பாதுகாப்பு குறைபாடு எல்லாம் கிடையாது! ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் கூட கிராஷ் டெஸ்ட் பண்ணாததுக்கு இதான் காரணம்!
ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனங்களில் கார்கள் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த கார்கள் எல்லாம் இதுவரை கிராஷ் டெஸ்ட்டில் ஈடுபட்டதே கிடையாது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
உலகம் முழுவதும் பாதுகாப்பான கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் உலகம் முழுவதும் பாதுகாப்பான கார்களின் விற்பனை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் டாடா நிறுவனத்தின் கார்கள் பாதுகாப்பான கார்கள் என்பதால் சமீபகாலமாக டாடா நிறுவனத்தின் கார்களின் விற்பனை பெரும் அளவு அதிகமாகியுள்ளது.

கார்களின் பாதுகாப்பைச் சோதனை செய்ய உலகளவில் பல அமைப்புகள் உள்ளன. அவை கார்களை மோதவிட்டு அதில் ஆகும் சேதங்களைக் கணக்கிட்டு 1 முதல் 5 ஸ்டார்கள் வரை வழங்குகின்றன. இதில் சர்வதேச அளவில் குலோபல் என்கேப் ரேட்டிங் தான் பிரபலமானது. இந்த அமைப்பு சர்வதேச அளவில் பல நிறுனவங்களில் கார்களை கிராஷ் டெஸ்ட் செய்துள்ளது.
ஆனால் உலகளவில் பிரபலமான ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் இதுவரை அதன் எந்த கார்களையும் எந்த கிராஷ் டெஸ்ட் அமைப்பு மூலமும் கிராஷ் டெஸ்ட் செய்ததில்லை. உலகளவில் பலருக்குப் பரிட்சியமான இந்த ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் சொகுசு கார்களுக்கு பெயர் பெற்றது. இந்த கார் நிறுவனம் தனது ஒரு காரை கூட கிராஷ் டெஸ்ட் செய்ததில்லை எனச் சொன்னால் பலரும் நம்ப மறுத்துவிடுவார்கள். ஆனால் உண்மை அது தான்.
உலகில் பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய காரை அறிமுகப்படுத்தினால் அதை முதல் வேலையாக குலோபல் என்கேப்பிற்கு கொண்டு வந்து கிராஷ் டெஸ்ட் செய்யும். அங்குக் காரை எப்படி எல்லாம் விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறதோ அப்படி எல்லாம் காரை மோதவிட்டு டெஸ்ட் செய்யப்படும். அதில் ஆகும் சேதங்களை கணக்கிட்டுத் தான் ஸ்டார் ரேட்டிங் வழங்கப்படும்.
இப்படியாக கார் கிராஷ் டெஸ்ட் செய்யப்படும் போது ஹைஸ்பீடில் எடுக்கப்படும் வீடியோக்கள் கூட பொது வெளியில் காட்டப்படும் இதில் ஒரு நாளும் நீங்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரை பார்த்திருக்க மாட்டீர்கள் அப்படிப் பார்த்திருந்தால் அது கிராஃபிக்ஸாக இருக்கும் அல்லது போலியாக இருக்கும்.
சரி இவ்வளவு பெரிய கம்பெனி அதுவும் பெரும் பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் கார் ஏன் கிராஷ் டெஸ்ட் செய்யப்படுவதில்லை என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒரு கார் கிராஷ் செய்யப்பட வேண்டும் என்றால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் 5 கார்களை சோதனைக்காக அனுப்ப வேண்டும். ஒவ்வொரு காரும் ஒவ்வொரு விதமாக மோதவிடப்படும்.
இந்த டெஸ்டிற்கு அனுப்பப்படும் கார் அப்படியே வாடிக்கையாளர்களுக்கு விற்பனையாகும் அதே காராக இருக்க வேண்டும். ஆனால் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாகக் காரை கஸ்டமைஸ் செய்து விற்பனை செய்கிறது. அதனால் ஒவ்வொருவருக்கும் கிராஷ் டெஸ்ட் செய்வது என்பது சாத்தியமே இல்லாத ஒரு விஷயமாக இருக்கும்.
இது மட்டுமல்ல ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காரை தயாரிக்க இந்திய மதிப்பில் ரூ5 கோடி வரை குறைந்த பட்சம் செலவாகும். இதுவே ஒரு காரை கிராஷ் டெஸ்ட் செய்ய வேண்டும் என்றால்5 கார்கள் தயாரிக்க வேண்டும் அதற்கான செலவு மிகவும் அதிகம். இவ்வளவு செலவு செய்தால் இந்த கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வாடிக்கையாளருக்கு விற்கப்படும் கார் கஸ்டமைஸ் செய்யப்படுவதால் மாறுபடும்.
இதனால் மொத்தத்தில் கிராஷ் டெஸ்ட் செய்வது என்பது ரோல்ஸ்ராய்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு முடியாத காரியம் அதனால் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் தனது எந்த காரையும் கிராஷ் டெஸ்ட் செய்வதில்லை. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








