அறிமுகமில்லா நபரிடம் கெத்து காட்டபோயி குடும்ப சொத்தை இழந்த நபர்! சின்ன தவறால் ஒட்டுமொத்த குடும்பமும் சோகம்!

ரேசிங்கால் ஏற்படும் ஆபத்துகள் என்ன? பின் விளைவுகள் என்ன என்பதை? பல முறை வெவ்வேறு பதிவுகளின் வாயிலாக நாங்கள் வெளியிட்டு இருக்கின்றோம். நாங்கள் மட்டுமல்ல காவல்துறையும் இதுகுறித்து விழிப்புணர்வை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றனர். இருப்பினும், இதனைத் தவிர்க்க புள்ளீங்கோ இளைஞர்கள் தயாராக இல்லை.

இந்த நிலையிலேயே ஓர் அதிர்ச்சியான சம்பவம் வாகன ரேசில் இளைஞர்கள் ஈடுபட்டபோது அரங்கேறி இருக்கின்றது. ரேசில் ஈடுபட்ட ஓர் நபரின் கார் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகி இருக்கின்றது. இந்த கார் அவரின் குடும்பத்தின் முக்கியமான சொத்துக்களில் ஒன்று என கூறப்படுகின்றது.

Young man lost his car

இதையே வீணாக கெத்துக் காட்ட போய் அந்த நபர் தீயில் கருகி நாசமாக விட்டிருக்கின்றார். போலோ மற்றும் மினி கூப்பர் ஆகிய இரு கார்களுக்கு இடையே திடீரென ரேஸ் ஏற்பட்டு இருக்கின்றது. சாலையில் சென்றுக் கொண்டிருந்தபோது இந்த திடீர் ரேஸ் ஏற்பட்டு இருக்கின்றது. இத்தனைக்கும் ஒருவருக்கு யார் என்றே தெரியாது.

ஆமாங்க, யார் முன்னாடி செல்வது என்கிற போட்டியிலேயே இந்த ரேஸ் தொடங்கி இருக்கின்றது. இதிலேயே ஃபோக்ஸ்வேகன் ஜிடி போலோ கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. "யாருனா முன்னாடி போகட்டும்" என நினைத்து போலோ கார் உரிமையாளர் இந்த போட்டி மனப்பான்மையை தவிர்த்திருந்தால் அவருடைய குடும்ப சொத்தான அக்கார் தற்போது தீயில் கருகாமல் இருந்திருக்கும்.

Car burnt

ஆனால், தேவையில்லாமல் யாரோ ஒருவரிடம் கெத்துக்காட்ட என நினைத்து அந்த இளைஞர் தன்னுடைய குடும்பத்தின் முக்கிய சொத்தை இழைந்திருக்கின்றார். இதுமட்டுமல்ல ரேசில் ஈடுபட்டு விபத்தைச் சந்தித்திருப்பதன் காரணத்தினால் தற்போது போலீஸாரின் நடவடிக்கைக்கும் ஆளாகி இருக்கின்றார். வாகன ரேஸ் மிகவும் ஆபத்தான செயல் என்பதால் காவல்துறை இந்த விஷயத்தில் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

சென்னையில்கூட கடந்த காலங்களில் இருசக்கர வாகன ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது வீடியோவை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தனர். இதுமாதிரியான நடவடிக்கைக்கு பெயர்போனவர்களே கேரள காவல்துறையினர். இப்போதைய ஃபோக்ஸ்வேகன் போலா கார் விபத்து சம்பவம் கேரள மாநிலத்திலேயே நடைபெற்றிருக்கின்றது.

Car fire

இந்த விஷயத்தில் போலோ ஜிடி மற்றும் மினி கூப்பர் கார் ஆகிய இரு கார்கள் உரிமையாளரின் மீதும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கின்றது. ஃபோக்ஸ்வேகன் ஜிடி மற்றும் மினி கூப்பர் கார்கள் ரேசில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையிலேயே இரு கார்கள் உரிமையாளர்கள்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது.

கொச்சி பணபில்லி நகர் பகுதியிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. நல்லவேளையாக இந்த விபத்து சம்பவத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. அதேநேரத்தில் அவர்கள் ரேசில் ஈடுபட்டபோது அந்த சாலை மிகவும் பிசியாக இருந்தததைப் பார்க்க முடிகின்றது. இந்த நிலையிலேயே அவர்கள் ரேசில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

அதிக வேகத்தில் போலோ திரும்ப முயன்றபோதே அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியிருக்கின்றது. விபத்தைச் சந்தித்த உடனேயே போலோ ஜிடி தீப்பிடித்ததையும் நம்மால் பார்க்க முடிகின்றது. மேலும், சில நிமிடங்களில் கார் முழுவதும் பரவிய தீ அதனை வெறும்கூடாக மாறியது.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சக பயணிகள் மற்றும் அப்பகுதி வாசிகள் காரை தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்பு துறைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் காரில் ஏற்பட்ட தீயை அணைககும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், ஏற்கனவே கார் முழுவதும் தீ பரவி விட்டதால் போலோவின் வெறும் கூடே மிஞ்சி இருக்கின்றது. இரு கார்கள் மீதும் ஐபிசி பிரிவு 279இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இது பொது சாலையில் வேகமாக வாகனத்தை ஓட்டுவதற்காக போடப்படும் வழக்காகும்.

மேலும், எம்விடி சட்ட பிரிவு 189இன் கீழும் வழக்கு பதியப்பட்டு இருக்கின்றது. பந்தயத்தில் ஈடுபடுபவர்கள், அனுமதில் இல்லாத வேகத்தில் பயணிப்பவர்கள் மீது விதிக்கப்படுவதற்காக மாநில சட்டவிதிகளின்கீழ் உருவாக்கப்பட்ட பிரிவு இதுவாகும். இந்த விதிகளின்கீழ் மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனையும், ரூ. ஐயாயிரம் வரை அபராதம் அந்தந்த வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டி இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தயவு செய்து வாகன ரேசில் ஈடுபட வேண்டாம் என்பதே அனைவரின் கருத்தாகவும் இருக்கின்றது. இது தேவையில்லாத ஆபத்தை மட்டுமல்ல தேவையில்லாத சட்ட சிக்கலுக்கும் இது நம்மை ஆளாக்கிவிடும். இதன் காரணத்தினாலேயே வாகன ரேசில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, June 19, 2023, 13:19 [IST]
English summary
Young man lost his car while racing with a stranger
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X