ஒவ்வொரு மாதமும் ரூ16ஆயிரம் சம்பாதிக்கலாம்! டாடா டியாகோ இவி காரை லோன் போட்டு வாங்குனா இவ்வளவு லாபமா?

டாடா நிறுவனம் டியாகோ இவி காரை விற்பனை செய்து வருகிறது. பெட்ரோல் காரில் தினமும் 150 கி.மீ வரை ஓட்டும் ஒருவர் இவி காரை வாங்குவது மூலம் மாதம் ரூ16 ஆயிரம் வரை மிச்சப்படுத்த முடியும்! இது எப்படி என்ற கணக்கைக் காணலாம் வாருங்கள்.

இன்று எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. குறிப்பாக கார்களில் எலெக்ட்ரிக் கார்களை கார் தயாரிப்பு நிறுவனங்கள் தயார் செய்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இந்தியாவில் டாடா நிறுவனம் தான் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கிறது. தற்போதைய நிலையில் பெட்ரோல் கார்களை விட எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகமாக இருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் ரூ16ஆயிரம் சம்பாதிக்கலாம்! டாடா டியாகோ இவி காரை லோன் போட்டு வாங்குனா இவ்வளவு லாபமா?

இதனால் மக்கள் பலர் பெட்ரோலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார்களை வாங்கத் தயங்கி வருகின்றனர். தற்போதைய நிலைமையில் இந்தியாவிலேயே குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்றால் அது டாடா நிறுவனத்தின் டியாகோ இவி கார் தான். இந்த கார் மொத்தம் 4 வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. ரூ8.69 லட்சம் முதல் ரூ11.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்த காரில் 2விதமான பேட்டரி ஆப்ஷன் இருக்கிறது. சிறிய ரக பேட்டரியாக 19.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 250 கி.மீ வரை ரேஞ்சை வழங்கும். அடுத்ததாகப் பெரிய பேட்டரியாக 24 கிலோ வாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 315 கி.மீ வரை ரேஞ்சை வழங்கும் திறன் கொண்டது. இந்த காரை பயன்படுத்துவது பெட்ரோல் காரை பயன்படுத்துவதை விட லாபமான விஷயமாகும்.

இந்த காரை பயன்படுத்துவது மூலம் மாதம் ரூ15 ஆயிரம் மிச்சப்படுத்த முடியும். அதைவைத்து காரின் இஎம்ஐயை அடைத்துக்கொள்ளலாம். அது எப்படி என்ற கணக்கைக் காணலாம் வாருங்கள். மாதம் ரூ15 ஆயிரம் வரை மிச்சப்படுத்த முடியும் என்றால் அது பெட்ரோல் காருக்கான பெட்ரோல் செலவைக் குறைப்பது மூலம் தான் நடக்கும்.

தற்போது ஒருவர் தினமும் 150 கி.மீ வரை தனது பெட்ரோல் காரில் பயணிக்கிறார் என வைத்துக்கொள்வோம். அவரது கார் சராசரியாக ஒரு 20கி.மீ மைலேஜ் தரும் பட்சத்தில் அவர் தனது காருக்கு ஒரு நாளுக்கு ரூ750க்கு பெட்ரோல் போட வேண்டும். அப்படி என்றால் வாரம் ஒருநாள் விடுமுறை எனக் கணக்கிட்டு மாதம் 25 நாளுக்கு ரூ18,750 பெட்ரோலுக்கு மட்டும் அவர் செலவு செய்ய வேண்டும்.

இதுவே அவர் அதற்குப் பதிலாக எலெக்ட்ரிக் காரை பயன்படுத்தினால் டாடா டியாகோ இவி காரின் அதிகபட்ச பேட்டரி திறனான 24 கிலோ வாட் ஹவர் பேட்டரியை ஒரு நாளுக்கு 10 மணி நேரம் சார்ஜ் ஏற்றி முழுமையாக சார்ஜ் ஏற்றினால் ஒரு யூனிட்டிற்கு ரூ5 எனக் கணக்கிட்டால் ஒரு நாள் மின்சார கட்டணம் மட்டும் ரூ120 தான் செலவாகும். இந்த பேட்டரி மூலம் சுமார் 315 கி.மீ பயணிக்கலாம்.

அதனால் இவர் மாதம் அதிகபட்சம் 17-18 நாட்கள் மட்டும் சார்ஜ் போட்டால் போதும் அப்படிக் கணக்கிட்டால் மாதம் ரூ2160 மட்டும் தான் மின்சார கட்டணமாகச் செலுத்த வேண்டும். காருக்கான பெட்ரோல் செலவு ரூ18750க்கு பதிலாக ரூ2160 தான் செலவாகும். அப்படிப் பார்த்தால் மாதம் ரூ16,590 மிச்சமாகிறது.

டாடா டியாகோ இவி காரின் டாப் என்ட் மாடல் காரின் விலை ரூ12 லட்சம் வரை இருக்கிறது. அந்த காரை ரூ5 லட்சம் முன்பணம் செலுத்தி மீத தொகையை வங்கியில் பைனான்ஸ் மூலம் எடுத்தால் வங்கியில் மாதம் 9 சதவீத வட்டி என கணக்கிட்டால் மாதம் ரூ15,747 இஎம்ஐஆக வரும். நாம் பெட்ரோல் செலவிலேயே மாதம் ரூ16 ஆயிரத்திற்கு மேல் மிச்சம் செய்துவிட்டதால் இஎம்ஐ மொத்தமும் பெட்ரோல் செலவிலேயே மிச்சம் செய்துவிடலாம்.

5 ஆண்டிற்குப் பிறகு காரை நீங்கள் வெறும் ரூ5 லட்சத்திற்கு வாங்கியதாகவே கணக்கிடலாம். அதன்பின் பயன்படுத்தும் போது உங்களுக்கு ஏகப்பட்ட பணம் மாதம் மாதம் மிச்சமாகும். இதனால் அதிக பயன்பாடு குறிப்பாக கேப், டிராவல்ஸ் உள்ளிட்டவர்களுக்கு எலெக்ட்ரிக் கார்கள் ஒரு வரப்பிரசாதம் தான். ஆனால் நீண்ட தூரப் பயணத்திற்கு இது ஒத்து வராது சிட்டிக்குள் தினமும் 150 கி.மீ வரை பயணிப்பவர்களுக்கு இது சரி பட்டுவரும். இரவு நேரம் முழுவதும் சார்ஜ் போட்டு பகல் நேரத்தில் பயன்படுத்தினால் எலெக்டரிக் காரை எந்த தொந்தரவும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 21, 2023, 21:00 [IST]
English summary
You can save 15 thousand rupees every month by using tata tiago ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+