பெங்களூருவில் பெண்களுக்கான முதல் கார் ரேஸ்! இதுல ஸ்பெஷல் என்ன தெரியுமா?
யோக்கோகாமாவின் பெண்களுக்கான கார் ரேஸ் இன்று பெங்களூருவில் வெற்றிகரமாக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் துவக்கி வைக்கப்பட்ட இந்த ரேஸில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கார்களுடன் கலந்து கொண்டு அட்வெஞ்சரான விஷயங்களை செய்தனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
யோக்கோகாமா நிறுவனம் பெங்களூருவில் பெண்களுக்காக Womens on Wheels என்ற பெயரில் கார் ரேஸ் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ரேஸில் மோட்டார் வாகன டிரைவிங்கில் ஆர்வமுள்ள பெண்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த ரேஸ் இன்று பெங்களூருவில் துவக்கி வைக்கப்பட்டது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த பேரிணியில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கார்களுடன் கலந்து கொண்டனர். இந்த ரேஸ் சாதரணமாக கார் ஓட்டி செல்லும் ரேஸாக மட்டும் இருக்காது மாறாக டிரஷர் ஹண்ட் போன்ற சில ஆக்டிவிட்டிகளும் நிறைந்ததாக வடிமவைக்கப்பட்டது. காரில் செல்லும் பெண்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரூட்டில் கொடுக்கப்பட்ட விதிமுறைகளையும், குறிப்புகளையும் பின்பற்றி காரை ஓட்டி செல்ல வேண்டும்.
சுமார் 80-100 கி.மீ வரை இந்த ரேஸில் கார்களை ஓட்டி செல்ல வேண்டும். இதில் சிட்டி, ஹைவே என அனைத்து பகுதிகளும் அடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சில புரோஃபஷனல் டிரைவர்களும் கலந்து கொண்டனர். புரோஃபஷனல் டிரைவர்கள் மற்றும் சாதாரண டிரைவர்கள் என இரண்டு பிரிவுகளாக இந்த ரேஸ் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.

இந்த ரேஸில் பங்கு பெறுபவர்களுக்கு ஒரு என்கேஜிங்கான, த்ரில்லிங் அனுபவம் கிடைக்கும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசும் உண்டு. இந்த Womens on Wheels ரேஸை யோக்கோகாமா நிறுவனம் சேத்தன் சிவராம் மோட்டார்ஸ் மற்றும் ஷாரட்டன் கிராண்ட் ஹோண்ட்டல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப் வைத்து நடத்தியுள்ளது.
இது குறித்து யோக்கோகாமா இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் ஹர்ஷவர்தன் கூறும் போது: "இந்த WoW ரேஸூக்குச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்வு டிரைவிங்கிள் ஆர்வமுள்ள பெண்களை ஒன்று சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்டது. இது எங்கள் நிறுவனத்தின் மோட்டாரிங் லைஃப் ஸ்டைலை கொண்டாடும் கொள்கையுடன் ஒத்துப் போகிறது.

இந்த ரேஸில் பங்கெடுத்த பெண்களின் ஆர்வமும், திறமையும் வியக்க வைக்கிறது. இதில் ஏராளமான பெண்கள் கார் ஓட்டி செல்கின்றனர். இந்த தருணத்தில் யோக்கோகாமா நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சொகுசான பயணத்தைச் சாத்தியமாக்க முயற்சி செய்கிறது என்பதைச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்" எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சி சிறப்பு பங்கேற்பாளராக ஆர்ஜே மாலிஷ்கா மும்பையிலிருந்து இந்த நிகழ்ச்சிக்காகப் பெங்களூரு வந்து கலந்து கொண்டார். அவர் கூறும் போது : "நான் புதிய பாதைகளில் தடைகளைக் கடந்து பயணிக்க விரும்புவேன். இந்த ரேஸ் அட்வெஞ்சராகவும், அனைவருக்கும் ஃபன் நிறைந்ததாகவும் உள்ளது" எனக் கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெண்கள் டிரைவிங்கை விரும்புவது குறைவாக இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அவர்களுக்கான வாய்ப்பு பெரிய அளவில் கிடைக்காதது தான். இதுபோன்ற பெண்களுக்கான கார் ரேஸ்கள் பெண்களுக்கு டிரைவிங் ஆர்வத்தைத் தூண்டும். வருங்காலங்களில் டிரைவிங்கை விரும்பும் பெண்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









