காரு செம்ம சூடா இருக்கா... தயவு செஞ்சு இந்த 5 விஷயத்தை உடனே பண்ணிடுங்க.. பெருசா செலவு வைக்காது!

எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் நடப்பாண்டில் சுட்டெரித்துக் கொண்டிருக்கின்றது. வீட்டில் இருக்கும்போதே மைக்ரோஓவனில் இருப்பதை போன்ற உணர்வு இருப்பதாக மக்கள் பரவலாகக் கூறி வருகின்றனர். வீட்டில் இருக்கும்போதே இந்த நிலை என்றால் வெளியில் வாகனங்களில் பயணிப்பவர்களின் நிலையை பற்றி சொல்லவா வேண்டும்.

இந்த மாதிரியான சூழலில் பயணிப்பது உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் காருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடும். அதிக உஷ்ணம் உங்கள் காரின் எஞ்ஜினைப் பாதிக்கச் செய்யும். இந்த விஷயத்தில் கவனம் செலுத்த தவறினால் அது மிகப் பெரிய பிரச்னைக்கு வழி வகுக்கும்.

Car overheat

குறிப்பாக, நாடு ரோட்டில் பிரேக் டவுனுக்கு அது வழிவகுக்கும். அதேவேளையில், குறிப்பிட்ட சில செயல்களைச் செய்வதன் வாயிலாக கார் விரைவில் வெப்பமாவது தவிர்க்க முடியும். இதன் வாயிலாக எஞ்ஜினின் ஆயுட் காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அதுதவிர, தடையற்ற பயணத்தையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

Car overheats

அதிக சூடா இருக்கா அப்போ இதை உடனே செய்யுங்க: வண்டில டிராவல் பண்ணிட்டு இருக்கும்போது கார் அதிக வெப்பமாவது எச்சரிக்கை வந்தாலோ அல்லது கார் எஞ்ஜின் வெப்பமாக இருப்பதை நீங்கள் உணர்ந்தாலோ உடனே வண்டியை பாதுகாப்பான பகுதியில் ஓரங்கட்டிடுங்க. குறிப்பாக, அதிக வெப்பமாக இருக்கும்போது தொடர்ச்சியாக டிராவல் செய்வதை தவிர்க்கவும்.

Turn off engine

விரைவில் எஞ்ஜின் வெப்பம் தளரும். அதன் பின்னர் மீண்டும் நீங்கள் பயணத்தைத் தொடரலாம். அதிக வெப்பத்தில் தொடர்ந்து வாகனம் இயங்கும் எனில் அந்த எஞ்ஜின் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படக் கூடும். எனவேதான் உடனடியாக பாதுகாப்பான அல்லது நிழல் நிறைந்த பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டும்.

Coolant

கூலிங் சிஸ்டத்தை வேலை செய்ய விடவும்: சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திய பின்னர் வாகனத்தை சிறிது நேரம் அனைத்து விட வேண்டும். இதன் வாயிலாக எஞ்ஜின் குளிர்ச்சி அடைய தொடங்கும். அதேவேளையில், உடனடியாக எஞ்ஜின் பான்னெட்டை திறந்துவிடக் கூடாது. எஞ்ஜினில் தென்படும் பெருமளவிலான வெப்பம் பான்னெட்டில் இருக்கும். அது உங்கள் கைகளை பதம் பார்த்துவிடலாம். எனவே எஞ்ஜின் கூலிங் சிஸ்டம் வேலை செய்து முடிக்கும் வரை சற்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

Pull over

கூலண்டை எப்போதும் சரியான அளவில் வைத்துக் கொள்ளவும்: எஞ்ஜினை வெப்ப நிலையில் இருந்து குளிர்ச்சியான நிலைக்கு மாற்றுவதில் கூலண்டின் பணி மிக முக்கியமானது. ஆகையால், இந்த திரவம் எப்போதும் போதுமான அளவில் இருக்கின்றதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். ரேடியேட்டர் அதிக சூடாக இருக்கும் நேரத்தில் ரேடியேட்டரின் மூடியை திறக்கும் முயற்சியை செய்ய வேண்டாம்.

Leaks

குளிரூட்டும் சிஸ்டத்தில் கோளாறு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யவும்: எஞ்ஜினை குளிரூட்டும் சிஸ்டத்தில் கோளாறோ அல்லது லீக்கேஜ் ஏதேனும் இருப்பின் எஞ்ஜினை குளிர்விப்பதில் சிக்கல் ஏற்படும். ஆகையால், உங்கள் எஞ்ஜின் அடிக்கடி உடனடியாக வெப்பமாவதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக குளிரூட்டும் சிஸ்டத்தை சரி பார்க்கவும். ரேடியேட்டர், குழாய் மற்றும் பம்புகளில் முக்கியமாக ஆய்வு செய்ய வேண்டும். இதில் சிறிது லீக்கேஜ் இருந்தாலும் குளிரூட்டுவதில் சிக்கல் ஏற்படும்.

Recovery

பிறரின் உதவியை நாடுவது நல்லது: உங்களால் மேற்கொண்ட டிப்ஸ்களைச் செய்தும் வாகனத்தை குளிர்விக்க வைக்க முடியவில்லை எனில் ஸ்பெஷலிஸ்டுகளின் உதவியை நாடுவதே நல்லது. வீட்டுக்கு போய் பாத்துக்கலாம், இன்னும் கொஞ்சம் நாள் எடுத்து பிறகு பாத்துக்கலாம் என இதனை தள்ளிப் போட வேண்டாம். இது மிகப் பெரிய செலவு மற்றும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாடே கோடை வெயிலில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் வாகனங்கள் விரைவில் வெப்பமடையக் கூடும். ஆகையால், ஏசி சிஸ்டத்தில் கவனம் செலுத்துவதைப் போலவே காரின் எஞ்ஜினை குளிர்விக்கும் சிஸ்டத்திலும் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும் என்பது கட்டாயமாகி உள்ளது. இதனால் தடையில்லா மற்றும் மிக சிறந்த பயண அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 23, 2023, 12:18 [IST]
English summary
Your car getting over heat here is what to do
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X