உப்பு வச்சு பேட்டரி தயாரித்த சீன நிறுவனம்! எலெக்ட்ரிக் கார் விலையை தரமட்டத்துக்கு குறைச்சுட்டாங்க!
எலெக்ட்ரிக் வாகனங்களிலேயே மிகப்பெரிய பிரச்சனையை என்றால் அதன் பேட்டரின் தான் வாகனத்தின் பாதிக்கும் அதிகமான விலை பேட்டரிக்காக மட்டுமே கொடுக்க வேண்டியது இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்கு அளவிற்குத் திறன் கொண்ட பேட்டரியாக லித்தியம் அயான் பேட்டரி இருக்கிறது.
ஆனால் இந்த பேட்டரிகளுக்கு மூலப்பொருளாக லித்தியம் மற்றும் கோபால்ட் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. அதன் விலை மிக அதிகமாக இருப்பதால் தற்போது உள்ள பெட்ரோல்/ டீசல் கார்களுக்கான விலையில் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்க முடிவதில்லை. இதனால் மாற்று வழியை யோசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த இவி தயாரிப்பாளரான ஜேவிசி நிறுவனம் உலகின் முதல் சோடியம் அயான் பேட்டரி பவரில் இயங்கும் காரை தயாரித்துள்ளது. இந்த பேட்டரி லித்தியம் அயான் பேட்டரிக்கு சமமான பவரை வழங்குகிறது. ஆனால் விலையைப் பார்த்தால் லித்தியம் அயான் பேட்டரியின் விலையில் 10 சதவீதம் தான் இருக்கிறது.
இந்த பேட்டரியை பிஜிங்கில் உள்ள ஹினா பேட்டரி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த பேட்டரி 25 கிலோ வாட் ஹவர் திறன் கொண்டது. இந்த பேட்டரி மூலம் ஜேஏசி இவி நிறுவனம் உருவாக்கிய கார் முழு சார்ஜில் 250 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. அதிகரித்து வரும் லித்தியத்தின் விலையை ஒப்பிட்டால் இந்த பேட்டரி இவிகளுக்கு சிறப்பாக இருக்கும்.
சோடியம் அயான் பேட்டரியின் குறைந்த விலை மட்டுமல்ல சிறந்த பெர்ஃபாமென்ஸ் திறனைக் கொண்டது. இது போக அதிக பாதுகாப்பானதும் கூட இது லித்தியம் அயான் பேட்டரிக்கு நிச்சயம் ஒரு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது மட்டுமல்ல சோடியம் அயான் பேட்டரி லித்தியம் அயானை விடக் குறைவான அழுத்தம் கொண்டது.
இதனால் இந்த சோடியம் அயான் பேட்டரி குறைவான வெப்ப சூழ்நிலையிலும் சிறப்பாக வேலை செய்யும். அதை நேரம் சார்ஜிங் செய்யும் நேரமும் வேகமாக இருக்கும். இந்த பேட்டரியுடன் காரை சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த பிஓய்டி நிறுவனம் ஏற்கனவே சர்வதேச அளவில் தனது கால் தடத்தைப் பதித்து விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. தற்போது இந்த நிறுவனம் 40 நாடுகளில் ஆண்டிற்கு 20 லட்சம் கார்களை விற்பனை செய்கிறது. ஜப்பான், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பா ஆகியவற்றில் விற்பனை செய்து வருகிறது.
தற்போது சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சோடியம் அயான் பேட்டரி இந்தியாவிலும் பயன்பாட்டிற்கு வந்தால் இந்தியாவில் வெளிநாடுகளின் துணை இல்லாமல் இந்த பேட்டரியை நாமே வடிவமைக்கொள்ள முடியும். இதனால் எலெக்ட்ரிக் கார்களின் விலை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








