இதோட அழகுக்கு முன்னால போர்ஷே கார்களே ஒன்னுமில்லாம ஆகிருச்சு.. சியோமி-யின் முதல் எலெக்ட்ரிக் காரா இது!!
உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமான சியோமி, அதன் முதல் எலெக்ட்ரிக் காரை அதிகாரப்பூர்வமாக இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. மறைப்புகள் இன்றி முழுமையாக கார் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. படங்கள் வாயிலாக அந்த கார் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், காரை உருவாக்க பயன்படுத்திய தொழில்நுட்பத்தையும் அது வெளிப்படுத்தி இருக்கின்றது.
சியோமி நிறுவனம், சியோமி இவி எனும் பிராண்டின்கீழே மின்சார வாகன உற்பத்தியில் களமிறங்கி இருக்கின்றது. எஸ்யூ7, இதுவே நிறுவனத்தின் முதல் மின்சார கார் மாடல் ஆகும். இதனை இரண்டு விதமான வெர்ஷன்களில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது சியோமி. நிறுவனம் இந்த தகவலை ஏற்கனவே உறுதி செய்துவிட்டது குறிப்பிடத்தகுந்தது.

எஸ்யூ7 மற்றும் எஸ்யூ7 மேக்ஸ் என இரு விதமான சீரிஸ்களில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எஸ்யூ7 ஓர் செடான் வகை எலெக்ட்ரிக் காராகும். இந்த கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் உலக புகழ்பெற்ற நிறுவனங்கள் பலவற்றின் தயாரிப்புகளுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.
மிக முக்கியமாக டெஸ்லா நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களுக்கு கடுமையான போட்டியாளனாக இந்த கார் விளங்கும். இந்த நோக்கிலேயே தன்னுடைய முதல் தயாரிப்பை தயார் செய்திருக்கின்றது, சியோமி. இந்த காரின் பெயரில் உள்ள எஸ்யூ என்கிற எழுத்துக்கள் ஸ்பீடு அல்ட்ரா என்பதற்கான அர்த்தம் ஆகும்.

ஆகையால், இந்த எலெக்ட்ரிக் மிக அதீத வேகத்தில் இயங்கும் என்பது துள்ளியமாக தெரிகின்றது. அதாவது, மிக சிறந்த திறனை வெளியேற்றக் கூடிய காராக அது இருக்கப் போகின்றது. இந்த காரின் வடிவமைப்பு செய்ததில் முக்கிய பங்களிப்பை நிறுவனத்தின் சேர்மேன் மற்றும் சிஇஓ-வான முக்கிய பங்கினை அளித்திருக்கின்றார்.
வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்த காரை சியோமி வடிவமைத்திருக்கின்றது. ஓர் வாகனமாக அது செயல்படுவதோடு நின்றுவிடாமல் ஓர் அசிஸ்டன்டை போல அந்த கார் செயல்படும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதற்காக சூப்பரான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இந்த காரில் சியோமி வழங்கி இருக்கின்றது.

இந்த காரை சியோமி நிறுவனம், சீனாவைச் சேர்ந்த மற்றுமொரு முன்னணி நிறுவனத்துடன் இணைந்தே தயார் செய்திருக்கின்றது. பிஏஐசி நிறுவனத்துடன் இணைந்தே நிறுவனம் இக்காரை தயார் செய்திருக்கின்றது. எஸ்யூ7 எலெக்ட்ரிக் காரில் முன் வீல் - பின் வீல் இயக்கம் மற்றும் பன்முக பேட்டரி பேக் ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த கார் 4997 x 1963 x 1455 ஆகிய அளவுகளில் தயார் செய்யப்பட இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. 19 அங்குல வீல் மற்றும் 20 அங்குல வீல் என இரு விதமான வீல் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்பட உள்ளன.

இதுதவிர, லிடார் சென்சார் ஆப்ஷனையும் சியோமி எஸ்யூ7 எலெக்ட்ரிக் காரில் வழங்க இருக்கின்றது. இதைவிட மிக முக்கியமான அம்சமாக ஹைபர் ஓஎஸ் இன்டெக்ரேஷன் வசதியும் இந்த காரில் வழங்கப்பட உள்ளது. இந்த அம்சத்தின் வாயிலாக காரை வீட்டுடன் இணைத்துக் கொள்ள முடியும்.
அதாவது, வீட்டில் உள்ள ஸ்மார்ட் கருவிகளை காரில் இருந்தபடியே கன்ட்ரோல் செய்ய முடியும். உதாரணமாக உங்கள் வீட்டில் ஸ்மார்ட் ஏசி அல்லது ஃபேன் உள்ளிட்டவை இருக்கும் எனில் அவற்றை காரில் இருந்தபடியே கன்ட்ரோல் செய்துக் கொள்ள முடியும். ஆகையால், வீட்டிற்குள் நுழையும் வீட்டை நக்கு ஏற்றவாறு தயார் நிலையில் வைத்திருக்க முடியும்.

இதுதவிர, செல்போன் வாயிலாக காரைக் கண்கானித்தல் மற்றும் அதன் குறிப்பிட்ட சில அம்சங்களை கன்ட்ரோல் செய்தல் உள்ளிட்டவற்றையும் செய்துக் கொள்ள முடியும். இதுபோன்ற அம்சங்களினாலேயே டெஸ்லா மின்சார கார்களுக்கு எஸ்யூ7 எலெக்ட்ரிக் செடான் மிகப் பெரிய போட்டியாளனாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, இந்த கார் இரு விதமான பேட்டரி பேக் ஆப்ஷனில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. 101 kWh பேட்டரி பேக் மற்றும் 150 kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களே வழங்கப்பட இருக்கின்றது. இதில் முதல் பேட்டரி பேக் ஆப்ஷனில் ஓர் முழு சார்ஜில் 800 கிமீட்டர் ரேஞ்ஜையும், இரண்டாவது பேட்டரி பேக் ஆப்ஷனில் 1,200 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும்.

தன்னுடைய சொந்த டெக்னாலஜியைக் கொண்டே இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரி பேக்கை சியோமி தயார் செய்திருக்கின்றது. செல் டூ பாடி டெக்னாலஜியே பயன்படுத்தியே பேட்டரி பேக்கை அது தயார் செய்திருக்கின்றது. முதலில் 800 கிமீ ரேஞ்ஜ் தரும் பேட்டரி ஆப்ஷன் கொண்ட எஸ்யூ7 காரே விற்பனைக்கு வர இருக்கின்றது.
அதேவேளையில், 1200 கிமீ ரேஞ்ஜ் தரும் வெர்ஷனானது 2025 ஆம் ஆண்டிற்கு பின்னரே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் அடிநிலை தேர்வு 299 எச்பி பவரையும், உயர்நிலை தேர்வு 374 எச்பி பவரையும் வெளியேற்றும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 210 கிமீ மற்றும் 265 கிமீ ஆகும். சிறப்பம்சங்களும் இந்த காரில் வாரி வழங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. அந்தவகையில் இந்த காரில் தானாக இயங்கும் வசதிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சியோமி நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் இந்தியா வருமா என்பது இப்போதைக்கு சந்தேகமே. அதேவேளையில், இதன் எலெக்ட்ரிக் காரின் தரிசனம் 2024 ஆம் ஆண்டிற்குள் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலக சந்தையிலும் வெகு விரைவில் இதன் விற்பனைக்கான வருகை அமைந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









