காருக்குள் அரிசி பருப்பு சாதம் இருக்குதான்னு தேடி! ஊட்டியில் காரையே பந்தாடிய யானை! வைரலாகும் வீடியோ!

ஊட்டி கோத்தகிரி சாலையில் ஹூண்டாய் எக்ஸென்ட் காரை யானை ஒன்று பந்தாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

சாலையில் வாகனங்கள் பயணிக்கும் போது நாம் எதிர்களும் முக்கியமான பிரச்சனை சாலையின் குறுக்கே விலங்குகள் வந்து பயணத்தை தொந்தரவு செய்வதுதான். குறிப்பாக மலைப் பகுதிகளில் இப்படியாக அடிக்கடி சாலையில் விலங்குகள் வருவதை நம்மால் காண முடிகிறது. இரவு நேரங்களில் கொடிய விலங்குகளான புலி, சிறுத்தை கூட சில நேரம் சாலையில் வருவதை காண முடிகிறது.

ooty elephant attack hyundai car

இப்படியாக அடிக்கடி சாலையில் வந்து வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்யும் ஒரு முக்கியமான விலங்காக யானை இருக்கிறது. யானை உணவு தேடி ரோட்டிற்கு வந்து வயல்வெளிகளை அழித்து, வீடுகளை அழித்து, மனிதர்களை தாக்கி அட்டகாசம் செய்து கொண்டு பின்பு மனிதர்கள் துரத்திய பின்பு யானை காற்றுக்குள் ஓடும். இப்படியாக சமீபத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டி கோத்தகிரி சாலையில் யானை ஒன்று காரை பந்தாடியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு குடும்பம் வாடகைக்கு காரை எடுத்துக்கொண்டு ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் வாடகைக்கு வந்த ஹூண்டாக் எக்ஸென்ட் காரில் ஊட்டியிலிருந்து கோத்தகிரி சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சாலையின் குறுக்கே யானை ஒன்று நின்று கொண்டுள்ளது. இதை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்த டிரைவர் காரை நிறுத்தியுள்ளார்.

ooty elephant attack hyundai car

காரை தொடர்ந்து ஓட்டினால் யானை தொடர்ந்து வந்து காரை தாக்கும் என்பதால் அவர் காரை நிறுத்தியுள்ளார். அங்கிருந்த யானை காரை கண்டதும் காரை நோக்கி ஓடிவந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காருக்குள் இருந்த பயணிகள் அனைவரும் காரில் இறங்கி காரிலிருந்து இறங்கி அங்கிருந்து தப்பி ஓடி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் காரை விட்டு விட்டு சென்று விட்டனர்.

அப்பொழுது காரின் அருகே வந்த யானை காரை தாக்கியது. மேலும் காரின் ஜன்னல் கதவுகள் எல்லாம் திறந்து இருந்ததால் காரின் ஜன்னல் கதவு வழியாக தன் தும்பிக்கையை நீட்டி உள்ளே இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து ரோட்டில் சிதறடித்து விளையாடியது. மேலும் இந்த காரின் டிரைவர் பக்க கதவு சரியாக அடைக்காமல் இருந்ததால் அந்தக் கதவை யானை தாக்கி சேதம் செய்தது. இதனால் காருக்கு மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது.

ooty elephant attack hyundai car

ஒரு கட்டத்தில் யானை இந்த காரையே தூக்கி பந்தாடி சாலையின் ஓரமாக வீசியது. யானை இந்த காரை தாக்கி கொண்டிருந்தபோது அங்கிருந்த மக்கள் எல்லாம் இந்த யானையின் கவனத்தை சிதறடிப்பதற்காக கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் யானை இந்த காரை பந்தாடுவதிலேயே குறியாக இருந்தது. இந்த சாலையில் அடிக்கடி யானைகள் வந்து செல்கிறது. ஆனால் இதுவரை யானைகள் எந்த வாகனத்தையும் தாக்கியது கிடையாது, இதுவே முதன்முறை.

இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதை பகிர்ந்து வருகின்றனர். நல்ல வேலையாக இந்த காரில் இருந்த பயணிகள் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை. காருக்கு மட்டுமே சேதம் அதிகமாக இருக்கிறது.

மலைப்பகுதி மற்றும் காட்டுப்பகுதியில் வாகனம் ஓட்டும் போது நாம் ஒரு விஷயத்தை கவனமாக இருக்க வேண்டும், வாகனத்தை எக்காரணத்தை கொண்டும் ரோட்டில் நிறுத்தக்கூடாது. முடிந்த அளவிற்கு நகர் பகுதிக்குள் சென்று தான் காரை நிறுத்த வேண்டும். சிலர் காட்டுப்பகுதியில் இயற்கை ரசிப்பதற்காகவும் வேறு பல விஷயங்களுக்காகவும் கார்களை நிறுத்தி வருகின்றனர். இப்படியாக கார்களை நிறுத்தும் போது வனவிலங்குகள் வந்து தாக்கும் அபாயம் இருக்கிறது.

ஆக இரவு நேரங்களில் இப்படியான காட்டுப்பகுதி, மலைப்பகுதிகளில் வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். நீங்கள் இப்படியாக யானை முன்பு வாகனத்தில் சென்று சிக்கிக் கொண்டால், முதலில் பதற்றம் அடையாமல் காருக்குள் இருக்க வேண்டும். நீங்கள் பதறினால் நிச்சயம் அது உங்கள் வாகனத்தின் அசைவுகள் வழியாக யானைக்கு தெரிந்து அது உங்களை தாக்குவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் நீங்கள் முதலில் பதற்றம் இல்லாமல் இந்த சூழ்நிலையை கையாள வேண்டும்.

சாலையில் யானையை கண்டதும் வாகனத்தை நிறுத்துவது என்பது சரியான விஷயம் தான். ஆனால் வாகனத்தை நிறுத்தினாலும் அதன் இன்ஜின் ஆசையாமல் தொடர்ந்து கூச்சலிடாமல் அமைதியாக காருக்குள் இருக்க வேண்டும். பெரும்பாலும் கூச்சல் சத்தம் எதுவும் இல்லாமல் இருந்தால் யானை தானாக தனது வேலையை பார்த்து நகர்ந்துவிடும். அதன் பின்பு நீங்கள் வாகனத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்.

ஒரு வேளை நீங்கள் கூச்சலிட்டோ பதறியோ கத்தினால் யானை உங்களை நோக்கி வர வாய்ப்பு இருக்கிறது. அப்படியே யானை உங்களை நோக்கி வந்தாலும் நீங்கள் முதலில் உங்கள் காரின் ஜன்னல் கண்ணாடிகளை முழுவதுமாக ஏற்றி விட வேண்டும். யானை எக்காரணத்தை கொண்டும் உங்களை தன் தும்பிக்கையால் தொடமுடியாத அளவு உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின்பு காரை ரிவர்ஸ் கியரில் போட்டு யானை உங்களை நோக்கி வர வர முடிந்த அளவுக்கு நான் காரை பாதுகாப்பாக நீங்கள் மெதுவாக பின்னோக்கி நகர்த்த வேண்டும். பல நேரங்களில் இந்த யுக்தி வெற்றியடைந்துள்ளது. கார் பின்னோக்கி செல்ல செல்ல யானை காரை துரத்துவதை விட்டுவிட்டு வேறு வேலையை பார்க்க சென்று விடும். அதனால் இதை நீங்கள் நிச்சயம் முயற்சி செய்து பார்க்கலாம்.

ஒருவேளை நீங்கள் காரை ரிவர்சில் எடுக்க வழியில்லாத சூழ்நிலையில் இருந்தால் உங்களுக்கு யானை உங்கள் காரை நோக்கி வரும்போது நீங்கள் காரில் இருந்து இறங்கி பாதுகாப்பாக செல்ல வேறு ஒரு இடம் இருந்தால் அதை நிச்சயம் செய்யலாம் இதுவும் தவறல்ல. பெரும்பாலும் இப்படியாக வனவிலங்குகள் சாலையில் நின்றால் அது வாகனங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுவே நமக்கு பாதுகாப்பானது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று மக்கள் தொகை பெருக்கத்தால் காடுகள் மற்றும் மலைகள் வழியாக நாம் சாலை அமைத்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதனால் உணவு தேடி வனவிலங்குகள் சாலையில் வந்து நிற்பதை நம்மால் காண முடிகிறது. இப்படியாக வனவிலங்குகள் இருக்கும்போது நீங்கள் பதற்றம் அடையாமல் சாதாரணமாக அமைதியாக இந்த சூழ்நிலையை கையாண்டாலே எளிதாக எந்த பிரச்சினையும் இல்லாமல் உயிர் தப்பி விடலாம்.

Article Published On: Friday, October 27, 2023, 10:41 [IST]
English summary
Wild elephant charges hyundai xcent car transporting tourists on ooty kotagiri road viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X