இந்த காரை அழிக்கிற அளவுக்கு யுட்யூப்ல காசு வருதா? ஃபெராரி கார் லவ்வர்ஸ் தயவுசெய்து இந்த வீடியோவ பார்க்காதீங்க!
ஃபெராரி நிறுவனத்தின் மிக பிரபலமான தயாரிப்புகளில் ஒன்றாக எஃப்8 இருக்கின்றது. இதன் மதிப்பு 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்தியாவிலோ இதன் விலை பல கோடிகள் ஆகும். இத்தகைய விலை உயர்ந்த காரையே எப்படி எல்லாம் பயன்படுத்தக் கூடாதோ, அப்படி எல்லாம் பயன்படுத்தி இருக்கின்றனர் சில இளைஞர்கள்.
விசில் இன் டீசல் (Whistlin Diesel) யுட்யூப் சேனலைச் சேர்ந்தவர் கோடி டெட்வைலர். இந்த இளைஞரே ஃபெர்ரராரி கார் பிரியர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கவும் வகையில் ஃபெராரி எஃப்8 காரை பயன்படுத்தியவர் ஆவார். இவர்கள் பயன்படுத்தியது 2020 எஃப்8 மாடல் ஆகும்.

முழுமையாக மூன்று ஆண்டுகளைகூட தொடாத, இன்னும் புத்தம் புதிதாக காட்சியளிக்கக் கூடிய இந்த காரையே கடினமான ரைடிற்கு உட்படுத்தி இருக்கின்றனர் விசில் இன் டீசல் யுட்யூப் சேனலைச் சேர்ந்வதர்கள். கோடி டெட்வைலர் கை வசம் எஃப் 8 கார் வந்தபோது அது வெறும் 3,000 மைல்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
பெரிய அளவில் பயன்படுத்தப்படாத வாகனம் எஃப்8 என்பதற்கு சான்றாக இது இருக்கின்றது. மேலும், அது மிக சிறந்த இயக்கநிலையிலும் இருந்திருக்கின்றது. இத்தகைய வாகன கைகளுக்கு வந்தபின்னர் கோடி டெட்வைலர் ஒரு வழி செய்துவிட்டார் என்றே கூறலாம். முதலில் காரின் மீது ஆபாச படங்களை வரைகின்றார்.

பின்னர் ஸ்டாக்கில் உள்ள எக்சாஸ்ட்டை மாற்றிவிட்டு, அதிக இரைச்சலை ஏற்படுத்தக் கூடிய எக்சாஸ்டை அவர் பயன்படுத்தினார். இதுமட்டுமில்லைங்க, அதிக பவர்ஃபுல்லான வாஷரைக் கொண்டு காரின் பெயிண்டையும் சேதப்படுத்தினர். ஃபெராரி காருக்கு மிக பெரிய அழகே அதன் வெளிப்புற தோற்றம்தான். இதை அலங்கோளப்படுத்தும் வகையில் அவர்கள் பல்வேறு செயல்களைச் செய்தனர்.
இந்த பவர்ஃபுல் வாஷரை பயன்படுத்தியதனால் காரின் பெயிண்ட் கடுமையான சேதத்திற்கு ஆளாகியது. இதற்கு முன்னதாக காரின்மீது ஏறி நிற்தல், எகிறி குதித்தல் போன்ற செயல்களையும் அவர்கள் செய்தனர். இதைவிட மிக முக்கியமாக, அதாவது காரை கடுமையாக சேதப்படுத்தும் விதமாக எந்தமாதிரியான சாலைகள் ஃபெராரி எஃப்8 காரை ஓட்ட துளியளவும் தகுதியற்ற சாலையோ அந்தமாதிரியான இடத்தில் வைத்தில் அவர்கள் அக்காரை ஓட்டினர்.

இதனால் இன்னும் பல்வேறு சேதங்களை அந்த வாகனம் சந்தித்தது. இவர்களின் இந்த செயல் ஒட்டுமொத்த ஃபெராரி கார் லவ்வர்களையும் கொந்தளிக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. விரைவில் இவர்கள் ஃபெராரி நிறுவனத்தின் கண்டனத்திற்கு ஆளாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபெராரி போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை பிறர் இழிவுப்படுத்த அனுமதிப்பதில்லை.
அந்த மாதிரியான செயலுக்கு சட்டபடியான நடவடிக்கையை மேற்கொள்ளும். ஆகையால், டெட்வைலருக்கு ஃபெராரி விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபெராரி எஃப்8 பலரின் கவன வாகனமாக இருக்கின்றது. இந்த காரை வாழ்க்கையில் ஒரு முறையாவது ஓட்டிவிட முடியாதா என ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் பலர் உள்ளனர்.
இத்தகைய அரிய வாகனத்தை யுட்யூப் சேனலின் வீடியோவிற்காக இளைஞர்கள் சேதப்படுத்தி இருப்பதே பெருத்த அதிர்ச்சியை கிளப்பி இருக்கின்றது. மேலும், இந்த கார்களை அழிக்கும் அளவிற்கு யுட்யூபில் பணம் கொட்டுகின்றதா என்கிற கேள்வியையும் மக்கள் மனதில் டெட்வைலரின் செயல் எழுப்பி இருக்கின்றது. யுட்யூப் சேனலின் ஃபாலோவர்களைப் பொருத்து வியூவ்ஸ்களின் அடிப்படையில் பணத்தை அள்ளிக் கொடுக்கின்றது.
அந்தவகையில், யுட்யூப் வாயிலாக மாசத்திற்கு பல லட்சங்களை வாங்குபவர்களும் இருக்கின்றனர். டெட்வைலருக்கு ஃபாலோவர்கள் மிக மிக அதிகம். 4.83 மில்லியன் ஃபாலோவர்களை அவர்களது சேனல் கொண்டிருக்கின்றது. மேலும், இந்த ஃபெராரி காரின் வீடியோ வெளியிடப்பட்டு 11 நாட்களே ஆகின்றன. இதற்குள்ளாகவே 5.6 மில்லியன் பார்வையாளர்கள் இவ்வீடியோவை பார்த்துவிட்டனர்.
இவர்கள் கார்களை அலங்கோலப்படுத்துவதில் பெயர்போனவர்கள். இதற்காகவே கார்களை வாங்கி, அதனை அழித்து அவர்கள் வீடியோ போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், சமீபத்தில் வாங்கப்பட்ட மிக அழகிய ஃபெராரி காரே இந்த எஃப்8. டெட்வைலரின் செயலால் அது தற்போது அழகற்ற நிலைக்கு மாறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








