1 Rupee Coin-ஐ கார் முழுக்க ஒட்டிய இளைஞர்.. தயவுசெஞ்சு ஏன்னு மட்டும் கேட்றாதீங்க!
இளைஞர் ஒருவர் கார் முழுக்க ஒரு ரூபாய் நாணயத்தை ஒட்டி இருக்கின்றார். ஏன் இவ்வாறு அவர் செய்தார் என்பதற்கான காரணத்தையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். மேலும், இவ்வாறு செய்ததனால் அவர் என்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்க இருக்கின்றார் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
அண்மையில் இணையத்தில் ஓர் வீடியோ வைரலாகியது. அந்த வீடியோவில், உச்சி வெயிலில் நின்றுக் கொண்டிருந்த பஜாஜ் பல்சர் பைக்கிற்கு ஓர் இளைஞர், முகத்திற்கு பூச பயன்படுத்தப்படும் நைசில் பவுடரை பூசிவிடும் காட்சிகளே இடம் பெற்றிருந்தன. பொதுவாக இந்த பவுடரை அதிக வெயிலை சமாளிக்க பயன்படுத்துவர்.

இது முகத்தில் பூசிய சில நிமிடங்களுக்கு குளிர்ச்சியான உணர்வை வழங்கும். இத்தகைய பவுடரையே வெயிலில் நின்றுக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின்மீது இளைஞர் கொட்டினார். இந்த செயலை தான் வெறும் டிரெண்ட் ஆவதற்காக மட்டுமே செய்ததாக குஜராத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் தெரிவித்தார். இருப்பினும், அவரை நெட்டிசன்கள் பலர் கிண்டலடித்து தள்ளிவிட்டனர்.
இந்த நிலையிலேயே மற்றுமொரு புதிய சம்பவம் வாகனம் சார்ந்து அரங்கேறி இருக்கின்றது. இந்த நிகழ்வும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ஓர் நபர் தன்னுடைய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் டிசையர் ஹேட்ச்பேக் கார் முழுக்க ஒரு ரூபாய் நாணயங்களை ஒட்டி இருக்கின்றார்.

சாலையில் செல்பவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே அவர் இவ்வாறு நாணயங்களை கார் முழுக்க ஒட்டி இருக்கின்றார். இதனால், அந்த வாகனம் ஜொலிக்கும் நிலைக்கு மாறியது. இந்த செயல் பிறரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக செய்யப்பட்டு இருந்தாலும், இந்த செயலால் பிறரின் பார்வை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிக உள்ளன.
ஒரு ரூபாய் நாணயம் கண்ணாடியைப் போன்று பிரதிபலிக்கும் திறன் கொண்டது. இத்தகைய தன்மைக் கொண்ட நாணயங்களை கார் முழுக்க ஓட்டிவிட்டு வெயில் நேரத்தில் பயணித்தால், எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் பார்வையை அது பாதிக்கச் செய்யலாம். எனவேதான், ஒளியை பிரகாசமாக எதிரொலிக்க செய்யும் நிறம் மற்றும் அணிகலன்களை வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுகின்றது.

ஆனால், பலர் இதை பெரிதாக பொருட்படுத்துவதே இல்லை. இதுமட்டுமில்லைங்க, கார் முழுக்க ரூபாய் நாணயத்தை ஒட்டி இருப்பதனால், காரின் எடையும் பலமடங்கு அதிகரித்திருக்கின்றது. இதனால், மைலேஜ் மற்றும் எஞ்ஜின் செயல் திறனில் கடும் பாதிப்புகள் ஏற்படும். இதுபோன்று வாகனங்களின் எடை கூடி விடும் என்கிற காரணத்திற்காகதான் ஆஃப்டர் மார்க்கெட் அணிகலன்களைக்கூட வாகனங்களில் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.
ஆனால், இது எதை பற்றியும் கவலைப்படாமல் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் டிசையரின் உரிமையாளர் ஒரு ரூபாய் நாணயத்தை தன்னுடைய கார் முழுவதும் ஒட்டி இருக்கின்றார். இதனால், அந்த நபரும், அவருடைய காரும் தற்போது இணையத்தில் ஃபேமஸானவர்களாக மாறி இருக்கின்றனர். அதேவேளையில், இவர் செய்திருப்பது வாகன மாடிஃபிகேஷன் செயல் ஆகும்.
இதற்கு இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் அனுமதி இல்லை. ஆகையால், போக்குவரத்து காவலர்களின் நடவடிக்கை இந்த ஸ்விஃப்ட் டிசையரின் உரிமையாளர் ஆளாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, அவர் ஒட்டிய அனைத்து காயின்களையும் திருப்பி பெயர்த்து எடுக்கும்போது அவர் மிக பெரிய சிக்கலைச் சந்திக்க இருக்கின்றார்.
அனைத்து காயின்களும் ஸ்ட்ராங்கான கோந்தைக் கொண்டு ஒட்டப்பட்டு இருக்கின்றன. ஆகையால், அதை பிரித்தெடுக்கும்போது காரின் காஸ்ட்லியான பெயிண்ட் வேலையில் கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, பல வழிகளில் அவர் இன்னல்களைச் சந்திக்கப் போகின்றார் என்பது இப்போதே தெளிவாக தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த காலங்களில் வைரல் வீடியோ மற்றும் பதிவுகளைக் கொண்டே போக்குவரத்து காவலர்கள் இதுபோன்று விதிமீறல் செயல்களை செய்பவர்களின்மீது உரிய நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர். தற்போது, ரூபாய் காயின் ஒட்டப்பட்டது பற்றிய பதிவும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இந்த விஷயத்திலும் கடுமையான நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









