இதை எல்லா நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் மறைச்சிடுவாங்க! இவிகளை 100% சார்ஜ் செய்தால் என்னவாகும் தெரியுமா?
இன்று எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகமாகிவிட்டது. ஸ்கூட்டர் முதல் கார்கள் வரை எலெக்டரிக் வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால் இன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்க பலரும் தயங்குவது ரேஞ்ச் தான் ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட தூரம் பயணிக்க முடியாமல் இருப்பதால் பலர் இந்த ரக வாகனங்களை வாங்க யோசிக்கின்றனர்.
அதே போல எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கிய சிலர் வாகனம் வாங்கிய புதிதில் அதிக ரேஞ்ச் கிடைத்தது. தற்போது ரேஞ்ச் குறைந்துவிட்டது எனக் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்படியாக ரேஞ்ச் குறைவதற்கு என்ன காரணம்? பேட்டரி சரியாக வேலை செய்கிற என்பதைப் புரிந்து கொள்வது எப்படி? காணலாம் வாருங்கள்.

இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் பேட்டரி எப்படி வேலை செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். எலெக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் அயான் பேட்டரிகள் தான் பயன்படுத்தப்படுகிறது. இதில் கிராஃபைட் ஆனோடாகவும், லித்தியம் கேத்தோடாகவும் பாசிடிவ் மற்றும் நெகடிவ் எலெக்ட்ரோடுகளாக செயல்படுகிறது.
இந்த இரண்டிற்கும் இடையில் ஒரு திரவ அமைப்பில் உள்ள ஒன்றின் மூலம் கிராஃபைட் மற்றும் லித்தியம் மாலிக்கயூல்கள் எலக்ட்ரான்களை எக்ஸ் சேஞ்ச் செய்து கொள்ளும். நீங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் போது எலக்ட்ரான் கேத்தோடிலிருந்து ஆனோடிற்கு மின் சக்தியைக் கடத்தி செல்லும்.
இதுவே ஆனோடிலிருந்து கேத்தோடிற்கு மின் சக்தியைக் கொண்டு வருவது மூலம் பேட்டரியிலிருந்து சார்ஜ் வெளியேறும். இதைத் தான் மின் மோட்டாருக்கு கடத்தி அதை இயங்க வைத்து அதன் மூலம் காரை இயங்க வைக்க முடிகிறது. சரி இதில் அப்படி அதன் திறன் குறைகிறது எனப் பார்ப்போம்.
எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் போடும் பலர் அதன் முழு ரேஞ்சும் கிடைக்கும் அளவிற்கு எப்பொழுதும் 100 சதவீதம் பேட்டரியை சார்ஜ் செய்கிறார்கள். ஆனால் பேட்டரியை அதன் அளவை விட அதிக நேரம் சார்ஜ் ஏறினால் கேத்தோடு மற்றும் ஆனோடு பகுதியில் உள்ள ஆக்டிவ் மெட்டிரியலின் அளவு குறையும்.
இதனால் நாளடைவில் பேட்டரியிலிருந்து வெளியேறும் மின்சக்தியின் அளவு குறையும். ஏதோ ஒரு முறை இரு முறை இப்படி சார்ஜ் போடுவதால் இதன் அளவு மாறுபடுமா என்று கேட்டால் அதற்குப் பதில் இல்லை. ஆனால் நீண்ட நாட்களாக இப்படியாக பேட்டரியை முழு அளவு அல்லது அதற்கு அதிகமாக சார்ஜ் போடும் பழக்கம் இருந்தால் அந்த பேட்டரி இந்த நிலையை அடையும்.
அதனால் வல்லுநர்கள் எப்பொழுதும் லித்தியம் அயான் பேட்டரியை 80 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் போடாமலும் அதே நேரம் 20 சதவீத்திற்கு கீழ் சார்ஜ் வராத அளவிலும் மெயின்டெயின் செய்தால் நீண்ட நாட்கள் பேட்டரி உழைக்கும் நாளானலும் தன் திறன் குறையாமல் இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.
பேட்டரிக்குள் சார்ஜ் குறிப்பிட்ட அளவிற்கு மேல் குறையும் போதும், அதிகமாகும் போதும் அழுத்தம் ஏற்படும், இந்த அழுத்தம் காரணமாகத் தான். பேட்டரியின் திறன் படிப்படியாகக் குறைகிறது. இதனால் சார்ஜ் குறைந்துவிடாமலும் அதிகமாகிவிடாமலும் வைத்துக்கொள்வது சிறந்தது.
இது மட்டுமல்ல வேறு சில காரணங்களாலும் வாகனத்தின் பேட்டரி ஆயுள் குறைகிறது. முக்கியமாக டிசி ஃபாஸ்ட் சார்ஜர், பல நிறுவனங்கள் இந்த சார்ஜரை ஒரு ஆப்ஷனாக வழங்குகின்றனர். இது வெகு விரைவாக பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றிவிடுகிறத. ஆனால் இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் பேட்டரியின் ஆயுள் குறையும். அவசரக் காலத்திற்கு மட்டும் பயன்படுத்துவது சிறந்தது.
அதே போலத் தட்பவெப்ப நிலையும் பேட்டரியின் ஆயுளுக்குக் காரணம் அதிகமான வெப்பம் மற்றும் அதிகமான குளிர் ஆகிய இரண்டும் பேட்டரியின் ஆயுளைக் குறைத்துவிடும். இப்படியான அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர் நேரங்களில் பேட்டரி 20-40 சதவீதம் குறைவான ரேஞ்ச் தான் தரும் என எதிர்பார்க்கலாம்.
அதிகமான பயன்பாடும் பேட்டரியின் ஆயுளைக் குறைக்கும். பொதுவாக ஒரு பேட்டரி இத்தனை முறைக்கு மேல் சார்ஜ் ஏறினால் அது தாங்காது என்ற ஒரு கணக்கு இருக்கும். நீங்கள் தினமும் பயன்படுத்தினால் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அதன் ஆயுள் குறைந்து தான் போகும்.
பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு தொழிற்நுட்பங்களை கையாண்டு வருகின்றனர். இதைப் பயன்படுத்துவது மூலம் பேட்டரியின் ஆயுளை அதிகரிக்கச் செய்ய முடியும். தொடர்ச்சியான பராமரிப்பும், கவனமும் தான் பேட்டரிகளுக்கு முக்கியம்.
இதனால் நீங்கள் வீட்டில் சார்ஜ் ஏற்றும் போது மெதுவாக சார்ஜ் ஏறும் சார்ஜர்களை கொண்டு 80 சதவீதத்திற்கு மிகாமல் உங்கள் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள். அதே போல சார்ஜ் 20 சதவீதத்திற்குக் குறையாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








