மாருதி சுஸுகி ஜிம்னி உண்மையில் இவ்ளோ மைலேஜ் கொடுக்குமா?.. ஃபுல் தகவலை டீடெய்லா சொல்லிய நம்மில் ஒருவர்!

மஹிந்திரா தார் எஸ்யூவி காருக்கு போட்டியாக மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் கார் மாடலே ஜிம்னி. இந்த காருக்கு மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையிலேயே மிக சமீபத்தில் ஜிம்னியை மாருதி சுஸுகி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

மஹிந்திரா தார் காரை காட்டிலும் சற்று அதிக விலையில் ஜிம்னி விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. மஹிந்திரா தார் 10.54 லட்சம் ரூபாய் விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது மூன்று கதவுகள் கொண்ட ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

Jimny city mileage test

இதன் 5 டோர் வெர்ஷன் இன்னும் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறங்கவில்லை. ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வந்திருப்பது ஜிம்னியின் 5 கதவுகள் வெர்ஷன் ஆகும். இது ரூ. 12.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரின் மைலேஜ் திறன் பற்றிய தகவலே தற்போது வெளியாகி உள்ளது.

யுட்யூப் சேனல் ஒன்று இந்த காரின் மைலேஜ் திறனை ஆய்வு செய்தது. அது மேற்கொண்ட ஆய்வின் வாயிலாகலே ஜிம்னி ஒரு லிட்டருக்கு 11.89 கிமீ வரை மைலேஜ் தருவது தெரிய வந்திருக்கின்றது. யுட்யூபர் தன்னுடைய மாருதி சுஸுகி ஜிம்னி காரை 4X2 மோடில் மட்டுமே இயக்கினார்.

Maruti suzuki jimny mileage

டிராஃபிக், காலியான சாலை என கலவையான பாதையிலேயே தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார். இத்தகைய லாங் ட்ரிப்பைச் செய்தே துள்ளியமான மைலேஜ் விபரத்தை அவர் கண்டறிந்திருக்கின்றார். ஜிம்னியின் மைலேஜ் திறனை கண்டறிவதற்காக அவர் குர்கானில் இருந்து தலைநகர் டெல்லியில் உள்ள கரோல் பாக் வரை பயணித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

கலவையான பாதையில் பயணித்திருந்தாலும் அதிகளவில் நகரத்தின் மிகவும் நெருக்கமான மற்றும் மோசமான டிராஃபிக் நிறைந்த சாலையிலேயே ஜிம்னி பயணித்திருக்கின்றது. இருப்பினும், அதனால் 12 கிமீ வரை ஒரு லிட்டருக்கு மைலேஜ் தர முடிந்திருக்கின்றது. இது திருப்திகரமான மைலேஜ் திறன் ஆகும். அதேவேளையில், மாருதி சுஸுகி நிறுவனம் அதன் தரப்பில் இந்த கார் ஒரு லிட்டருக்கு 16.94 கிமீ வரை மைலேஜ் தரும் என தெரிவித்து இருக்கின்றது.

Youtuber calculation

இந்த மைலேஜ் திறனை பெற வேண்டும் எனில் காலியான நெடுஞ்சாலைகளில் மட்டுமே நாம் நம்முடைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், அது சத்தியமற்றது ஆகும். இதன் போட்டி கார் மாடலான மஹிந்திரா தார் 15.2 கிமீ வரை மைலேஜ் தரும். இது அராய் சான்றளித்திருக்கும் மைலேஜ் திறன் ஆகும்.

நிஜ உலகில் இதன் மைலேஜ் திறன் இதைவிட சற்று குறைவாகவே இருக்கும். ஜிம்னி மஹிந்திரா தார் காருக்கு மட்டுமல்ல மற்றுமொரு நிறுவனத்தின் தயாரிப்பிற்கும் போட்டியாக இருக்கின்றது. ஃபோர்ஸ் நிறுவனத்தின் கூர்கா கார் மாடலுக்கே ஆகும். இந்த கார் மாடல் ஒரு லிட்டருக்கு 12.4 கிமீ வரை மட்டுமே மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டீசல் எஞ்ஜின் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே ஃபோர்ஸ் கூர்கா விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், மஹிந்திரா தார் எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மாருதி சுஸுகி ஜிம்னியில் பெட்ரோல் மோட்டார் தேர்வு மட்டுமே வழங்கப்படுகின்றது.

அதேநேரத்தில் டிரான்ஸ்மிஷனைப் பொருத்த வரை ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் ஆகிய இரு ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. கே15பி 1.5 லிட்டர் 4 சிலிண்டர் மோட்டார் உடனேயே இந்த ஆப்ஷனை மாருதி சுஸுகி வழங்குகின்றது. மேனுவல் டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை 5 ஸ்பீடும், ஆட்டோமேட்டிக்கில் 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இரண்டிற்கும் இடையில் மிக மிக சிறிய அளவே மைலேஜ் வித்தியாசம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி ஜிம்னி நிஜ வாழ்க்கையில் இந்த அளவு மைலேஜ் தரும் என்பது வாகன காதலர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதேவேளையில், ஒரு சிலர் "இவ்ளோதான் மைலேஜ் தருமா" என ஜிம்னியை கிண்டல் செய்யத் தொடங்கி இருக்கின்றனர். இது நடுநிலையான மைலேஜ் திறன் என்பதே எங்களின் கருத்தாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, June 30, 2023, 16:00 [IST]
English summary
Youtube channel reveals maruti suzuki jimny mileage figures
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X