Yamaha Self Balancing System-த்தில் தானாக நிற்கும் யமஹா பைக்! எல்லாரும் இதை வாயை பிளந்து பார்க்க போறாங்க
யமஹா நிறுவனம் வரும் 2050ம் ஆண்டிற்குள் சாலையில் யமஹா பைக்கால் விபத்துக்களே நடக்காது என்ற நிலையை எட்டி பிடிப்பதற்கான கொள்கையை வைத்திருக்கிறது. அதற்கான விபத்துக்களைத் தடுக்கும் விதமான தொழிற்நுட்பங்களை ஆய்வு செய்து வருகிறது. இதைத் தனது ஆர்25 பைக்கில் டெஸ்ட் செய்து வருகிறது.
இந்த கொள்கையின் கீழ் அந்நிறுவனம் வடிவமைத்துள்ள தொழிற்நுட்பம் தான். அட்வான்ஸ்டு மோட்டார் பைக் ஸ்டெபிளைசேஷன் அசிஸ்ட் சிஸ்டம், செல்ஃப் பேலன்ஸிங் டெக்னாலஜி இந்த சிஸ்டத்தின் முக்கியமான ஒரு அங்கமாக இருப்பதால் இந்த சிஸ்டத்தை வடிவமைத்துள்ளது.

இந்த டெக்னாலஜி பைக் குறைவான வேகத்தில் செல்லும் போது அது கீழே விழாமல் அல்லது சரியாமல் நேராகத் தானாக நிற்கும். இதற்காக முன்பக்க வீல் மற்றும் ஹேண்டில் பாரில் அக்யூட்டேட் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது வாகனத்தின் டிரைவிங் மற்றும் ஸ்டிரிங் கண்ட்ரோலை கட்டுப்படுத்துகிறது.
இந்த அக்யூட்டரை கண்ட்ரோல் செய்ய 6 ஆக்ஸில் இன்னர்ஷியல் மெஷர்மென்ட் யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மெக்கானிசம் பைக்கை குறைந்த வேகத்தில் ஸ்டெடியாக வைக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பைக்கில் ரைடர் இல்லை என்றாலும் பைக் ஸ்டாண்டே இல்லாமல் ஸ்டெடியாக நிற்கும்.

பைக்கின் முன்பக்க வீலில் உள்ள அக்யூட்டர் பைக் நிற்கும் போதும் ஸ்டார்ட் ஆகும் போதும் ஸ்டெபிளிட்டியை கண்ட்ரோல் செய்கிறது. பைக் 5 கி.மீ வேகம் வரை நகரும் போது ஹேண்டில் பாரில் உள்ள அக்யூட்டர் ஸ்டெபிளிட்டியை வழங்குகிறது. கிட்டத்தட்ட நடந்து போகும் வேகத்தில் இது வேலை செய்யும். இதற்கு டிரைவர் இன்புட் எதுவும் தேவையில்லை.
யமஹா நிறுவனம் இந்த செல்ஃப் பேன்ஸிங் டெக்னாலஜிக்கான மேம்பாட்டில் பாதி கிணற்றைத் தாண்டிவிட்டது. இதே போல பல முக்கியமான தொழிற்நுட்பங்களையும் யமஹா நிறுவனம் மேம்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது டிராக்கர் 9 ஜிடி+ என ரேடாரில் இணைக்கும் பிரேக்கிங் சிஸ்டம்.

இந்த செல்ஃப் பேலன்ஸிங் தொழிற்நுட்பத்தில் ஏகப்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் லைகர் மொபிலிட்டி நிறுவனம் தனது செல்ஃப் பேலன்ஸிங்ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. ரைடரின் துணையே இல்லாமல் இந்த பைக் ஸ்டாண்டும் இல்லாமல் நிற்கும். இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் விரைவில் துவங்கவுள்ளது.
இந்த யமஹா நிறுவனம் விரைவில் தனது செல்ஃப் பேலன்ஸிங் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. ஹோண்டா, பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே இந்த தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்திவிட்டன. ஆனால் தயாரிப்பில் இதுவரை அறிமுகப்படுத்தவில்லை.
டிரைவ்ஸ்பார்க் என்ன நினைக்கிறது: டூவீலர் சந்தையில் இந்த தொழிற்நுட்பம் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும் வருங்காலங்களில் அனைத்து டூவீலர்களிலும் இந்த தொழிற்நுட்பத்தை பார்க்க வாய்ப்புகள் உள்ளது பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தொழிற்நுட்பத்தை அரசு கட்டாயமாக்கினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.


Click it and Unblock the Notifications








