கார் ஆஃப் தி இயர் விருதுக்கு போட்டி போடும் கார்கள்!! இறுதியில் வெல்ல போவது எந்த கார்?
உலகளவில் கார்கள் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுப்படுக்கின்றன. இன்னும் சொல்ல போனால், அதில் சில நிறுவனங்கள் மட்டுமே நம் நாட்டில் கார்களை விற்பனை செய்கின்றன. ஆதலால் நம் நாட்டில் பிரபலமாக இருக்கும் கார் தான் உலகளவில் பலரால் வாங்கப்படுகிறது என எண்ணுவது தவறு. அதுமட்டுன்றி நாட்டிற்கு நாடு வாடிக்கையாளர்களின் தேவையும் மாறுப்படுகிறது.
இதையெல்லாம் ஏன் நான் இப்போது கூறுகிறேன் என்றால், உலகளாவிய கார் ஆஃப் தி இயர் விருதுகளுக்கு இறுதி செய்யப்பட்டுள்ள கார்களை வேர்ல்டு கார் அவார்ட்ஸ் (WCA) அமைப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுதான், உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் பல்வேறு கார் நிறுவனங்களால் பல கார்கள் புதியதாக அறிமுகப்படுத்த படுகின்றன. அவை அனைத்தும் இந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.

ஏனெனில் உலகளாவிய கார் ஆஃப் தி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டுமெனில், அவை சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். அதாவது, சில வழிக்காட்டுதல்களையும், வழிமுறைகளையும் கார்கள் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். அந்த வழிமுறைகள் என்னவென்றால், பரிந்துரைக்கப்படும் வாகனம் அனைவராலும் வாங்கப்படும் அளவிற்கான விலையில், அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படுவதாக இருத்தல் வேண்டும்.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்கள் ஒரு மாதத்தில் 10,000 - 20,000 யூனிட்கள் கூட உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த அளவிற்கு இல்லையென்றாலும், குறைந்தப்பட்சம் ஒரு வருடத்தில் 10,000 யூனிட்களாவது தயாரிக்கப்படும் காராக இருக்க வேண்டும். அடுத்த முக்கியமான விதிமுறை என்னவென்றால், அந்த கார் 2022 ஜனவரி 1ஆம் தேதி - 2023 மார்ச் 30ஆம் தேதிக்குள் இரு கண்டங்களில் விற்பனை செய்யப்பட்டதாக/ விற்பனை செய்யப்படுவதாக இருக்க வேண்டும்.

அதேபோல், குறைந்தது இரு முக்கிய கார் சந்தைகளிலாவது விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்க வேண்டும். நமது இந்தியா, சீனா, ஐரோப்பா, யுஎஸ்ஏ, லத்தீன் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா என்பவை அந்த முக்கிய கார் சந்தைகளுள் அடங்குகின்றன. கீழ்காணும் கார்கள் மொத்தம் 30 நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆட்டோமொபைல் வல்லுநர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டவை ஆகும். இறுதியில், விருதுக்கு தேர்வு செய்யப்படும் கார்கள் வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறவுள்ள சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் வெளியீடு செய்யப்பட உள்ளன.
2023 வேர்ல்டு கார் ஆஃப் தி இயர் விருதுக்கு இறுதி செய்யப்பட்டுள்ள கார்கள்
1. ஆல்ஃபா ரோமியோ டொனாலே
2. பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே
3. நிஸான் அரியா
4. நிஸான் இசட்
5. கியா நைரோ
6. மஸ்டா சி.எக்ஸ்-60
7. மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ்
8. பிஎம்டபிள்யூ எக்ஸ்1 / ஐ.எக்ஸ்1
9. ஹோண்டா எச்.ஆர்-வி/ இசட்.ஆர்.வி
10. ஹூண்டாய் அயோனிக் 6

2023 வேர்ல்டு லக்சரி கார் ஆஃப் தி இயர் விருதுக்கு இறுதி செய்யப்பட்டுள்ள கார்கள்
1. ஜெனிசிஸ் ஜி90
2. பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்/ ஐ7
3. லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர்
4. லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்
5. லூசிட் ஏர்
2023 வேர்ல்டு அர்பன் (நகர்புறம்) கார் ஆஃப் தி இயர் விருதுக்கு இறுதி செய்யப்பட்டுள்ள கார்கள்
1. சிட்ரோன் சி3
2. ஒரா ஃபங்கி கேட்/ ஹாமாவோ
3. ஃபோக்ஸ்வேகன் டைகோ/ நிவுஸ்

2023 வேர்ல்டு கார் டிசைன் ஆஃப் தி இயர் விருதுக்கு இறுதி செய்யப்பட்டுள்ள கார்கள்
1. காடிலாக் லிரிக்
2. ஹூண்டாய் அயோனிக் 6
3. லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர்
4. லூசிட் ஏர்
5. நிஸான் இசட்
2023 வேர்ல்டு எலக்ட்ரிக் வைகல் ஆஃப் தி இயர் விருதுக்கு இறுதி செய்யப்பட்டுள்ள கார்கள்
1. பிஎம்டபிள்யூ ஐ7
2. ஜெனிசிஸ் ஜிவி60
3. ஹூண்டாய் அயோனிக் 6
4. கியா நைரோ இவி
5. லூசிட் ஏர்


Click it and Unblock the Notifications









