முதல் சியோமி எலெக்ட்ரிக் கார் அதோட முகத்தை வெளி காட்டிருச்சு! எலன் மஸ்க்கின் டெஸ்லாவை காலி பண்ண இது போதும்!
சியோமி மிகப் பெரிய சர்ப்ரைஸாக அதன் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரின் சிறப்புகள் என்ன? ஓர் முழு சார்ஜில் எத்தனை கிமீ ரேஞ்ஜ் தரும் மற்றும் என்ன மாதிரியான வேகத்தில் சிறீ பாயும் என்பது போன்ற அனைத்து முக்கிய தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலகின் முன்னணி மின்சாதன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான சியோமி (Xiaomi), ஸ்மார்ட் ஃபோன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களைத் தாண்டி எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருவதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையிலேயே ஓர் சர்ப்ரைஸாக அந்நிறுவனம் தன்னுடைய முதல் மின்சார காரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

எஸ்யூ7 (SU7) எனும் கார் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் செடான் வகை எலெக்ட்ரிக் காராகும். உலக புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டி அளிக்கும் நோக்கிலேயே தன்னுடைய முதல் தயாரிப்பான இந்த மின்சார காரை சியோமி தயாரித்து இருக்கின்றது.
மேலும், இதன் வாயிலாகவே நிறுவனம், இ-வாகன ரேஸில் தன்னுடைய கால் தடத்தை சியோமி பதிக்க இருக்கின்றது. இந்த காரை மிகவும் தனித்துவமான ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டு தயார் செய்திருப்பதாக சியோமி நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. ஹூமன் எக்ஸ் கார் எக்ஸ் ஹோம் (Human X Car X Home) கான்செப்ட்டை தழுவியே தன்னுடைய காரை சியோமி வடிவமைத்திருக்கின்றது.

வெகு விரைவில் இந்த காரை அது விற்பனைக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டு இருக்கின்றது. இதுகுறித்து கார் நியூஸ் சைனா வெளியிட்டிருக்கும் செய்தியில், இந்த காரை சியோமி நிறுவனம் வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு வழங்கும் என தெரிவித்திருக்கின்றது.
இதற்கு முன்னதாக அடுத்த மாதம், அதாவது வரும் டிசம்பர் மாதம் இந்த காரை அதிகாரப்பூர்வமாக அது வெளியீடு செய்ய இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த தகவல் சியோமி ஸ்மார்ட்ஃபோன் விரும்பிகளை பெரும் மகிழ்ச்சிக்கு ஆளாக்கி இருக்கின்றது. எஸ்யூ7 மற்றும் எஸ்யூ7 மேக்ஸ் என இரு விதமான சீரிஸ்களில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாகவும் இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டையும், பெய்ஜிங்கை மையமாகக் கொண்டு இயங்கும் பிஏஐசி குழுமத்தின் உதவியுடனேயே சியமோ தயாரிக்க இருக்கின்றது. இரண்டு சீரிஸ்மே பார்க்க ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால், சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இரண்டும் மாறுபட்டுக் காட்சியளிக்கும். குறிப்பாக, ரேஞ்ஜ் விஷயத்தில் இரண்டிற்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கும் என கூறப்படுகின்றது.
இதுதவிர மின்சார மோட்டார் மற்றும் வேகம் ஆகியவற்றிலும் இரண்டிற்கும் இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் இருக்கும் என்றும் தெரிகின்றது. எஸ்யூ7-இன் உச்சபட்ச வேகம் மணிக்கு 210 கிமீட்டராகவும், எஸ்யூ7 மேக்ஸ்-இன் அதிகபட்ச வேகம் 265 கிமீட்டராகவும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்துடன், முன் வீல் இயக்கம் மற்றும் அனைத்து வீல் இயக்கம் என்கிற ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. மேலும், இந்த கார் 4997 x 1963 x 1455 ஆகிய அளவுகளிலேயே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. 19 அங்குல வீல் மற்றும் 20 அங்குல வீல் என இரு வீல் ஆப்ஷன்களும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றன.
இதுதவிர, லிடார் சென்சார் ஆப்ஷனும் சியோமி தன்னுடைய எஸ்யூ7 காரில் கொடுக்க இருக்கின்றது. இதைவிட மிக முக்கியமானதாக ஹைபர் ஓஎஸ் இன்டெக்ரேஷனை இந்த காரில் சியோமி சேர்த்திருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக காரை வீட்டுடன் இணைத்துக் கொள்ள முடியும். அதாவது, வீட்டில் உள்ள ஸ்மார்ட் கருவிகளை காரில் இருந்தபடியே கன்ட்ரோல் செய்ய முடியும்.
இதுதவிர, செல்போன் வாயிலாக காரைக் கண்கானித்தல் மற்றும் அதன் குறிப்பிட்ட சில அம்சங்களை கன்ட்ரோல் செய்தல் உள்ளிட்ட வசதிகளையும் இந்த காரில் சியோமி வழங்கி இருக்கின்றது. எனவே இந்த காரின் வருகை டெஸ்லாவிற்கு மிகப் பெரிய அளவில் போட்டியை ஏற்படுத்தும் என்பது துள்ளியமாக தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சியோமி ஸ்மார்ட்ஃபோன்களை அதன் எலெக்ட்ரிக் காரும் இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்கிற கேள்வியும், சந்தேகமும் நம்மில் பலருக்கு எழும்பி இருக்கின்றது. இந்த சந்தேகம் ஒட்டுமொத்த இந்திய சந்தைக்கே இருக்கின்றது. அதேவேளையில், இப்போதைக்கு நிறுவனத்தின் மின்சார கார்கள் இந்திய சந்தையை வந்தடைவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதும் தெளிவாக தெரிகின்றது. அதேவேளையில், வரும் நாட்களில் இதன் வருகை அரங்கேறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









