உங்க காருல ஏசி வேலை செய்யலையா?.. இதை செய்யுங்க பாஸ் ஏசியே தேவைப்படாது! குளு குளுனு ஃபீல் பண்ணுவீங்க!

ஏசி இல்லாத கார் பயணம் நரக வேதனையை வழங்கும். குறிப்பாக, வெயில் காலத்தில் ஏசி இல்லாத வாகனத்தில் பயணிப்பதும், மைக்ரோஓவனை திறனை அதற்குள் அமர்ந்துக் கொண்டு செல்வதும் ஒன்று என கூறலாம். அந்த அளவிற்கு வேற லெவல் அனல் கொண்டதாகவே அந்த பயணம் இருக்கும்.

இதனால்தான், சம்மருக்கு முன்னரே வாகனங்களை அதற்கு ஏற்ப தயார் செய்துவிட வேண்டும் என வாகனத்துறை வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேவேளையில் திடீரென காரில் ஏசி வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது என்கிற சந்தேகம் எழும்பலாம். இந்த மாதிரியான சூழலை சமாளிப்பதற்கான வழிக்காட்டுதல்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

How to cool car without ac

அதாவது, வாகனத்தில் ஏசியே வேலை செய்யாத நேரத்தில் பயணத்தை குளு குளுவென மாற்றுவதற்கான வழிகள் என்ன என்பதையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாகனத்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் சிலர் பயன்படுத்தும் ப்ரோ டிப்ஸையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

லெமன் ஜூஸ் அல்லது வேறு ஏதேனும் குளிர்ச்சியான பாணத்தை எடுத்துக் கொள்ளலாம். மிக சிறந்தது ஃப்ரெஷ் ஜுஸ் ஆகும். இதை எடுத்துக் கொள்வதன் வாயிலாக ஃப்ரெஷ்ஷான அனுபவம் தானாக உங்கள் உடலில் ஏற்படும். குறிப்பாக, ஜில்லென்ற லெமன் ஜூஸ், மோர் அல்லது தர்பூசணி ஜுஸை பருகும்போது வேற லெவல் புத்துணர்வு அனுபவம் கிடைக்கும்.

Water

அதேவேளையில், அதிக அளவில் நீரையும் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக, குளிர்ந்த நீரை எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி இதை எடுத்துக் கொள்வதன் வாயிலாக காரில் ஏசி இல்லாத உணர்வை அறவை தவிர்த்துவிட முடியும். இதுதவிர, உங்கள் கைகளின் மணிக்கட்டு மற்றும் கழுத்தின் பின் புறத்தில் குளிர்ந்த நீரை தெளிக்கலாம்.

இதன் வாயிலாக உங்கள் உடல் உஷ்னம் குறைந்து குளிர்ச்சியான அனுபவம் கிடைக்கும். இது எப்படி சாத்தியமாகும்னு கேக்குறீங்களா? இந்த இடங்கள் துடிப்பு புள்ளிகள் ஆகும். அதாவது, இங்கேயே உடல் உஷ்னத்தைக் கட்டுப்படுத்தும் முடிச்சுகள் உள்ளன. இந்த பகுதியில் குளிர்ச்சியான நீர் அல்லது ஐஸ் கட்டியை வைத்த தேய்ப்பதனால் உடல் உஷ்னம் குறைந்து, ஃப்ரெஷ்ஷான அனுபவம் கிடைக்கும்.

Ice

ஏசி வெண்டில் இருக்கும் பகுதியில் ஈரமான அல்லது குளிர்ந்த நீரால் ஈரமாக்கப்பட்ட துணியை போடலாம். இதன் வாயிலாகவும் கார் கேபின் குளிர்ச்சியாக மாறும். இந்த துளைகள் வாயிலாக குளிர்ந்த காற்று வரவில்லை என்றாலும் வழக்கமான காற்று வரக் கூடும். இந்த நிலையில், ஈரமான துணியை அதன் மீது போடுவதனால் சற்று குளர்ச்சியான ஃபீல் கிடைக்கும்.

அதேவேளையில் காரை விட்டு வெளியேறும்போது அந்த ஈரமான துணியை அகற்ற மறந்துவிட வேண்டாம். அதை அப்படியே விடும்பட்சத்தில் பூஞ்ஜை உருவாகவும், துர்நாற்றம் அடிக்கவும் வழிவகுத்துவிடும். ஈர துணியைத் தொடர்ந்து பாத்திரம் அல்லது தெர்மாகோல் பெட்டி நிறைய ஐஸ் கட்டியை நிரப்பிக் கொண்டு அதை காருக்குள் வைக்கலாம்.

Dressing

இதனாலும் காரின் சூடான நிலை போய் சற்று குளிர்ச்சியாக மாறும். இத்துடன், காரில் ஏசி வேலை செய்யாத நேரங்களில் காற்றோட்டமான உடைகளை அணியலாம். இதன் வாயிலாக காற்றோட்டம் உறுதி செய்யப்படும். குறிப்பாக, ஜூன்ஸ் போன்ற அதிக இருக்கமான உடையை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது.

மேலும், பருத்தி மற்றும் கைத்தறி துணிகளை அணியலாம். குறிப்பாக, வியர்வை உறிஞ்சக் கூடிய துணி வகைகளை பயன்படுத்துவதே பெஸ்ட். இதன் வாயிலாக வியர்வையால் ஏற்படும் கசகச தன்மையை தவிர்க்க முடியும். இதேபோல், லைட் கலர் உடையை அணிவதும் நல்லது. கருப்பு போன்ற நிற உடையை அணிவதனால் மேலும் அசௌகரியமான உணர்வே ஏற்படும் என்பதை மறவாதீர்கள்.

Window

மேலும், நீங்கள் நீளமான கூந்தலை வைத்திருப்பவராக இருந்தால், முதலில் அதை இழுத்து கட்டிக் கொள்ளுங்கள் அல்லது கொண்டை போட்டுக் கொள்ளவும். இல்லை என்றால் மிக எரிச்சலான டிராவல் அனுபவமே உங்களுக்கு கிடைக்கும். தொடர்ந்து காரின் ஜன்னல் கண்ணாடிகளை திறந்துவிட்டு பயணிக்கலாம்.

காரில் ஏசி சரியாக வேலை செய்யாத நிறத்தில் காருக்குள் காற்றோட்டத்தை உறுதிப்படுத்த இதுவே சிறந்த வழியாகும். குறைந்தபட்சம் இரு ஜன்னல் கண்ணாடிகளையாவது இறக்கிவிட்டு வண்டியை இயக்கவும். இத்துடன், சிறிய ஃபேனை காரில் பயன்படுத்தலாம். ரூ. 2 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கார்களுக்கான பிரத்யேக ஃபேன்கள் பேட்டரி பேக்-அப் வசதி உடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இது எதுவும் வேலைக்கே ஆகாது, வெயில், வெற லெவல்ல வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றது என நீங்கள் நினைத்தால் உங்கள் பயண நேரத்தை மாற்றிக் கொள்ளவும். விடியற்காலை அல்லது மாலை வெயில் தாழ்ந்த பின்னர் உங்கள் பயணத்தைத் தொடங்கலாம். இதனால் வெயிலை அறவே தவிர்த்திட முடியும். குறிப்பாக, அலுவலக நேரத்தில் உங்கள் பயணத்தை தொடர வேண்டாம். இந்த நேரத்தில் பெரும்பாலான சாலைகள் வாகன நெரிசலுடன் காணப்படும் என்பதை மறவாதீர்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரில் ஏசி வேலை செய்யவில்லை எனில் இந்த ப்ரோ டிப்ஸ்களை எல்லாம் பயன்படுத்தினால் உங்கள் பயணம் கொஞ்சம் சுலபமானதாகவும், சுவாரஷ்யமானதாகவும் மாறும். அதேவேளையில், நீண்ட தூர பயணங்களுக்கு முன்னர் உங்கள் காரை மட்டுமல்ல ஏசி சிஸ்டம் போன்ற சில முக்கிய பாகங்களையும் ஓர் சின்ன சர்வீஸ் செய்துவிடுவதே நல்லது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 23, 2023, 8:30 [IST]
English summary
Your ac not working here is some tips what to do
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X