள் ஒரு காலத்தில் லாபமாக இருந்தாலும் தற்போது சிஎன்ஜியின் விலையும் அதிகமாகிவிட்டதால் பெரிய அளவில் லாபம் கிடையாது என்பதால் பலர் சிஎன்ஜி கார்களை வாங்க யோசித்து வருகின்றனர். இருந்தாலும் கேப் சர்வீஸ், தனிநபர் அதிக பயன்பாட்டிற்கு சிஎன்ஜி ஏற்ற காராக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 20, 2023, 16:00 [IST]
English summary
Why do car makers don t offer cng option in top variant cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X