மஹிந்திரான்னா சும்மான்னு நினைச்சீங்களா! உலகத்துலேயே வேகமான காரை அறிமுகப்படுத்தி அசத்திட்டாங்க!

உலகத்தில் மிக வேகமான பிக்கப் திறன் கொண்ட எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனத்தின் துணை நிறுவனமான பின்இன்ஃபாரின்னா நிறுவனம்

தெலங்கானா அரசு ஐதராபாத்தில் இ-மோட்டார் ஷோவை நடத்தியது. இந்த ஷோவில் ஒரு அங்கமாக உலகின் வேகமான முழு எலெக்ட்ரிக் ஹைப்பர் ஜிடி பேட்டிஸ்டா காரை முதன் முறையாக ஆட்டோமொபில் பின்இன்ஃபாரினா நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் இத்தாலியை சேர்ந்த சொகுசு கார் பிராண்ட் நிறுவனமாக இருந்தாலும் இந்த நிறுவனத்தை நடத்தி வருவது இந்தியாவைச் சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் தான்.

மஹிந்திரான்னா சும்மான்னு நினைச்சீங்களா! உலகத்துலேயே வேகமான காரை அறிமுகப்படுத்தி அசத்திட்டாங்க!

இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஜிடி பாட்டிஸ்டா கார் உலகின் மிக அதிகமான பிக்கப்ப திறனை் கொண்ட காராகும். இந்த காரில் 120 கிலோ வாட் ஹவேர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பவரில் மட்டுமே இந்த கார் இயங்குகிறது. இந்த கார் முழு பேட்டரி பவரில் 476 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த ஹைப்பர் ஜிடி பாட்டிஸ்டா காரின் பாடி முழுவதும் கார்பன் ஃபைபர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேஸில் முதற்கொண்டு கார்பன் ஃபைபர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கார் விரைவாக பிக்கப் திறனைப் பெற வேண்டும் என்றால் குறைவான எடையில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படியாக கார்பன் ஃபைபரை கொண்டு காரின் பாடி மற்றும் சேஸிஸ் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பிக்கப் திறன் என்னவென்றால் இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 1.86 நொடியில் பிக்கப் செய்துவிடும். இதுவே 0-200 கி.மீ வேகத்தை வெறும் 4.75 நொடியில் பிக்கப் செய்து விடும். இந்த காரில் மொத்தம் 5 விதமான டிரைவிங் மோட்கள் உள்ளன.

மஹிந்திரான்னா சும்மான்னு நினைச்சீங்களா! உலகத்துலேயே வேகமான காரை அறிமுகப்படுத்தி அசத்திட்டாங்க!

சிட்டி பயணம் முதல் அதன் முழு திறனைக் காட்டும் வரை அனைத்து மோட்களும் உள்ளன. இந்த கார் ஒரு லிமிடெட்ட காராக மட்டுமே தயாரிக்கப்படவுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த காரின் வடிவமைப்பு ஒரு ஏரோடைனமிக்ஸ் மார்டன் டிசைனில் வடிவமைத்துள்ளனர். இந்த காரில் மொத்தம் 4 எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் மூலம் இந்த காரில் 1900 பிஎஸ் பவரையும் 2300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த கார் மட்டுமல்ல இந்த காரின் சார்ஜிங் சிஸ்டமும் படு வேகமாக இருக்கும்படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. 20-80 சதவீதமான பேட்டரி வெறும் 25 நிமிடங்களில் சார்ஜ் ஏறும்படி டிசைன் செய்துள்ளனர்.

மஹிந்திரான்னா சும்மான்னு நினைச்சீங்களா! உலகத்துலேயே வேகமான காரை அறிமுகப்படுத்தி அசத்திட்டாங்க!

இந்த காரில் பயணிக்கும் போது சென்னையிலிருந்து முழு சார்ஜ் செய்துவிட்டுக் கிளம்பினால் மதுரை வரை சென்று விடலாம். இது முழு சார்ஜில் 476 கி.மீ வரை பயணிக்கும் என்பதால் இது சாத்தியம் தான். ஆனால் இந்த கார் இந்தியாவில் எப்பொழுது விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனத்தில் மஹிந்திரா நிறுவனம் 4வது இடத்தில் இருக்கிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார் மார்கெட்டில் தன்னை லீடராக மாற்ற வேண்டும் என எலெக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் மும்முரமாக இந்நிறுவனம் களம் இறங்கியுள்ளது. இதற்காக வெளிநாட்டில் உள்ள பல நிறுவனங்களை வாங்கியுள்ளது. அப்படி வாங்கப்பட்ட நிறுவனம் தான் பின்இன்ஃபார்ரினா நிறுவனம்.

இந்நிறுவனம் தான் தற்போது உலகின் வேகமான பிக்கப் திறன் கொண்ட பாட்டிஸ்டா காரை இந்தியாவில் முதன் முறையாகக் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த காரின் விலை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. காரின் அதிகாரப்பூர்வ அறிமுகத்தின் போது இது வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 11, 2023, 16:00 [IST]
English summary
Worlds fastest electric car GT Battista unveiled in Hyderabad e motor show
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+