ஏதோ கடமைக்காக எல்லாம் கொடுக்கல! வாகன மேனுவல் புக் உள்ள இவ்வளவு மேட்டர் இருக்குது பாருங்க!
நாம் எல்லோருக்கும் கார் பைக் என்றால் மிகவும் பிடிக்கும். நாம் சொந்தமாக ஒரு கார் அல்லது பைக்கை வாங்கினால் அது எப்படியெல்லாம் வேலை செய்கிறது. என்னென்ன ஆப்ஷன்கள் எல்லாம் இருக்கிறது. அதை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம். ஆனால் இப்படியாக நாம் புதிய கார் வாங்கும் போது அதைப்பற்றிய மேனுவலை நாம் வாங்கியிருப்போம்.
பொதுவாக இந்த மேனுவல் காரின் கிளவ் பாக்ஸில் தான் பெரும்பாலும் இருக்கும். புதிதாக கார் வாங்கியவர்கள் இந்த புத்தகத்தை ஒரு சில மாதங்களுக்கு காரின் கிளவ் பாக்ஸில் தான் இதை வைத்திருப்பார்கள். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் இதைத் திறந்து கூட பார்த்திருக்க மாட்டோம். இந்த பதிவில் நாம் புதிதாக கார் பைக் வாங்கியவர்கள் ஏன் அதன் மேனுவலை படிக்க வேண்டும் எனக் காணலாம்.

சரியான அளவுகள்
ஒரு காருக்கு பாராமரிப்பு என்பது அவசியம், பராமரிப்பு என்றால் இன்ஜின் ஆயில், டயர் பிரஷர், பிரேக் ஆயில் போன்ற விஷயங்களும் அடங்கும். ஒவ்வொரு காருக்கு இவை எல்லாம் மாறுபடும் உங்கள் காரின் இன்ஜினிற்கு என்ன வகையான ஆயில் எவ்வளவு கால இடைவெளியில், எந்த அளவிற்கு மாற்ற வேண்டும். பிரேக் ஆயிலை எப்பொழுது மாற்ற வேண்டும். காரின் டயர்களில் எவ்வளவு பிரஷர் இருக்க வேண்டும். என்ற தகவல்கள் எல்லாம் இருக்கும்.
கார் குறித்த தகவல்கள்
ஒரு கார் என்பது ஒரு பொருள் அல்லது அதில் ஆயிரக்கணக்கான உதிரிப்பாகங்கள் உள்ளது. இதையெல்லாம் சேர்ந்து வைத்து செய்த இன்ஜினியிரிங் தான் கார். இந்த உதிரிப் பாகங்கள் குறித்த அனைத்து தகவல்களும் இந்த மேனுவலில் தான் இருக்கும் உதாரணமாக காரின் பேட்ட்டரி, லைட், ஸ்டிரிங் சிஸ்டம், கியர் சிஸ்டம் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் இதில் இருக்கும்.
எது எது எங்கெங்கு இருக்கு?
எல்லா கார்களும் ஒரே மாதிரியாகத் தயாரிக்கப்படுவதில்லை ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வடிவமைப்பில் காரை உருவாக்குகின்றன. இதனால் நீங்கள் வாங்கியுள்ள காரில் எந்தெந்த பொருட்கள் எங்கெங்கு இருக்கிறது என்பதைத் தகவல் இந்த மேனுவலில் தான் இடம் பெற்றிருக்கும். உதாரணமாக பெட்ரோல் டேங்கை திறக்கும் பட்டன்/லிவர், காருக்கு சாவி போடும் இடம் எனப் பல தகவல்கள் காருக்கு கார் மாறும். உங்கள் காரில் எங்கிருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
டேஷ் போர்டு லைட்கள்
பொதுவாக ஒரு காரின் டேஷ்போர்டில் காரில் ஏதாவது பிரச்சனை இருந்தால் எச்சரிக்கை ஒளி மிளிரும். ஒவ்வொரு எச்சரிக்கை ஒளிக்கும் என்னென்ன அர்த்தம்? எந்தெந்த நேரங்களில் இந்த ஒளி மிளிரும் போன்ற விஷயங்களை இந்த மேனுவலில் தான் தெரிந்து கொள்ள முடியும்.
வாரண்டி தகவல்
ஒரு புதிய கார் அல்லது பைக்கை வாங்கினால் அதற்கு வாரண்டி வழங்கப்படும். இந்த வாரண்டி குறித்த தெளிவான,விரிவான தகவல்கள் எல்லாம் இந்த மேனுவலில் தான் இருக்கும். அதை படித்துத் தெரிந்து கொண்டால் தான் வாகனங்களில் பிரச்சனை ஏற்பட்டால் வாரண்டியை கோர வசதியாக இருக்கும்.
புதிய வசதிகள்
பொதுவாக எல்லா வாகனங்களிலும் இருக்கும் வசதிகள் உங்கள் வாகனத்திலிருந்தாலும் புதிதாக சில வசதிகள் உங்கள் வாகனத்திற்கு எனப் பிரத்தியேகமாக இருக்ககூடும். இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் இந்த மேனுவலில் இருக்கும். அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இப்பொழுது ஏன் ஒரு வாகனத்தின் மேனுவலை படிப்பது அவசியம் எனப் புரிகிறதா? இப்பொழுதே ! உங்கள் வாகனத்தின் மேனுவலை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications