ஒத்த காருக்காக சஃபாரி கார் முழுக்க காசை கொண்டு வந்து கொட்டிய யுட்யூபர்... ஷோரூம்காரரே திணறிட்டாரு! வீடியோ!
போர்ஷே நிறுவனத்தின் மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் ஒன்றாக பாக்ஸ்டர் இருக்கின்றது. இந்த காருக்கு உலக அளவில் ரசிகப் பட்டாளம் உண்டு. இதனை வாங்கவே இந்தியர் ஒருவர் தன்னுடைய டாடா சஃபாரி கார் முழுக்க காசை கொண்டு வந்துக் கொட்டி இருக்கின்றார். இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். வாங்க.
வெறும் 1 ரூபாய் காயின்களைக் கொண்டே போர்ஷே பாக்ஸ்டர் சூப்பர் கார் வாங்கப்பட்டு இருக்கின்றது. இதனால்தான் கார் முழுக்க பணத்தைக் கொண்டு வரும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. பத்து ரூபாய் நோட்டுக்களைப் பயன்படுத்தி இருந்தாலே அதனை எண்ணி முடிக்க பல நாட்கள் ஆகி இருக்கும்.

இந்த மாதிரியான சூழலில் முழுக்க முழுக்க ஒரு ரூபாய் காயின்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கின்றதே இதை எண்ணிக்க முடிக்க எத்தனை நாட்கள் ஆகி இருக்குமோ என்றே இந்த செயல் நம்மை நினைக்கத் தூண்டுகின்றது. மேலும், இதனை கார் விற்பனையாளர் எப்படி ஏற்றுக் கொண்டார் என்றும் யோசிக்க வைக்கின்றது.
இந்தியாவில் இதுபோன்று சம்பவங்கள் அரங்கேறுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான நிகழ்வுகள் பல நம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. கேடிஎம் பைக் தொடங்கி ஸ்கூட்டர்கள் வரை என பல வகையான வாகனங்கள் நாணயங்களைக் கொண்டு வாங்கப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்த செய்திகளையும் நாம் டிவி மற்றும் பேப்பர்களில் பார்த்திருப்போம்.

ஏன் மாருதி ஈகோ போன்ற பட்ஜெட் விலைக் கொண்ட கார்களைகூட பத்து ரூபாய் நாணயத்தைக் கொண்டு வாங்கிய செய்திகளைக்கூட நாம் படித்திருப்போம். ஆனால், முதல் முறையாகவே ஓர் நபர் நாணயங்களைக் கொண்டு அரிய வகை ஸ்போர்ட்ஸ் காரை வாங்கி இருக்கின்றார். அதுவும், ஒரு ரூபாய் நாணயங்களைக் கொண்டு வாங்கி இருக்கின்றார்.
இந்த நிகழ்வு பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், மீண்டும் காயினைக் கொண்டு வாகனங்களை வாங்கும் டிரெண்டை அவர் தொடங்கி வைத்ததைப் போல் தெரிகின்றது. இவரை பின் தொடர்ந்து இன்னும் ஒரு சிலரும் காயின்களைக் கொண்டு விலை உயர்ந்த கார்களை வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிரேஸி எக்ஸ்ஒய்இசட் எனும் யுட்யூப் சேனலைச் சேர்ந்த இளைஞர்களே போர்ஷே பாக்ஸ்டர் காரை ஒரு ரூபாய் காயின்களைக் கொண்டு வாங்கி இருக்கின்றார். ஒரு கோடி ரூபாய்க்கான ஒரு ரூபாய் காயின்களை கொடுத்தே அவர் அந்த காரை வாங்கி இருக்கின்றார். இதன் விலை இவ்ளோ கம்மியா என நினைத்துக் கொள்ள வேண்டாம். இது ஓர் யூஸ்டு கார் மாடலாகும்.
மேலும், கட்டணத்தின் ஒரு பகுதியாகவே இந்த 1 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஒட்டுமொத்த காயின்களையும் டாடா சஃபாரியின் பின் பக்கத்தில் வைத்தே அவர்கள் எடுத்து வந்திருக்கின்றார். இவற்றை ஏற்ற வழக்கமான பூட் ஸ்பேஸ் போதாததன் காரணத்தினால் மூன்றாவது வரிசை இருக்கையை மடித்து வைத்து அந்த இடத்தில் முழுவதுமாக காயின்களை நிரப்பி அவர்கள் கொண்டு வந்திருக்கின்றார்.
ஒரு டுவிஸ்டு என்னவென்றால், இந்த யுட்யூபர்கள் ஒரு ரூபாயைக் கொடுத்துதான் காரை வாங்கப் போகிறார்கள் என்பது அந்த கார் விற்பனையாளருக்கே தெரியாது. முன்னதாக வங்கி வாயிலாக பணத்தைச் செலுத்துவதாகவே இவர்கள் டீலரிடம் கூறி இருக்கின்றார். மேலும், அனைத்து பேப்பர் வேலைகளையும் அவர்கள் செய்து முடித்திருக்கின்றனர்.
ஆனால், அதற்கு பின்னர் இந்த எண்ணத்தை மாற்றிவிட்டு ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு ரூபாய் காயின்களை மட்டுமே கொடுத்து காரை அவர்கள் திட்டமிட்டனர். மேலும், டீலரின் எதிர்வினையை தங்களின் யுட்யூப் சேனலுக்காக படம் பிடிக்கவும் அவர்கள் பிளான் போட்டனர். இதன் அடிப்படையிலேயே சஃபாரி காரின் பின் பக்கம் முழுக்க ஒரு ரூபாய் காயின்களை நிரப்பிக் கொண்டு அவர்கள் ஷோரூம் புறப்பட்டிருக்கின்றர்.
ஆனால், விற்பனையகத்திலோ வேறு மாதிரியான நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. டீலர் பணத்தை ஏற்கமாட்டார் என நினைத்த நிலையில், அதை அவர் ஆச்சரியமானதாக பார்த்த தொடங்கிவிட்டார். மேலும், அந்த காயின்களை அவர் சில நிமிடங்களில் ஏற்பதற்கான சம்மதத்தை தெரிவித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து கார்களில் மூட்டை மூட்டையாகக் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ரூபாய் நாணயம் டீலர் ஷோரூமிற்குக் கொண்டு வரப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாணயங்களை ஷோரூம் ஊழியர்கள் எண்ணத் தொடங்கினர். ஆனால், அது இப்போதைக்கு முடியாதது என்பதை உணர்ந்த டீலர் அந்த நாணயங்களை வேறு இடத்திற்கு மாற்றச் சொல்லிவிட்டு காரை டெலிவரி வழங்கும் வேலையில் களமிறங்கினார். அத்துடன், வேறு ஒரு ரூமில் வைத்து காயின்களை எண்ணவும் ஊழியர்களை டீலர்ஷிப் உரிமையாளர் அறிவுறுத்தினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாணயங்களைக் கொண்டு வாகனங்கள் வாங்கப்படுவது இந்தியாவிற்கு ஏற்கனவே பழக்கப்பட்டது என்றாலும், கொஞ்ச நாட்களாக இந்தமாதிரியான நிகழ்வு நடைபெறாத வண்ணமே இருந்தது. இந்த நிலையிலேயே கிரேஸி எக்ஸ்ஒய்இசட் யுட்யூபைச் சேர்ந்தவர்கள் இந்த டிரெண்டை மீண்டும் தொடங்கி வைத்திருக்கின்றனர். ஆகையால், நாணயத்தை வைத்து வாகனம் வாங்கும் சம்பவத்தை இனி அடிக்கடி காண முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









