பெட்ரோல், டீசல் வண்டிய வச்சிட்டே உங்களால இந்தியாவின் பசுமை இயக்கத்திற்கு உதவ முடியும்.. எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதியை உலக சுற்றுச் சூழல் தினமாக இந்த உலகம் கொண்டாடுகின்றது. இதன்படி, இன்று உலக சுற்றுச் சூழல் தினம் அனுசரிக்கப்படுகின்றது. பலர் இந்த உலகத்தையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க வேண்டி மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிக் கொண்டிருக்கின்றனர்.
"பணம் படைத்தவர்கள் உடனடியாக மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறிவிட்டனர். எங்களைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினரால் இதற்கு உடனடியாக மாற முடியாது. அதேநேரத்தில், எங்களுக்கும் இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை இருக்கின்றது" என நினைப்பவரா நீங்க. உங்களாலும் கணிசமான அளவில் இந்த விஷயத்தில் பங்களிப்பை வழங்க முடியும். இதற்கான சில டிப்ஸ்களையே இந்த பதிவில் நாங்கள் இந்த உலக சுற்றுச் சூழல் தின ஸ்பெஷல் தகவலாக வழங்கி இருக்கின்றோம்.

ஸ்டாப் ஐடிலிங் (Stop Idling): தயவு செய்து உங்கள் காரை ஐடிலிங்கில் வைத்திருப்பதை தவிர்க்கவும். இப்போதெல்லாம் பெரும்பாலான நகரங்களில் உள்ள சிக்னல்களில் 59 செகண்டுகளுக்கும் அதிகமான நேரம் காத்திருக்க வேண்டியிருக்கின்றது. மிக முக்கிய சந்திப்பு என்றால் 2 நிமிடங்களுக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கும்.
இந்த மாதிரியான நேரங்களில் தேவையில்லாமல் எஞ்ஜினை ஓடவிட்டவாறே பச்சை சிக்னலுக்காக நம்மில் காத்திருக்கின்றனர். இதனால் தேவையில்லாமல் எரிபொருள் வீணாகும். அதேவேளையில், காற்றில் தொடர்ச்சியாக மாசு கலந்த வண்ணம் இருக்கும். இதனை ஒவ்வொரும் சிக்னல்களில் தவிர்த்தாலே பெருமளவில் காற்று மாசுபாட்டை தவிர்க்க முடியும். குறிப்பாக தேவையில்லாமல் எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும். இதனால், நம் பாக்கெட் விரைவில் காலியாவதையும் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆக்சலரேஷன் விஷயத்தில் கவனம் தேவை: ஆக்சலரேஷனை தேவையில்லாமல் அழுத்திக் கொண்டே இருக்க வேண்டாம். இதனாலும் தேவையில்லால் எரிபொருள் செலவாகும். இதோடு காற்றும் அதிக மாசடையும். த்ரோட்டிலை மிகவும் மென்மையாக பயன்படுத்துவதே நல்லது. அதேவேளையில், ஈகோ மோடில் பயணிக்கலாம். இதன் வாயிலாக எரிபொருள் சிக்கனம் மற்றும் அதிக மைலேஜை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

டயரில் போதுமான காற்று இருக்கா செக் பண்ணிக்கோங்க: காற்று குறைவாக இருப்பின் அந்த டயர் மிக வேகமாக இயக்கத்தின்போது தேய்மானடையக் கூடும். இதுதவிர, எஞ்ஜின் செயல்திறையும் அது பாதிக்கச் செய்யும். ஆகையால் எப்போதும் டயரில் காற்று போதிய அளவு இருப்பதை உறுதிச் செய்து கொள்ள வேண்டும். டயரை பிரஷ்ஷரைக் கண்கானிக்க இப்போது பிரத்யேக கருவிகள் சந்தையில் விற்கப்படுகின்றன. இவை டயரில் பிரஷ்ஷர் குறையும் எனில் அதுகுறித்த எச்சரிக்கையை வழங்கும்.

கியர் ஷிஃப்டுகள்: எரிபொருளை சிக்கனம் செய்வதில் இந்த அம்சம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஒவ்வொரு கியர் லெவலும் வெவ்வேறு விதமான எரிபொருளை செலவு செய்யும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஆகையால், வாகனத்தின் வேகத்திற்கு ஏற்ப கியர் லெவலை மெயின்டெயின் செய்து வாகனத்தை இயக்குவதே சிறந்தது. இதன் வாயிலாக எரிபொருள் சிக்கனம் மற்றும் மாசு உமிழ்வை குறைக்க முடியும்.

ஏசி பயன்பாடு: ஏசியை நடுநிலையான குளிர்ச்சியளிக்கும் மோடில் வைத்து பயன்படுத்துவதே நல்லது. இதனால், அதிக எரிபொருள் செலவாகும். அதேவேளையில் ஏசியின் மெஷினில் இருந்து அதிக வெப்பம் வெளியேறும். இது காற்றை சூடாக்கி பசுமை வீடு விளைவை ஏற்படுத்தும். இதுவே புவி வெப்ப மயமாதலுக்கு மிக முக்கிய காரணம் ஆகும். புவி அதிகளவில் வெப்பமடைவதனாலேயே தற்போது பனி சிகரங்கள் மிக வேகமாக உருகத் தொடங்கியிருக்கின்றன. இது மிகப் பெரிய ஆபத்துக்கான அறிகுறியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெறுமனே சுற்றுச் சூழலை பாதுகாப்போம் என வாயால் கூறிக் கொண்டிருப்பதற்கு பதிலாக எதிர்கால சந்ததியினருக்கு உதவும் விதமாக நாம் அனைவரும் செயலில் களமிறங்க வேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது. இதற்காக மேலே குறிப்பிட்ட டிப்ஸ்களையும் கடைப்பிடிப்பது ஓர் சிறந்த வழியாகும்.


Click it and Unblock the Notifications









