டாடா நிறுவனத்துக்கு பெரிய நஷ்டம் ஆகிவிடும்!! இந்த எம்ஜி எலக்ட்ரிக் கார் மட்டும் இந்தியாவுக்கு வந்தால்...!

வுலிங் பிங்குவோ இவி (Wuling Binguo EV) என்ற பெயரில் ஓர் விலை குறைவான எலக்ட்ரிக் கார் இந்தோனிஷியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கு இந்த எலக்ட்ரிக் காரின் விலை எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதையும், வுலிங் பிங்குவோ இவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதா என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.

சிறிய அளவிலான பட்ஜெட் விலை கார்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவிலும் அதனால்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ இவி மற்றும் டிகோர் இவி என விலை குறைவான எலக்ட்ரிக் கார்களை முதலில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் எப்போதோ முன்னிலை வகிக்க ஆரம்பித்துவிட்ட சீனாவில் எண்ட்ரீ-லெவல் எலக்ட்ரிக் கார்கள் பெரும்பாலான நிறுவனங்களில் இருந்து விற்பனை செய்யப்படுகின்றன.

wuling binguoev launched in indonesia

இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பிஒய்டி சீகுல் (BYD Seagull). இதன் விலை சீனாவில் வெறும் 79 ஆயிரம் சீன யுவான்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.9.4 லட்சம் ஆகும். சீன சந்தையில் இந்த காருக்கு விற்பனையில் வுலிங் பிங்குவோ இவி முக்கிய போட்டியாக விளங்குகிறது. இதன் விலை சீகுலை விட குறைவு (67 ஆயிரம் சீன யுவான்கள்) ஆகும்.

இந்த நிலையில், வுலிங் பிங்குவோ இவி எலக்ட்ரிக் கார் இந்தோனிஷியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வுலிங் கார் நிறுவனம் சீனாவில் பிரபலமான ஒன்றாக உள்ளது. இருப்பினும், மற்ற நாடுகளில் எம்ஜி பிராண்டின் கீழ் கார்களை வுலிங் நிறுவனம் விற்பனை செய்கிறது. தற்போது இந்தோனிஷியாவிலும், பிங்குவோ இவி எம்ஜி பிராண்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

wuling binguoev launched in indonesia

இந்தோனிஷியாவில் எம்ஜி பிராண்டில் அறிமுகம் செய்யப்படும் கார்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனை ஏற்கனவே எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் காரின் அறிமுகத்தின்போது பார்த்து இருந்தோம். இந்தோனிஷியாவில் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே இந்தியாவில் எம்ஜி கோமெட் இவி களமிறக்கப்பட்டது.

எம்ஜி பிங்குவோ இவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், டாடா டியாகோ இவி, டிகோர் இவி மற்றும் சிட்ரோன் இசி3 எலக்ட்ரிக் கார்களுக்கு நேரடி போட்டியாக விளங்கும். தொழிற்நுட்ப அம்சங்கள் சிறப்பானதாக வழங்கப்பட்டால், எம்ஜி பிங்குவோ இவி டாடா நெக்ஸான் இவி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கும் விற்பனையில் போட்டியாக இருக்கும்.

wuling binguoev launched in indonesia

இந்தோனிஷியாவில், பிங்குவோ இவி எலக்ட்ரிக் காரின் விலை 358 மில்லியன் (ரூ.19 லட்சம்) இந்தோனிஷியன் ரூபாயாவில் இருந்து 408 மில்லியன் (ரூ.21.9 லட்சம்) இந்தோனிஷியன் ரூபாயாவாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தோனிஷியாவில் ஏற்கனவே பிங்கோ என்ற பெயரில் ஒரு கார் விற்பனை செய்யப்படுகிறது. அதனுடன், புதிய பிங்குவோ இவி-ஐ குழப்பி கொள்ள வேண்டாம்.

வுலிங் பிங்குவோ இவி எலக்ட்ரிக் காரின் நீளம் 3,950மிமீ, அகலம் 1,708மிமீ, உயரம் 1,580மிமீ மற்றும் வீல்பேஸ் நீளம் 2,560மிமீ ஆகும். இதன்படி பார்க்கும்போது, பிஒய்டி சீகுல் எலக்ட்ரிக் காரை விட பிங்குவோ இவி அளவில் பெரியது ஆகும். இந்தோனிஷிய சந்தையில் இரு விதமான பேட்டரி ஆப்ஷன்களில் வுலிங் பிங்குவோ இவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

wuling binguoev launched in indonesia

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எம்ஜி கோமெட் இவி விலை குறைவான எலக்ட்ரிக் கார் என பல விளம்பரங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டாலும், அதன் தோற்றம் பெரும்பான்மையான இந்தியர்களை கவரவில்லை என்பதை ஒத்துக் கொண்டுத்தான் ஆக வேண்டும். ஆனால், பிங்குவோ இவி பார்ப்பதற்கும் ஸ்டைலாக உள்ளது. அதேநேரம், இந்த காரின் விலையும் பெரியதாக அதிகம் கிடையாது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 20, 2023, 22:23 [IST]
English summary
Wuling binguoev launched in indonesia price features check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X